தி.க. பொருளாளர் சாமிதுரை மறைவு
திராவிடர் கழகத்தின் பொருளாளர் கோ. சாமிதுரை (81) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த அவர் படிக்கும்
காலத்திலேயே திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.
வழக்குரைஞரான சாமிதுரை திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை
வகித்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது
உடல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சனிக்கிழமை பிற்பகல் வரை
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சார்பில் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் ஏ. சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி
செலுத்தினார்.
சாமிதுரையின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) காலை 10 மணிக்கு நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக