சனி, 7 ஜனவரி, 2017

தமிழ்நிதி விருது வழங்கும் விழா




தமிழ்நிதி விருது  வழங்கும்  விழா


  கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047  செவ்வாய் சனவரி 03, 2017 அன்று   தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
  தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
  தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி,  திருக்குறள், தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்கு ஆற்றும் தொண்டுகளைச்  சிறப்பித்துப் பெரிதும் பாராட்டினார்.
 இலக்கிய வீதி இனியவன் சார்பில் முனைவர்  விசயலட்சுமி இராமசாமி, விருதாளர் புலமையையும்,வித்தகத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.
தி .வே.விசயலட்சுமி ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரை,சிற்றுரை நிகழ்ச்சிகள் நிறைபெற விழா இனிதே முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக