அயல் எழுத்து அகற்று! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
அயல் எழுத்து அகற்று!
ஓர் இனம் என்றும் வாழ
அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து
சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே,
எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு
இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப்
பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு மொழி
பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது. இன்றைய
இந்தியாவையும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் உள்ள பகுதிகளையும் நாம்
தமிழ்த்துணைக்கண்டம் என்று சொல்லலாம். தமிழ்த்துணைக்கண்டம் முழுவதும் ஒரு
காலத்தில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழி, எதனால் தான் வழங்கி வந்த நிலப்பரப்பில்
குறைந்து போனது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்களில் ஒரு
பகுதியினர், சோம்பலினாலும் பிறவற்றாலும் சொற்களைச் சிதைத்துப் பேசி, அவ்வாறு
பேசுவதற்கேற்ப வரி வடிவத்தை அமைத்து, பண்பட்ட செவ்வையான ஒலி வடிவும் வரிவடிவும்
தமிழுக்கு இருப்பினும் அதைக் குறையுடையதாகக் கருதி, புதிய வரி வடிவங்களுக்கு இடம்
கொடுத்ததாலும் அவற்றையே பயன்படுத்திப் புது மொழியாளராக மாறியமையாலும்
தமிழ்ப்பரப்பு குறைந்தது. இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் மேலும் தமிழைச்
சிதைத்துக் கொண்டு உள்ளோம்.
தமிழ் மொழி தான்
வழங்கப்படாத பகுதிகளுக்குச் சென்று அங்கே அது புதிய மொழியாக உருப் பெற்றால் நாம்
மகிழ்ச்சி அடையலாம். ஆனால், தான் பயன்படும் பகுதியில் செல்வாக்கு இழந்து புது
மொழியாக உருப் பெறுவதையும் அப்புது மொழியாளர்கள் புது இனத்தவராக மாறி நமக்கு
எதிராகவே செயல்படுவதையும் நாம் இழுக்காகவே கருத வேண்டும். எனவே, இனியேனும் அத்தகைய
நிலை வராமல் இருக்க நாம் எழுத்துச் சிதைவைத்தடுத்து மொழித்தூய்மையைப் பேண
வேண்டும்.
எழுத்து மாற்றம் மொழி மாற்றமாக மாறியுள்ளமைக்குச் சில சான்று
பார்ப்போம்.
ஒரியா மொழி:
நகர் > நொகர்
இரத்தம் > ரொக்தொ
சக்கரம் > சொக்ரொ
உத்தமம் > உத்தொம்
மல்லன் > மொல்லொ
ஈசுவரன் > ஈஃச்பொர்
(ஈதலைச் சுரப்பவன் ஈசுவரன் : தமிழ்ப் பெயரே)
அம்மா > மா
அப்பா > பா பா
குமாரி > குமாரீ
வாரம் > பார்
பனி > பாணி
ஒட்டகம் > ஒட்
குயில் > கோஇலி
நீலம் > நீள்
குசராத்தி:
பழம் > பள்
தரப்பு > தரப்
பேரிகை > பேரீ
தழை > தள்
நடிகன் > நட்
சுண்ணாம்பு > சூநோ
பூசை > பூஃயா(பூஜா)
அரத்தினம் > ரத்ந
ஈசுவர் > ஈஃச்வர்
கண்டம் >
கண்ட
காது > காந்
அப்பா > பாப்
மாமா > மாமா
மாமி > மாமீ
பாலகி > பாலகீ
வாரம் > வார்
சித்திரம் > சித்ர
சித்திரக்காரர்>
சித்ரகார்
தாழ்ப்பாள் >
தாளு
பாத்து (உணவு) >
பாத்
முள்ளங்கி > மூளா
தூதன் > தூத்
காவியம் > காவ்ய
வங்காளம்:
சங்கு >
ஃசங்க்ஃக(ஸங்க்ஹ)
ஞானம் >
ஃய்ஞாந்(ஜ்ஞாந்)
மந்தம் > மந்த்ஃகர்
கம்பளி > கம்பல்
கற்பனை > கல்பநா
மந்திரி > மந்த்ரீ
சங்கம் >
ஃசங்கஃக(ஸங்கஹ)
அம்மா > மா
அப்பா > பாபா
மாமா > மாமா
மாமி > மாமீமா
கபாலம் > கபால்
முகம் >
முக்ஃக்(முக்ஹ்
இது > இஃகா
தாடி > தாறி
நகம் >நக்ஃக்
இரத்தம் > ரக்த
சமதளம் > ஃசமதல்
தாழ்ப்பாள் > தாலா
பாத்து > ப்ஃகாத்
சலம்> ஃயல்(ஜல்)
மராத்தி:
நாவாய் > நவ்
சித்திரம் > சித்ர
கிஞ்சித்து >
கிஞ்சிட்
அத்தை > அத்ய
மாமி > மாமீ
செவ்வந்தி >
செவந்தி
பூ > பூல்
சூரியன் > சூர்ய
பல்லி > பல்
பனி>பாநி
கன்னடம்:
பள்ளி > ஃகள்ளி
பாடு> ஃகாடு
எதிர் > எதிரு
ஓலைக்காரன் > ஓலகார
செலவு > கெலவு
அப்பன்>அப்ப
அம்மை>அம்ம
ஐயன்>அய்ய
ஔவை>அவ்வெ
தந்தை>தந்தெ,
தாய்>தாயி
அண்ணன்>அண்ண
அக்கா>அக்க
தம்பி>தம்ம
தங்கை>தங்கி
மாமன்>மாவ
அத்தை >அத்தெ
மலையாளம்:
தலை> தலை
முகம்> முகம்
கண்> கண்ணு
மூக்கு> மூக்கு
மீசை> மீச்ச
நெற்றி> நெத்தி
வாய்> வாயா
பல் > பல்லு
நாக்கு> நாக்கு
காது >காது
கழுத்து> கழத்து
கை >கை
விரல் >வெரல்லு
புத்தகம் >
புஃச்தகம்
மனிதக்
குரங்கு> மனுஃடகுரங்கு( மனுஷகுரங்கு)
தெலுங்கு:
அண்ணன் >அன்ன
அக்கா> அக்க
தாத்தா >தாதா
மாமனார் >மாமகாரு
அத்தை >அத்தகாரு
குடும்பம்
>குடும்பமு
வாரம்> வாரமு
இடம்> எடமு
பக்கம் > ப்ரக்க
விலை > வெல
புகை > பொக
உடல் > ஒடலு
முனை > மொன
உரை > ஒர
பொம்மை > பொம்ம
உவமை > உவம
குப்பை > குப்ப
கோழி > கோடி
மேழி > மேடி.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றி : இதனை வெளியிட்ட/பதிந்த/பகிர்ந்த
தினமணி 03.08.2013
thiru-padaippugal படைப்புகள் 29.12.2010
மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் சங்கம் MBHCAA
மடலாடல் குழுக்கள்
முகநூல் குழுக்கள்
அகரமுதல 24.08.2014
வலைப்பூக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக