தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்

1909 – நவம்பர் 17
  இன்றைய நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, வாய்மைமேடு ஊரில் பிறந்தவர், இலட்சுமணன். எட்டாம் வகுப்பு படித்த போது, அவரது பெயரை, ‘இலக்குவன்’ எனத், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் மாற்றினார்.
  திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். 1963 இல், மதுரை தியாகராசர் கல்லுாரியில் பணியாற்றிய போது, தொல்காப்பியத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விரிவாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டார். இதற்காக, சென்னை முதல் குமரி வரை, இவருக்குப் பாராட்டு விழாக்கள் நடந்தன!
  தமிழக முதல்வராக அண்ணாதுரை பொறுப்பேற்றபோது, போப்பு ஆண்டவருக்கும், அமெரிக்க நுாலகங்களுக்கும், இந்நுாலை பரிசளித்தார்.
  கருணாநிதி, கி.வேங்கடசுப்ரமணியன், நல்லகண்ணு, க.காளிமுத்து, நா.காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாபு உள்ளிட்டோர், சி.இலக்குவனாரின் மாணவர்களில் சிலர்!
  மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில், எண்ணற்ற நுால்கள் இயற்றியுள்ளார். 1973 செப்., 3 ஆம் நாள் இறந்தார்.
  தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த  நாள் இன்று!
அரிமா இலக்குவனார், தினமலர் ; dinamalar_ithenaalil_ilakkuvanar

தினமலருக்கு நன்றி!

  தினமலரில் ‘இதே நாளில் அன்று’ என்னும் தலைப்பில் தலைவர்கள், அறிஞர்கள் முதலானவர்கள்  பிறந்தநாள், நினைவு நாள் குறிப்புகள். வருகின்றன. இதில்  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பு விடுபட்டிருந்தது. செம்மொழிம நாட்டைப்பற்றிய 100 தமிழறிஞர்கள்பற்றிய கட்டுரைகளில் பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனார்பற்றிய  கட்டுரையும் ஒன்று.  எனினும் வரலாற்றுக்குறிப்பு போன்ற இப்பகுதியில் விடுபட்டிருந்ததைக் குறிப்பிட்டுத் தினமலருக்கு ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் மடல் அனுப்பியிருந்தோம்.  ஒரு வரி குறிப்பாக இல்லாமல் சிறுகட்டுரையாகவே ‘தினமலர்’  வெளியிட்டுள்ளது.
 தினமலருக்கு நன்றியும் பாராட்டும்!
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,
ஒருங்கிணைப்பாளர்,
இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை 600 091