பல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மார்ச், 2013

பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா





திருவள்ளுவன் இலக்குவனார் shared Levinchipuram C Appathurai's status. — at http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-prn1/64135_490792904314411_2146279205_n.jpg.
# பகிர்வில் படித்ததில் பிடித்தது #

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...

சிந்திப்பீர் மனிதர்களே!!!

via Ilayaraja Dentist.


+++++++++++++++++++++++++++++++++++++++++
1. சுவரை என எழுதவும்.2.சிறிய  பல்லிகள் வாணாள் 3 ஆண்டுகள் வரை எனவும் பெரும் பல்லிகள்  வாணாள் 10 ஆண்டு வரை எனவும் கூறப்படுகின்றது. இது போன்ற சில ஐயங்கள் எழுகின்றன. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/











செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி


லண்டன், செப். 5: ஓரிடத்தில் முட்டை போட்டும் மற்றொரு இடத்தில் குட்டி போட்டும் இனவிருத்தி செய்யும் அதிசயவகை பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.÷பல்லி, பாம்பு போன்ற ஊர்வன வகைகளில் குட்டி போடும் வகைகளும் உள்ளன.  முட்டை போடும் வகைகளும் உள்ளன. ஆனால் ஒரே வகை பல்லி இனம் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் முட்டையிடுகிறது. அதுவே குளிர் மிகுந்த மலைப் பிரதேசத்தில் இனவிருத்தியில் ஈடுபடும்போது குட்டி போடுகிறது. இப்படி ஒரே இனம் ஓரிடத்தில் முட்டையும் மற்றொரு இடத்தில் குட்டியும் போடுவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராட்ஸச பல்லி வகை நியூசெüத்வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் முட்டையிடுகிறது. ஆனால் அந்த வகை பல்லிகளே குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில் இனவிருத்தி செய்யும்போது குட்டிபோடுகின்றன. ஐரோப்பிய பல்லி உள்ளிட்ட மேலும் 2 வகை ஊர்வன இனம் இதுபோன்று குட்டியும் முட்டையும் போடும் தன்மை கொண்டவை. உயிரியல்துறை நிபுணர் ஜேம்ஸ் ஸ்ட்வார்ட் நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி சேனலில் இதை விவரித்துள்ளார். அந்தப் பல்லியின் கர்ப்பப் பை அமைப்பு மற்றும் அதில் நிகழும் ரசாயன மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.