வெள்ளி, 30 நவம்பர், 2012

27 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரைத் தேடி அலையும் கோவைப் பெண்

27 வருடங்களுக்கு ப்  பிறகு பெற்றோரைத் தேடி அலையும் கோவை ப் பெண்
27 வருடங்களுக்கு பிறகு பெற்றோரைத் தேடி அலையும் கோவை பெண்
கோயம்புத்தூர், நவ. 29-
 
கடந்த 27 வருடங்களுக்கு முன்பு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 3 வயது பிந்து என்ற பெண் குழந்தை கடத்தப்பட்டிருக்கிறார். 1985 -ம் ஆண்டு கோயம்புத்தூரிலிருந்து தனது பெற்றோருடன் திருவனந்தபுரம் சென்ற அவள் நகைக்காக அப்போது கடத்தப்பட்டுள்ளாள்.
 
கடத்தியவன் அவளை 6 மாதங்கள் தனது வீட்டில் வைத்திருந்திருக்கிறான். பின்னர் அந்த மூன்று வயது சிறுமி அப்பகுதியில் அலைந்து திரிந்திருக்கிறாள்.  அப்போது தாஜூதின் - சுபைதா என்ற ஒரு முஸ்லிம் ஜோடி அவளை எடுத்து வளர்த்து இருக்கிறது. பீனா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட அவளை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஒரு தினக்கூலி ஒருவருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். அவளுக்கு 2 குழந்தைகளும் உள்ளது.
 
27 வருடங்களுக்கு பிறகு தனது பெற்றோர்களை காண வேண்டி 30 வயதான அந்த பீனா என்கிற பிந்து தற்போது துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தனது புகைப்படத்தையும் செய்தித் தாள்களில் வெளியிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக