வெள்ளி, 25 ஏப்ரல், 2014

எழுவர் விடுதலைக்கு எதிரான மனு : அரசியல் யாப்பு அமர்வுக்கு மாற்றம்

அரசியல் காரணமான தீர்ப்பாக இருக்கும்.  உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கையில் அதைக்  குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் இழுத்தடிப்பது  அறக்கடவுளையும் அவமதிப்பதாகும். உடடினயாகத் தமிழக அரசு எழுவருக்கும் காப்புவிடுப்பு(பரோல்) வழங்க வேண்டும்.

அடுத்து அமையும் அரசாவது வழக்கைத் திரும்பப்பெற்று விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இராசீவு வழக்கில் சிக்கிய எழுவர் விடுதலைக்கு எதிரான மனு : அரசியல்  யாப்பு அமர்வுக்கு மாற்றம்

இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு இன்று  தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், "குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கில் விரிவான  உசாவுதல்  நடத்தப்பட வேண்டும். 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல்  யாப்பு அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும்.  இதில் 7 விதமான  செய்திகள் ஆராயப்பட வேண்டியது  தேவையாகிறது. இதுபோன்ற வழக்கை முதன்முறையாக உச்ச நீதிமன்றம் எதிர்கொள்கிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான தடை தொடரும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம்,  அப்பாவிகள் எழுவரின் விடுதலை மேலும் தள்ளிப்போகிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட இன்று, அனவைராலும் போற்றப்பட்டு நல்ல தீர்ப்பின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக