வெள்ளி, 26 ஜூலை, 2013

சோம்பேறித்தனத்தைத் துரத்தி அடித்தேன்!

சோம்பேறித்தனத்தை  த் துரத்தி அடித்தேன்!


வெளிநாட்டு நிறு வனங்களுக்கு, இந்திய உணவுகள் பற்றி ஆலோசனை வழங்கி, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும், பிங்கி லிலானி: நான், கோல்கட்டாவின் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன். அப்பா, சாப்பாட்டு பிரியர் என்பதால், அம்மா விதவிதமாக சமைப்பார். திருமணம் ஆனதும், கணவரின் வேலை நிமித்தம், இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தேன். எனக்கு சமைக்க தெரியாது என்பதால், சமைக்க ஆள் வைத்திருந்தேன். ஒரு முறை, மூத்த மகன் பள்ளி முடிந்து திரும்பியதும், "அம்மா, என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் இந்திய உணவுகள் பிடிக்குமாம்; நீங்க எந்த டிஷ் நல்லா செய்வீங்கன்னு கேக்குறாங்க; நம் தெருவில் உள்ள பள்ளியில், இந்திய சமையலை சொல்லி தர ஆசிரியர் தேவையாம்; உங்களுக்கு சமைக்க தெரிந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்' என, சற்று ஏக்கத்துடன் கேட்டான்.
உடனே எனக்குள், சமைக்க தெரியாத குற்ற உணர்வு ஏற்பட்டது. எனக்குள் இருந்த சோம்பேறித்தனத்தை துரத்தி அடித்து, தொலைபேசியில் அம்மாவிடம் பேசி, இந்திய சமையலை கற்றுக் கொண்டேன். மகன் கேட்டு விட்டானே என்ற ஆர்வத்தில், புதிது புதிதாய் சமைக்க ஆரம்பித்தேன். "வாவ்... சூப்பர் மா' என, என் சமையலை மகன் பாராட்டியது, தன்னம்பிக்கையை அதிகரித்தது. மகன் சொல்லியவாறே, அந்த பள்ளிக்கும் இந்திய சமையலை சொல்லி தரும் அளவிற்கு முன்னேறினேன். சில நாட்களுக்கு பின், இங்கிலாந்தின் சிறந்த உணவு தயாரிப்பு நிறுவனமான ஷேர்வுட்க்கு, "இந்திய குக்கிங் கன்சல்ட்டன்ட்'டாக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இந்திய உணவு மற்றும் மசாலாக்கள் பற்றி, இங்கிலாந்து மக்களும் தெரிந்து கொள்ள, "ஸ்பைஸ் மேஜிக்' என்ற சமையல் புத்தகத்தை வெளியிட்டு பிரபலம் அடைந்தேன். அதனால், அப்பெயரிலேயே இந்திய உணவுகள் பற்றிய ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை, சிறிய அளவில் ஆரம்பித்தேன். ஆனால் இன்று, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அள விற்கு முன்னேறி உள்ளேன். மற்றவர் கை தூக்கி விட காத்திருக்காமல், திறமைகளை அறிந்து, நாமே முட்டி மோதி முன்னேறுவதே சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக