நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2013

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமனம்

Comment   ·   print   ·   T+  
உச்ச நீதிமன்ற நீதிபதியாக ச் சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் தற்போது உள்ளார். அதேபோல் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்நிலையில் தற்போது சி.நாகப்பன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது.
வாழ்க்கைக் குறிப்பு:
தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் – வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 அன்று கரூரில் நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நாகப்பன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.யு.சி.யும், மதுரை மதுரா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1974-ம் ஆண்டு பல்கலைக்கழக இறுதித் தேர்வில் மூன்றாமிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். கிரிமினல் சட்டப் படிப்பில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரனின் ஜூனியர் வழக்குரைஞராக சேர்ந்த சி.நாகப்பன், சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.நாகப்பன், பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 27.9.2000 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உள்பட முக்கியமான வழக்குகளில் நீதிபதி நாகப்பன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

திங்கள், 11 மார்ச், 2013

மீன்வள ப் பல்கலையின் முதல் துணைவேந்தராக ப் பாசுகரன் நியமனம்

மீன்வள ப் பல்கலையின் முதல் துணைவேந்தராக ப்  பாசுகரன் நியமனம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பாஸ்கரன் மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
சென்னையில் கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் இயக்குநராக (தொழில்நுட்பம்) பொறுப்பில் உள்ளார், பாஸ்கரன் மணிமாறன். அவர் மூன்று ஆண்டுகள் அல்லது எழுபது வயதை எட்டும் வரையில் துணைவேந்தர் பொறுப்பில் இருப்பார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 9 ஜனவரி, 2013

சென்னைப் பல்கலை - புதிய துணைவேந்தர் நியமனம்


சென்னைப் பல்கலை - புதிய துணைவேந்தர் நியமனம்

 

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தாண்டவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் அண்ணா பல்கைலயின் அரசியல் அறிவியல் மையத் தலைவராக பணியாற்றியவர். துணைவேந்தர் பதவியிலிருந்து திருவாசகம் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பதவி காலியாக இருந்தது.
தற்போது அந்தப் பதவிக்கு தாண்டவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதன், 8 செப்டம்பர், 2010

சாரணர் இயக்க மாநில செயற்குழு உறுப்பினராக அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்வு


சென்னை, செப். 7: சாரணர் இயக்க மாநில செயற்குழு உறுப்பினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இதே பதவிக்கு அம்சா கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த பெ. மயிலவேலனும்  தேர்வாகியுள்ளார். இவர் கிராம மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி மற்றும் கிராம நூலகத்துக்காக இலவசமாக இடம் வழங்கியுள்ளார். மேலும் இவர் 1987-ல் சிறந்த சாரணராக மாநிலத்தின் உயரிய விருதான ஆளுநர் விருதைப் பெற்றுள்ளார்.இதே போல் சாரணர் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

பதவிசார் பணிகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளாகக் கருதலாமா? 
தெளிவுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2010 4:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *