sreetharan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sreetharan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மே, 2012

வைகோவுடன் இலங்கை நா.உ. சந்திப்பு

வைகோவுடன் இலங்கை எம்பி சந்திப்பு

First Published : 22 May 2012 05:39:49 PM IST


சென்னை,மே.22: மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் இலங்கை எம்பி ஸ்ரீதரன் இன்று காலை சந்தித்துப் பேசினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை இன்று காலை 11.00 மணிக்கு சந்தித்தனர்.யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.தாய்த் தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.