வியாழன், 2 பிப்ரவரி, 2012

T.B.can be cured by continous treatment:தொடர் சிகிச்சையால் குணப்படுத்தலாம்!

 சொல்கிறார்கள்



சமூக நல மருத்துவர் ரம்யா அனந்தகிருஷ்ணன்: இந்தியாவில், 40 சதவீதம் மக்களுக்கு காசநோய்த் தொற்று, அவர்களின் உடலுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால், இந்தத் தொற்று, எப்போது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அப்போது, காசநோயாக மாறிவிடும். சர்க்கரை நோய் உடையவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தான உணவைச் சாப்பிடாதவர்கள் போன் றோருக்கு, காசநோய்க் கிருமி பாதிப்பை ஏற்படுத்துகிறது. காசநோய் பெரும்பாலும், நுரையீரலில் தோன்றுகிறது. இவர்களின் சளியைப் பரிசோதனை செய்தால், அதில் காசநோய்க் கிருமி இருக்கும். ஒரு சிலருக்கு, கழுத்தில் கட்டி போன்றும், எலும்புகள், மூளை நரம்புகளில் காசநோய் தோன்றலாம். நுரையீரல் பாதிக் கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், பக்கத்தில் இருப்பவர்களுக்கும், காற்றில் அந்தத் தொற்று பரவும். காசநோய் என்பது, 100 சதவீதம் குணப்படுத்தக்கூடிய நோய் தான். ஆறு மாதம் தொடர் சிகிச்சையின் மூலம், ஒருவரை காசநோயிலிருந்து குணப்படுத்திவிட முடியும். ஒருவருக்கு, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருமல், மாலை நேரங்களில் காய்ச்சல், பசி யின்மை, எடை குறைதல் மற்றும் நெஞ்சு வலி தோன்றினால், கட் டாயம் அவர்களது சளியைப் பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய் பரம்பரையாய் வருவதல்ல. ஆனால், காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால், நம்மையும், நம்மைச் சுற்றி இருப்போரையும் நாம் தற்காத்துக் கொள்ள, உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக