ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்


தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி

தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி

தாய்த்தமிழ் மழலையர் தோட்டம்

கோபி

பள்ளி ஏன் தொடங்கப்பட்டது?
மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது எ1ன எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது கைகளில் எடுக்க வேண்டும் என்றுத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் தாய்த்தமிழ்ப்பள்ளி!
தோற்றமும், பின்னணியும்
சென்னை – அம்பத்தூர் தாய்த்தமிழ்ப்பள்ளியைத் தொடர்ந்து திருப்பூர் போன்ற இடங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டன.  தமிழகத்தின் ஐந்தாவது தாய்த்தமிழ்ப் பள்ளியாக 01-06-1997 அன்று கோபியில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இது தொடங்கப்பட்டது!
தொடக்கப் போராட்டமும், பெற்றோர் ஒத்துழைப்பும்!
தொடக்கத்தில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில், வெறும் 25 குழந்தைகளுடன் இப்பள்ளி தொடங்கப்பட்டது.
ஏழை, எளிய மக்கள், நடுத்தரக் குடும்பத்தார், அதிகக் கட்டணம் கட்டி ஆங்கிலக்கல்விக் கூடத்திற்கு குழந்தைகளை அனுப்ப இயலாதவர், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரின் பெரும் ஒத்துழைப்பால் இப்பள்ளி படிப்படியாக வளர்ந்து தற்பொழுது (16 ஆண்டுகளுக்குப் பிறகு) நான்கு கிளைகளுடன் 500 மாணவ, மாணவியருடன் படர்ந்து விரிவடைந்துள்ளது.
கல்விப்பணியின் இரண்டாம் படி!
“பாவேந்தர் பாரதிதாசன் கல்வி மற்றும் குமூகப்பணி அறக்கட்டளை” – என்னும் பதிவுபெற்ற அறக்கட்டளையால் இப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2000-மாவது ஆண்டில் ஏற்கெனவே அரசு உதவிபெற்று 1954-ம் ஆண்டு முதல் இயங்கி வந்த ஒரு தொடக்கப்பள்ளி – அதை அந்த நிருவாகத்தால் தொடர்ந்து நடத்த இயலாத சூழ்நிலையில், தாய்த்தமிழ்ப்பள்ளி நிருவாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
முதலில் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளி அரசு உதவிப்பள்ளியை ஏற்றுக்கொண்டு பின்பு 5-ஆம் வகுப்புவரை அரசு ஏற்பிசைவுடன் இயங்கும் தொடக்கப்பள்ளியாக விரிவாக்கம் பெற்றது.
இப்பள்ளியில் அரசின் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு 100 ஏழைக்குழந்தைகளுக்கு இலவய பகல் உணவும் வழங்கப்படுகிறது. மேலும் தொடக்கப்பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அரசின் இலவயப் பாடப் புத்தகங்களும் அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.  தொடக்கப்பள்ளியில் கட்டணமில்லா கல்விமுறை செயல்படுத்தப்படுகிறது.
மழலையர் தோட்டம் (பள்ளி)
கோபி நகரில் காந்திநகர் பகுதியில் ஒரு மழலையர் பள்ளி, கோபியின் புறநகர் பகுதியான கரட்டடிபாளையத்தில் ஒரு மழலையர்பள்ளி என இரண்டு மழலையர் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
மழலையர் பள்ளிகளில் அரும்பு, மொட்டு, மலர் என மூன்று நிலைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  தாய்த்தமிழ் கல்விப்பணியின் மழலையர் பாடத்திட்டம் முழுமையான நடைமுறைப்படுத்தப்படுகிறது.  மலர் வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்விப்பணியில் மூன்றாம் படி: தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி
தாய்த்தமிழ்ப் பள்ளியில் மழலையர் நிலையில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிகளில் சென்று சேரும் நிலை இருந்தது. இதனால், நம் தாய்த்தமிழ் உணர்வுடன், அறிவுடன் உருவாக்கப்படும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்குச் சென்றவுடன் மாறிப்போகிற பின்னடைவு ஏற்பட்டது.  நம் குழந்தைகள் தொடர்ந்து தாய்த்தமிழ் கல்வி பெற எடுக்கப்பட்ட தொடர் முயற்சியின் பயனால் 2012-ஆம் ஆண்டு சூன் திங்கள் 1ஆம் நாள் கோபிக்கு அருகில் கொளப்பலூரில் 6 குறுக்கம் நிலப்பரப்பில் மிகச் சிறப்பான அடிப்படை வசதி ஏந்துகளுடன் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட்டது. அனைத்து அரசு ஏற்பிசைவுகளும் பெறப்பட்டது. தற்பொழுது 75 மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு முடிய கல்வி பயில்கிறார்கள்.  அது உண்டு உறைவிடப் பள்ளியாகச் சிறப்பாக நடைபெறுகிறது., அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான பகல் உணவும் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் (2) இரண்டு, தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி, தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.
30 ஆசிரியர்களும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
இப்பள்ளியின் சிறப்புகள்
பாடத்திட்டம்: 1ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு முடிய தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 1-ஆம் வகுப்பிலிருந்து தாய்த்தமிழுடன் தரமான ஆங்கிலப் பாடக்கல்வி, தாய்த்தமிழ் கல்விப்பணியின் கூடுதல் பாடத்திட்டம், ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள், தெளிவான தமிழும், தெளிவான ஆங்கிலமும் கற்றுத் தருதல், செயல்வழிக் கற்றலில் சிறப்பிடம் பெற்றமை, இப்பள்ளி  தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தமை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றமை, இப்பள்ளியின் சிறப்புகள்.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் கவனம் (மாலை நேர சிறப்பு வகுப்புகள்), கிழமைதோறும் வியாழக்கிழமைகளில் மாலை வேலையில் தமிழ்ப்பேச்சு, நூலக வகுப்பு, ஆங்கிலப்பேச்சு, கலை நிகழ்ச்சிகள், பொதுஅறிவு, வினாடிவினா போன்ற திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கையெழுத்து மேம்பாட்டுற்கான தனிப்பயிற்சி. ஆங்கில உரையாடல் பயிற்சி, காணொலி மூலம் கல்வி, விளையாட்டிற்கு முதன்மை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பலவகையான போட்டிகள் இவையும் பள்ளியின் சிறப்புகளே.
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கென “சிகரம் தொடுவோம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ‘தினம் ஒரு தகவல்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு நாளும் ஒரு செய்தி. நாள்தோறும் காலை வணக்க வகுப்பில் திருக்குறள், பொது அறிவு, தமிழ்-ஆங்கிலச் செய்தி,  போன்றவை மாணவர்களால் கூறப்படுதல். மாணவர்களுக்கு வகுப்பில் முழு உரிமை, தானே கற்றலுக்கு முதன்மை, தாய், தந்தையின் பெயர் முன்னெழுத்தாகப் பயன்படுத்தப்படுதல் எனப் பள்ளியின் சிறப்புகள் தொடர்கின்றன.
மாணவர்களுக்கு நாள்தோறும் ஓகை(யோகா) வகுப்புகள், ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்புகள் இடம்பெறும் அறிவியல் கண்காட்சி, உணவுத்திருவிழா, நாட்டுப்புறக்கலைகளுக்கு முதன்மை, குறிப்பாக, பறை, ஒயிலாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, பரதம், சிலம்பம் போன்ற கலைகள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுதல், பள்ளியின் தனித்தன்மைகள்.
பண்பாட்டு களம்: ஆசிரியர்களை அத்தை, அய்யா எனவும், உடன் பயிலும் மாணவர்களை வாங்க, போங்க எனவும் அழைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர் இப்பள்ளியில் தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களும், மாணவர்களும் உரையாடுகின்றனர்.
கல்வி தொடர்பான படத்தொகுப்புகள் ஆண்டுதோறும் மாணவர்களால் உருவாக்கப்படுகின்றன.
மாணவர்களின் ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் தினத்தந்தி, தினமணி போன்ற செய்தித்தாள்களில் வெளிவருகின்றன.
பள்ளிக்கு வெளியே நடைபெறும் போட்டிகள், தொலைக்காட்சிகளின் வாயிலாக நடைபெறும் போட்டிகள் இவற்றில் கலந்து வாகை சூடி வந்துள்ளனர் இப்பள்ளி மாணவர்கள்.
தமிழர் திருநாள், பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு, திருவள்ளுவர் நாள் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலைநிகழ்ச்சிகளில் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்துவது இல்லை.
தனித்திறன் மேம்பாடு அளிக்கப்படுகிறது. பேச்சு, ஓவியம், நடனம், நடிப்பு, கைவேலை, பாடம் தொடர்பான செயல்திட்டங்கள் செய்ய ஊக்கமளிக்கப்படுகிறது.
அரசு உதவிபெறும் பள்ளியான தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் எந்தவித கட்டணமும் மாணவர்களிடமிருந்து பெறப்படுவதில்லை.
தாய்த்தமிழ் மழலையர், தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மட்டும் குறைந்த கட்டணம் மாணவர்களிடமிருந்து பெறப்படுகின்றது.
இவையெல்லாம் இப்பள்ளியின் சிறப்புகளில் சில…
பள்ளிக்கு வருகை தந்து பெருமை சேர்த்த சான்றோர்கள்
தோழர். தியாகு
கலைமாமணி நா. முத்துக்கூத்தன்
நா. அருணாச்சலனார் – தமிழ்ச்சான்றோர் பேரவை
உணர்ச்சிப் பாவலர். காசி ஆனந்தன்
தேனிசைப் பாடகர் செல்லப்பா
திருக்குறள். இரா. கனகசுப்புரத்தினம்
தென்மொழி மா. பூங்குன்றன்  (உளவியல் அறிஞர்)
தன்னம்பிக்கை. பாலா – மலேசியா
கோவை. ஞானி – கோவை
கத்தூரி ரங்கன் – தஞ்சை (ஏ.யி.கே.)
ஆனைமுத்து ஐயா (மா.பெ.பொ.க.)
எழுத்தாளர். சங்கமித்ரா
பேராசிரியர். சுப. வீரபாண்டியன்
பாவலர். அறிவுமதி
அறிஞர். தமிழண்ணல் – மதுரை
மருதாசல அடிகளார் – பேரூர் ஆதினம்
தமிழறிஞர். அருளியார் – தஞ்சை
தொழிலதிபர். பொள்ளாச்சி – நா. மகாலிங்கம்
பழ. நெடுமாறன் ஐயா – சென்னை
கொ. சங்கரபாண்டியன் – வட அமெரிக்கா
தஞ்சை இரா. இரத்தினகிரி
எம். மாரியம்மன், கூடுதல் இயக்குநர், தொடக்கக் கல்வி
கடலூர். புகழேந்தி (சட்டப்பேரவை உறுப்பினர்)
க.ப. அறவாணன் – மேனாள் துணை வேந்தர்
கொளத்தூர். தா. செ.மணி
தமிழ் அறிஞர். மணவை முசுதபா
திரைப்பட இயக்குநர். சீமான்
ஓ. சுப்பிரமணியம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்
சிலம்பொலி செல்லப்பனார்
மு. செந்தமிழ்ச்செல்வன், கூடுதல் பதிவாளர்
பொள்ளாச்சி மா. உமாபதி,
மைக்கேல் வார்டு, உலக வங்கிக்குழு, இங்கிலாந்து
பி. விசயகுமார், இ.ஆ.ப.  இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம்
கண்ணப்பன், இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம்
த. உதயச்சந்திரன், இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர், ஈரோடு
கு.ம.இராமாத்தாள், தலைவர்  தமிழ்நாடு மகளிர் ஆணையம்
ஆய்வாளர் அகிகோ, ஒசாகா பல்கலைக் கழகம், சப்பான்
க. காளிதாசன், ‘ஓசை’ சுற்றுச்சூழல் இயக்கம், கோவை
எழுத்தாளர் பாமரன், கோவை
பேராசிரியர். பர்வீன் சுல்தானா
சு. அறிவுக்கரசு, திராவிடர் கழக பொதுச் செயலாளர்
த. தாலின் குணசேகரன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஈரோடு
மரபின் மைந்தன் ம. முத்தையா, நமது நம்பிக்கை இதழ் ஆசிரியர்  கோவை
திருமதி, நாகலட்சுமி சண்முகம், தன்னம்பிக்கை பேச்சாளர், மும்பை
கருநாடக மாநிலப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
பொன். குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
“கவிப்பேரரசு” வைரமுத்து
மயில்சாமி அண்ணாதுரை, “விண்வெளி அறிவியலாளர்”
செ. கார்மேகம்  இணை இயக்குநர், பதின்மப்பள்ளிகள் இயக்ககம்,
பள்ளியின் திறச் செயல்கள்
இப்பள்ளி மாணவர்கள் உள்ளூரில் மட்டுமின்றி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்ற பல்வேறு அறிவுசார், கலைத்திற, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளி வந்திருக்கின்றனர்.
பள்ளியின் நோக்கம்
“தாய்மொழியே பயிற்று மொழி, தாய்மொழி மூலமே அறிவார்ந்த, மாந்த நேயமிக்க குமுகாயத்தை (சமூகத்தை) உருவாக்க முடியும்.
அதன் வழியாக தமிழ்நாட்டில் மிகச்சிறந்த கல்வியாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்குவதும், தமிழ்நலம் பேணும் சிந்தனையை வளர்ப்பதுவுமே பள்ளியின் நோக்கமாகும்.”
பள்ளியின் குறிக்கோள்
தமிழ்வழியில் தரமான கல்வி!
அறிவியல் நோக்கில் ஆசிரியர் வழிகாட்டல்!
கூர்ந்த மதியும், நற்பண்புகளும் கொண்ட தமிழ்க்குடிமக்களை உருவாக்குதல்!
பள்ளியின் முகவரிகள்
1.            தாய்த்தமிழ் மழலையர் பள்ளி (தோட்டம்)-கிளை 1
                                கம்பர் வீதி (சத்திய சுந்தரி மருத்துவமனை பின்புறம்)
                                கோபி – 638 452
2.            தாய்த்தமிழ் மழலையர் பள்ளி (தோட்டம்) – கிளை 2
                                திருவள்ளுவர் வீதி
                                கரட்டடிபாளையம், கோபி – 638 453
3.            தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி
                                காந்தி நகர், கோபி – 638 452
4.            தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி
                                தாய்த்தமிழ் நகர், கொளப்பலூர்,
                                கோபி – 638 456
பாவேந்தர் பாரதிதாசன் கல்வி அறக்கட்டளை
இந்த அறக்கட்டளை இந்த நான்கு பள்ளிகளையும் நடத்தி வருகிறது.
1.            தலைவர்
                                கோ.ப. வெங்கிடு, (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்)
2.            செயலாளர்-தாளாளர் :  
                                கோ.வெ. குமணன்
3.            பொருளாளர்
                                பு.க. சுப்ரமணியன்
4-28       அறக்கட்டளை உறுப்பினர்கள் இருபத்து ஐவர்.

தொடர்புக்கு :
தொலைபேசி : 9842295915. கோ.வெ. குமணன்
மின்னஞ்சல் : thaitamilpalligobi@gamil.com
முகநூல் :  தாய்த்தமிழ்ப் பள்ளி, கோபி
தமிழகத்தில் பிற தாய்த்தமிழ், தமிழ் வழிப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் பெற நம் குழந்தைகள் தொடர்ந்து உயர்நிலையைத் தமிழ்வழியில் பெற, தாய்த்தமிழ் உயர்நிலை பற்றி நம்பிக்கை விளக்கம் ஆகும்.
தமிழ் அன்பர்களே உங்கள் பகுதியில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகள் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் பற்றிய செய்திகளை எங்களுக்குத் தந்து உதவுங்கள். அவற்றை வெளியிட எங்களுக்குப் பயன்படும்.
வெற்றிச்செழியன்02
வெற்றிச்செழியன்02
கட்டுரையாளர் – வெற்றிச்செழியன்
மின்னஞ்சல் : sa.vetricchezhiyan@gamil.com
2DSC02905
DSC032694211111111111
IMG_1754


DSC01287

- அகரமுதல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக