header-kaviriurimiameetpukuzhu_thalaippu

புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015

azhai-panangudimutrukai01

அன்பான தோழர்களுக்கு வணக்கம்!
  தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும்.
  அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது!
காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28 அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மிகப்பெரும் போராட்டம் ஒன்று நடைபெறுகின்றது.
  “காவிரி உரிமையைப் பாதுகாக்காத இந்திய அரசே! காவிரிப் படுகையிலிருந்து கிடைக்கும் எரிநெய்யை(பெட்ரோலை) எடுக்காதே!” என்ற முழக்கத்தை முன்வைத்து, நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள இந்திய அரசின் எரிநெய்(பெட்ரோலிய) ஆலையை உழவர்களும் பொது மக்களும் எனப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு முற்றுகையிடுகின்றோம்.
  இப்போராட்டத்தில், தங்கள் அமைப்பின் சார்பில் தாங்களும் தங்கள் தோழர்களும் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்!
  சென்னையிலிருந்து போராட்டத்திற்குச் செல்ல, பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு சென்று வரவும், ஒரு வேளை உணவும் சேர்த்த கட்டணமாக உரூபாய் 600 வரையறுத்துள்ளோம்.
  தாங்கள் வர இயலும் என்றால் போராட்டத்தில் பங்கெடுக்கவும், வர இயலாது எனில் கட்டணம் வழங்கிப் பிறர் வருவதற்கு உதவி செய்ய வேண்டுமெனவும் அன்புரிமையுடன் வேண்டுகிறேன்!
kaveri-notice
தோழமையுடன்,
ka.arunabharathi4
க. அருணபாரதி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச : 76670 77075, 9841949462