வியாழன், 7 பிப்ரவரி, 2013

மோரிசியசில் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி சிறப்பாகத் தொடங்கியது

Message from :"Kadrivel SORNUM" Dear Dr Maraimalai,
I am pleased to inform you that the opening ceremony of Dr Singaaravelu Ilakkuvanaar has been a big success.
Ayya Pushparatham talked about the outstanding contribution of your beloved father.
Dr Khesaven Sornum talked about the name given to the Tamil School
Dr Chemen talked about the importance of the Tamil School.
Mr Menon Murday, Chairman of the Mauritius Tamil Temples Federation spoke about the good initiative taken by the Sangam.
The chairman of the Sangam talked about your contribution in making this function a success.
I read your greetings and the audience gave a very big applause for your good gestures.
I have taken a commitment. By His blessings it has been realised. I am extremely happy that there is a Tamil School bearing the name of a Tamil Erudite who had served the Tamil Diaspora.
I would like to thank our Tamil God, Murugan for having given me His blessings to fulfill my duty.
I feel that henceforth the Sangam will liase with you personally.
Wish you the best.

Yours Faithfully
( K. Sormum)


தமிழ்க்காப்புப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பெயரிலான பள்ளியி்ல் பயிலும் ஒவ்வொருவரும் தமிழ்ப்போராளியாகத் திகழ்ந்து தமிழை என்றென்றும் உயர்தனிச்செம்மொழியாய் நிலைக்கச் செய்யட்டும்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 
மோரிசியசு நாட்டில் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி 3/2/13 அன்று மிகச் சிறப்பாக நடந்ததாக நண்பர் திரு.கேசவன் சொர்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.”அந் நாட்டின் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் தமது பொழிவில் விரித்துரைத்துள்ளார்.திரு.கேசவன் சொர்ணம் பள்ளிக்கு இலக்குவனார் அவர்களின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார்.திரு.செமன் தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார்.மோரிசியசு நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை அவர்கள் இந்த நன்முயற்சியைப் பாராட்டினார்.”இச் செய்தியைத் தெரிவித்த கேசவன் அவர்களின் ஆங்கில மின்னஞ்சலை அடுத்த பதிவில் வழங்குவேன்.ஆங்கிலத்தைப் பொறுத்தருள்க.தமிழ்ப்பள்ளி செயற்பட்டுச் சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறிவிடும்.

 ++++++++++++++++++++++++++++++
பள்ளி தொடக்கவிழாவிற்கு  வாழ்த்திய   பொறி.நாக.இளங்கோவன்,  பேரா. செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராசம் அம்மையார் முதலான அனைவருக்கும் நன்றி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக