தலைப்பு-எக்காலத்திற்கும் வாழ்வியல் முறை, திருவள்ளுவர், உலோகநாதன் : thalaippu_ekkaalathirkum_eatramurai_valluvar_ulaganathan

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை

நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்

  திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் 1330 பாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் சில,  ஒரு திட்டம் அல்லது பணி அல்லது முயற்சியினை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் எவ்வாறு செயலாற்றிடின் அஃது உச்ச அளவுப் பயனை அளிப்பதாக அமையும் என்பதைத் தெளிவாக விளக்கியுரைப்பவையாக உள்ளன. அதாவது, உச்சகட்டப் பயனை அளிக்கக்கூடிய செயல்பாட்டு முறைகளுக்கான கோட்பாடுகளாக அமைந்துள்ளன.
 முனைவர் பெ.(உ)லோகநாதன், வாழும் வள்ளுவம்  பக். 54, 55