திங்கள், 7 டிசம்பர், 2009

சிரிக்​கும் குரு​வி​கள்!



சிரிக் ​கும் குழந்​தையை தெரி​யும்,​ ஆனால்,​ சிரிக்​கும் குரு​வி​யைத் தெரி​யுமா?​ பறவை ஆராய்ச்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நீல​கி​ரி​யி​லுள்ள ஒரு சில​ருக்​கும் மட்​டுமே தெரிந்​தி​ருக்​கும் இந்த அபூர்வ பறவை பற்றி. இது​கு​றித்து ஆராய்ச்சி செய்த உதகை அரசு கலைக் கல்​லூரி வன உயி​ரி​யல் பாடப்​பி​ரிவு மாண​வர் பி.நவ​நீ​தன் அதற்​காக தங்​கப் பதக்​க​மும் பெற்​றுள்​ளார்.மாநி​லத்​தி​லேயே வன உயி​ரி​யல் பாடத்​தில் தங்​கப்​ப​தக்​கம் பெற்ற ஒரே மாண​வர் இவர் மட்​டுமே என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.இப் பறவை பற்றி நவ​நீ​த​னி​டம் கேட்​ட​போது,​ ""பொது​வாக Laughing​Thrush​ என​வும்,​ தமி​ழில் சிரிக்​கும் குருவி என​வும் அழைக்​கப்​ப​டும் இந்​தக் குருவி மேற்​குத் தொடர்ச்சி மலைத்​தொ​ட​ரில் மட்​டுமே காணப்​ப​டும் 16 வகை​யான அபூர்வ பற​வை​யி​னங்​க​ளில் ஒன்​றா​கும். அதில் உல​கி​லேயே நீல​கிரி உயிர்ச்​சூ​ழல் மண்​ட​லத்​தில் மட்​டுமே காணப்​ப​டும் இந்த சிரிக்​கும் குருவி "நீல​கிரி சிரிக்​கும் குருவி" என அழைக்​கப்​ப​டு​கி​றது. இக்​கு​ருவி சப்​த​ மி​டும்​போது குழந்தை சிரிப்​ப​தைப் போலவே இருக்​கும். அத​னால்​தான் இதை சிரிக்​கும் குருவி என அழைக்​கின்​ற​னர்'' என்​றார்.நீல​கி​ரி​யில் அழிந்​து​வ​ரும் பற​வை​க​ளின் பட்​டிய​லில் முத​லி​டம் பெற்​றுள்ள இந்த சிரிக்​கும் குரு​வி​யைக் குறித்து உதகை அரசு கலைக் கல்​லூ​ரி​யில் வன உயி​ரி​யல் மாண​வர் பி.நவ​நீ​தன் ஆராய்ச்சி செய்​துள்​ளார். சாதா​ரண விவ​சா​யக் குடும்​பத்தை சேர்ந்த நவ​நீ​தன் நீல​கிரி மாவட்ட வனத்​து​றை​யி​ன​ரின் அனு​ம​தி​யோ​டும்,​ டபிள்யு டபிள்யு எப் அமைப்​பி​ன​ரின் ஒத்​து​ழைப்​பு​ட​னும்,​ சலீம் அலி பற​வை​கள் ஆராய்ச்சி மையத்​தின் ஆலோ​ச​னை​க​ளு​ட​னும் இந்த ஆய்வை முடித்​துள்​ளார்.""இந்த ஆய்​வில் சிரிக்​கும் குரு​வி​யைக் குறித்த பல்​வேறு விவ​ரங்​கள் தெரிய வந்​துள்​ளன. பொது​வாக ஜோடி​யா​கவே காணப்​ப​டும் இந்​தக் குருவி மக்​கள் நட​மாட்​ட​மில்​லாத சோலைப் பகு​தி​க​ளில் மட்​டுமே வசிக்​கும். ஜன​வரி முதல் மார்ச் மாதம் வரையே இவற்​றைக் காண முடி​யும். சிறிய பூச்​சி​க​ளை​யும்,​ வனத்​தில் கிடைக்​கும் பழங்​க​ளை​யும் உண்​ணும். இதன் கூடு​கள் தரை​மட்​டத்தி​லி​ருந்து சுமார் 10 மீட்​டர் உய​ரத்​தில் இருக்​கும். இந்​தக் கூட்​டைக் கட்டி அதில் முட்​டை​யிட்டு இனப்​பெ​ருக்​கம் செய்​த​வு​டன் உட​ன​டி​யாக அந்​தக் கூட்டை கலைத்​து​வி​டும் பழக்​கத்​தைக் கொண்ட இந்த குரு​வி​கள்,​ அடுத்த ஆண்​டி​லும் அதே இடத்​தில்​தான் கூடு கட்​டும்!​ கடல் மட்​டத்தி​லி​ருந்து 1200 மீட்​டர் முதல் 2600 மீட்​டர் உய​ரம் வரை மட்​டுமே இத்​த​கைய குரு​வி​கள் காணப்​ப​டும். நீல​கி​ரி​யில் காணப்​ப​டும் சிரிக்​கும் குரு​வி​கள் நீல​கிரி சிரிக்​கும் குருவி என அழைக்​கப்​ப​டு​வ​தைப் போல,​ மல​பார் பகு​தி​யில் காணப்​ப​டும் குரு​வி​கள் மல​பார் சிரிக்​கும் குருவி என​வும்,​ வய​நாடு பகு​தி​யில் காணப்​ப​டும் குரு​வி​கள் வய​நாடு சிரிக்​கும் குரு​வி​கள் என​வும் அழைக்​கப்​ப​டு​கின்​றன. குரல் ஒரே மாதி​ரி​யாக இருந்​தா​லும்,​ மேற்​பு​றத் தோற்​றத்​தில் சிறிய மாற்​றங்​கள் இருக்​கும். அதை பறவை ஆராய்ச்​சி​யா​ளர்​க​ளால் மட்​டுமே உணர முடி​யும்.'' தன் ஆய்​வில் கண்​டெ​டுத்த தக​வல்​களை நம்​ மி​டம் பகிர்ந்து கொண்​டார்.கடந்த 2 ஆண்​டு​க​ளாக இந்த ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்​டுள்ள நவ​நீ​தன்,​ தனது பிரச்​னை​களை வெளிக்​காட்​டிக் கொள்​ளா​மல் இந்த ஆய்​வினை வெற்​றி​க​ர​மாக முடித்​துள்​ள​தோடு தங்​கப் பதக்​க​மும் வென்​றுள்​ளார். கடந்த 24ம் தேதி கோவை பார​தி​யார் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தமி​ழக ஆளு​நர் சுர்​ஜித்​சிங் பர்​னாலா நவ​நீ​த​னுக்கு தங்​கப் பதக்​கத்தை வழங்​கி​னார். தனக்கு கிடைத்​துள்ள அனு​ப​வங்​களை வைத்து பல்​வேறு சிர​மங்​க​ளுக்கு இடை​யில் இந்த ஆய்வை முடித்​தி​ருக்​கும் இவர்,​ விரை​வில் பற​வை​க​ளைக் குறித்து பி.எச்டி. படிக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளார்.​-​ஏ.பாட்​ரிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக