திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன்
பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு)
தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற
பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இருநாள் நடைபெற்றது.
முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி
முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பாரதிதாசன்
பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார்.
பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன்
மையப்பொருளுரையாற்றினார். தமிழ்நாடு தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். உத்தமமத்தின்
இந்தியக்கிளைத்தலைவர்முனைவர் மணி.மு.மணிவண்ணன் சிறப்புரையாற்றினார்.
கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு.கண்ணன் நன்றி
நவின்றார். மற்றொரு உதவிப் பேராசிரியர் முனைவர் அன்பானந்தன்
தொகுப்புரை வழங்கினார். இக்கல்லூரியின் தமிழ்த்துறையிலுள்ள மூவரும்
கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மூன்று முத்துகள் எனப் போற்றப்படும்
வகையில் சிறப்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தி அனைவர்
பாராட்டைமயும் பெற்றனர்.
பிற்பகல் முதல் அமர்வு, அகரமுதல இணைய இதழ் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வாளர் சாசுலின் பிரிசில்பா, சந்தி இலக்கணம் – கல்வி மென்பொருள் என்பது குறித்தும் ஆய்வாளர் ப.செந்தில்குமார் இணையப்
பயன்பாட்டில் கையடக்கக் கணிமை குறித்தும் முனைவர் தே.சந்திரகுமாரி இணையக்
குறும்படங்களில் விழிப்புணர்வுச் சிந்தனைகள் குறித்தும் முனைவர் காவேரி தமிழ்த்தேடுபொறிகள் குறித்தும் மாணாக்கர் பிரபு இணையத்தால் இணைவோம் என்றும் கட்டுரை அளித்து உரையாற்றினர். நிறைவாக
இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இலக்கியக் கல்விக்கழகத்தின் சீர்மையற்ற
தேடு பொறிகள் குறித்து விளக்கினார். பன்னாட்டுக் கருத்தரங்க ஏற்பாட்டாளர்
முனைவர் துரை மணிகண்டன், இக்கட்டுரையை மாநாட்டின் பரிந்துரையாக அரசிற்கு அனுப்பி ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இரண்டாம் நாள் (28.03.14) காலை அமர்வு இலக்குவனார் திருவள்ளுவன் தலைைமையில் தொடங்கியது. முனைவர் பெ. முருகானந்தம், முனைவர் செல்வராசு, ஆய்வாளர் இரகுநாதன் ஆகியோர் கட்டுரைகளை வழங்கி உரையாற்றினர்.
இரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு முனைவர் பத்ரி தலைைமையில் நடைபெற்றது.
அடுத்த அமர்வில் முனைவர் விசயா தலைமையில் முனைவர் சரண்யா, முனைவர் இரா.குணசீலன், முனைவர் சானகிராமன், முனைவர் இரா.குணசீலன் முனைவர் அண்ணாகண்ணன் ஆகியோர் கட்டுரைகள் அளித்தனர்.
மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முனைவர் பத்ரி நிறைவுரையும் முனைவர் துரை மணிகண்டன் நன்றியுரையும் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக