புதன், 2 ஏப்ரல், 2014

மூவர் விடுதலை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

இராசீவு  கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மூவர் விடுதலை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

இராசீவு கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை நீக்கியதற்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம்  நீக்கி வைத்தது.

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
இதற்கு எதிராகப் பல்வேறு காரணங்களைக் கூறி மத்திய அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் பதிந்தது.

இதனை  உசாவி வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை மிகவும் கவனமாக  ஆய்வுசெய்ததாகவும்  அந்த மனுவில் சரியான காரணங்கள் ஏதும் இல்லதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
 தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து மூவரையும் விடுதலை செய்யும்!  விடுதலை ஆகப் போகும் மூவருக்கும்  நடுநிலையோடு நல்ல தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கும் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக