செய்திக்குறிப்புகள் சில : அகரமுதல இதழ் 18
மும்பையில்,
1 உரூபாய்க்கு 1 புதுப்படி(இலிட்டர்) நீர் தரும் எந்நரேமும் இயங்கும்
நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத்
தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை
அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர் பெறலாம்..
சொகுசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற
தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள்
இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில்
இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள்
இவற்றுடன்தான் விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு
திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்க ஏற்பாடு
நடைபெற்று வருகிறது என அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்
மேலவை உறுப்பினருமான சி.ஆர். இலட்சுமிகாந்தன் தெரிவித்தார்.
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கையான பாரதி கண்ணம்மா (53)
போட்டியிடுகிறார். பொருளியலில் இளங்கலை, மன்பதையியலில் முதுகலை, கணினி
அறிவியலில் பட்டயம் பெற்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வளப் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ஐ.நா வழங்கிவரும் தண்ணீர்
விருதிற்கு, இந்த ஆண்டு இந்தியாவின் டாட்டா தண்ணீர்க் கொள்கைத்
திட்டத்தின், பன்னாட்டு நீர் மேலாண் நிறுவனமும், சிங்கப்பூர் தண்ணீர்த்
திட்ட அமைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக