வெள்ளி, 17 ஜூலை, 2009

133 அடி நீளத் தாளில் 133 மாணாக்கர்கள் 1330 திருக்குறள் எழுதிச் சாதனை



காரைக்குடி தமிழ் திருவிழா : 133 அடி நீள காகிதத்தில் திருக்குறள்!

ஜூலை 16,2009,09:24 IST





காரைக்குடி : காரைக்குடி பள்ளியில் நடந்த தமிழ் திருவிழாவில் 133 அடி நீள காகிதத்தில் பத்து நிமிடத்தில் 133 மாணவர்கள் திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளனர். காரைக்குடி சகாயமாதா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் தமிழ் திருவிழா நடந்தது. பள்ளியின் தாளாளர் பவுலின் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மங்களமேரி வரவேற்றார். காரைக்குடி எஸ்.எம்.எஸ்., மகளிர் பள்ளி ஆசிரியர் கியூன்மேரி, ராஜராஜன் கல்வியியல் கல்லூரி பேராசிரியை சரஸ்வதி பங்கேற்றனர். ஐந்து முதல் பிளஸ்1 வகுப்பு வரை படிக்கும் 133 மாணவ, மாணவிகள், 133 அடி நீள பேப்பரில், பத்து நிமிடத்தில் ஆயிரத்து 130 திருக்குறளை எழுதினர்.



மாணவர்கள் ஜீவனா, மோகனா, முத்துபழனி, ஜெனித் ஆகியோர் சாக்லேட் பேப்பரில் தலா ஒரு திருக்குறள் வீதம் 1,330 திருக்குறளை எழுதினர். தமிழ் கோபுரம் என்ற தலைப்பில் இப்பள்ளி ஓவிய ஆசிரியர் பார்த்திபன் அட்டையால் கோயில், சர்ச், மசூதி அமைத்தார். அந்த அட்டையின் பக்கவாட்டில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபாலில் உள்ள திருக்குறளை எழுதியுள்ளார்.



இந்த அட்டை கோபுரத்தின் மேல்புறத்தில் இருந்து கீழே பார்த்தால் அனைத்து குறள்களும் எளிதில் படிக்கும் வகையில் கண்ணுக்கு புலப்படும். இந்த தமிழ்கோபுரத்தை உருவாக்க ஓவிய ஆசிரியர் பார்த்திபன் ஒரு மாத காலம் செலவழித்துள்ளார். மாணவர்களும், ஆசிரியரும் கவுரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக