51.silvarpattikanmaay
  தேனிப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன.
  அவற்றில் இயற்கையாகப் பெய்த மழையாலும் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை போன்றவை திறக்கப்பட்டமையாலும் குளங்கள் நிரம்பி வருகின்றன.
இப்போது ஒவ்வோர் ஊராட்சியிலும் குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். மீன்கள் வெளியே சென்றுவிடாமல் தடுக்க இரவு பகலாகக் குளங்களில் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் குளம் முற்றிலும் நிரம்பிய பிறகுதான் உழவிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால் சில ஊராட்சித்தலைவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, இரவோடு இரவாக மீன் வளர்ப்பதற்காகக் குளங்களைத் திறந்துவிடுகின்றனர். இதனால் குளத்தில் உள்ள நீர் குறைந்துவருகிறது.
இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கிணறுகள், நீர் ஊற்றுக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே பொதுப்பணித்துறையினர் குளம் நிறைந்த பிறகே குளங்களில் மடைகள் திறக்கவேண்டும் என வேளாண்பெருமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
51_vaigaianeesu