வெள்ளி, 17 ஜூலை, 2009

திருக்கோவிலூரில்
கபிலர் விழா
இன்று தொடக்கம்



திருக்கோவிலூர், ஜூலை 16: திருக்கோவிலூரில் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) துவங்கும் கபிலர் விழா தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறுகிறது.விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மேலும் கபிலர் குன்று வழிபாடு, சமய உலா, அறிஞர் உலா, பரிசு நிலா, நாட்டிய நிலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.2-ம் நாள் நிகழ்ச்சியில் (சனிக்கிழமை) சென்னை தமிழ் இசைச்சங்க இசைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மங்கள இசை, ஆன்மிக இசை, சீர்காழி மூவர் இசை, நாகசுர இசை, தமிழ் இசை, திருமுறை இசை மற்றும் நாட்டிய அரங்கமும் நடைபெறுகிறது.தினமணி ஆசிரியர் பங்கேற்பு3-ம் நாள் நிகழ்ச்சியில் (ஞாயிற்றுக்கிழமை) "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமையில் பாராட்டு மன்றம் நடைபெறுகிறது. மேலும் சேலம் காயத்ரி வெங்கடேசன் குழுவினரின் இன்னிசை மன்றம், பத்மஸ்ரீ டாக்டர் கதிரி கோபால்நாத் குழுவினரின் இசை மன்றமும் நடைபெறுகிறது.4-ம் நாள் நிகழ்ச்சியில் (திங்கள்கிழமை) சென்னை திருவாசகச் செந்நாவலர் பா.சற்குருநாதன் குழுவினரின் சிற்றம்பல மேடை-திருமுறை இசை மற்றும் "நம் சமயத்தின் பெருமையை உணராத நாமே குற்றவாளிகள்' என்ற தலைப்பில் வழக்காடு மேடை நிகழ்ச்சியும், ஒன்றியப் பெருந்தலைவர் அலமேலு சின்னதுரை தலைமையில் வேளாண் மேடை நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ம் நிகழ்ச்சியில் (செவ்வாய்க்கிழமை) "அரசும் சமயமும்' என்ற தலைப்பில் ஆய்வு அரங்கமும், மனித முன்னேற்றத்திற்கு தேவை தன்னம்பிக்கையா? கடவுள் நம்பிக்கையா? என்ற தலைப்பில் சொல்லாடரங்கமும் நடைபெறுகிறது.
கருத்துக்கள்

விழா சிறப்புற வாழ்த்துகள்! இதுபோல் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு சங்கப் புலவருக்கு விழா எடுத்துப் பழந்தமிழ்ப் பண்பாட்டை மக்களிடையே பரப்ப வேண்டும். அரசும் இதற்குத் துணை புரிய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 4:01:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக