வியாழன், 21 ஜனவரி, 2016

பொது நூலகங்களுக்கு மாதிரி நூல்களைக் கருதுகைக்கு அனுப்பலாம்



பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல்: மாதிரி நூல்களைக் கருதுகைக்கு அனுப்பலாம்


தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2015ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ் / ஆங்கிலம் நூல்கள் வாங்க பதிப்பாளர்கள் / விற்பனையாளர்களிடமிருந்து மாதிரி நூல்கள்  கருதுகைக்காக வரவேற்கப்படுகின்றன.  கருதுகைக்குப் பெறப்படும் எல்லா நூல்களையும் வாங்குவதற்கில்லை. அரசினால் அமைக்கப்பட்ட நூல் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படாத நூல்கள் தேர்வு செய்யப்படாமைக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படமாட்டாது.

2015 ஆம் ஆண்டு பதிப்பான தமிழ் / ஆங்கிலம் நூல்கள் மட்டுமே  கருதுகைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிற ஆண்டு நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாதிரி நூல்கள் ஏ, பி, மற்றும் சி (குறுந்தகட்டுடன்) படிவங்களுடன் 4.02.2016-க்குள் பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை 600 002என்ற முகவரியில் பெறப்படும்படி அனுப்பி வைக்க வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம்- நூல்கள்  அளிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் www.connemarapubliclibrarychennai.com   என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

[பி.கு. : இவ்வாறு செய்தித்துறையின் அறிவிப்பு இருந்தாலும் இன்னும் கன்னிமாரா பொதுநூலகத்தளத்தில் தகவல் இல்லை. பிறகு பார்க்கவும்.]
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக