53thenimap

தேனி மாவட்டத்தில் முடங்கிப்போன அரசுத்துறை அலுவலகங்கள்

தேனிமாவட்டத்தில் கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக அரசு அலுவலகங்கள் முடங்கிப்போனதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
53theni_colloectorate
தேவதானப்பட்டி பகுதியில் உள்ள வருவாய்த்துறை, ஊர் நிருவாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை என அனைத்து அலுவலகங்களிலும் அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தீபாவளியை ஒட்டி அரசு விடுமுறைகள் வாரத்தில் இடையில் வந்ததால் அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக விடுமுறைபோட்டுவிட்டுத் தங்கள் சொந்தப் பணிக்குச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் தீபாவளி முடிந்த பின்னரும் மொகரம் முதலான பல பண்டிகைகள் வாரத்தின் இடையில் வந்ததால் அரசு அதிகாரிகள் அலுலகத்திற்கு வருவது இல்லை.
53theni_s.p.office
 கையெழுத்து வாங்கப் பொதுமக்கள் சென்றால் முகாம் சென்றுள்ளதாக விடை தருகிறார்கள். ஆனால் தேவதானப்பட்டிப் பகுதியில் எந்த ஒருமுகாமும் தீபாவளிக்குப் பின்பு நடைபெறவில்லை.
இதே போல உழவர்கள் தங்கள் நிலங்களில் வெள்ளச்சேதம், பயிர்அழுகல், வேளாண்மை தொடர்பான கேள்விகள் கேட்கச்சென்றாலும் அதிகாரிகள் இருப்பது இல்லை. மேலும் வெள்ளநிவாரணம்தொடர்பான புகார்களை அளிக்கச்சென்றாலும் அதிகாரிகள் இருப்பது இல்லை. இதனால் தேவதானப்பட்டி பகுதியில் கடந்த ஒரு திங்களுக்கும் மேலாக அரசுப்பணிகள் முடங்கி உள்ளன.
53theni_medicalcollege
எனவே மாவட்ட நிருவாகம் அரசு அதிகாரிகளைக் கண்காணித்துப் பணிக்கு வராமல் வந்ததாகக் கணக்கு காண்பிக்கும் அதிகாரிகள் மீது துறை வழியலான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
53vaikaianeesu