51watertheft-vaariyakinaru
தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில் உள்ள வாழைத்தோப்புகள், தக்காளிச்செடிகள் நிறைந்த தோப்புகளுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இதற்குரிய தொகையை எவ்வி இயக்கியர்(pump operator), ஊராட்சிச் செயலர் ஆகிய இருவரும் பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அரசிற்கு மின்சாரக்கட்டணம் வீணாவதுடன் குடிதண்ணீரும் வீணாகிறது. எனவே தனியாருக்குத் தண்ணீரை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
51_vaigaianeesu