ஞாயிறு, 27 மார்ச், 2016

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)




சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)

திருசூலம்-திரிசூலம் :thirisuulam_uur_thirusuulam

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்?

தோப்பு

  மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன.
சுரம்
சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது.
அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum
சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) :
தமிழகம் ஊரும் பேரும்
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக