உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா
கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்
ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017
ஆகிய நாளில் நடைபெற உள்ள
உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான

ஆய்வுச் சுருக்கம் அனுப்பும்

இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை

நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர்.
கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும்.

முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :

ஆனி 31, 2048 / சூலை 15, 2017   மாலைக்குள்ளாக

மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ் வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி  நினைவூட்டப்படுகின்றனர்.

  1. இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)
எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction
  1. இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
  2. மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
  3. ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
  4. கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
  5. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
  6. தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
  7. எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
  8. தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
  9. கற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)
  10. எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontology
கணித்தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கப்பெறுகின்றனர்.
மாநாட்டுக் குழுவினர்

cpc2017.wtic@gmail.com