ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Labour leader p.s.soundarapandiyan expired: தொழிற்சங்கத் தலைவர் ப.சீ. சௌந்தரபாண்டியன் காலமானார்

கடின உழைப்பும நேர்மையும் பொதுமை உணர்வும் பிறர் நலன் பேணுவதில் ஈடுபாடும் மிக்க தோழர்  ப.சீ.சௌந்தரபாண்டியன்  இயற்கை எயதியது வருத்தம் அளிக்கிறது. சங்க நலனுக்காகத் தனக்கு வந்த பதவி உயர்வையும் உதறித் தள்ளியவர். பிறருக்குத் தன்னம்பிக்கை ஊட்டியவர். மண விலக்கு வழக்குகளில்  இரு தரப்பாரையும் ஒற்றுமைப்படுத்தி வாழ்க்கையில் மீள இணைத்தவர். குற்றவாளிகள் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு செலுத்தி அவர்களிடம் எளிமையாய்ப் பழகுபவர். சிறந்த தலைவரை  இழந்து தவிக்கும் பணியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த  இரங்கல்கள‌்! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தொழிற்சங்கத் தலைவர் பி.எஸ். சௌந்தரபாண்டியன் காலமானார்

First Published : 31 Dec 2011 06:05:56 PM IST


சென்னை, டிச. 31: தமிழ்நாட்டின் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான பி.எஸ். சௌந்தரபாண்டியன் (65) சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரத்தில் பிறந்தவர் சௌந்தரபாண்டியன். சிறைத் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டார். தற்போது தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். மறைந்த சௌந்தரபாண்டியனுக்கு மனைவி சுசீலா, மகன் ஜீவா, மகள் லெஸி ஆகியோர் உள்ளனர். அவரது உடல் கொட்டிவாக்கம், சாமிநாதன் நகர், ஆறாவது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: 95000 80911.
கருத்துகள்

அருமையான தோழர் . இனிமை ,எளிமை ,உழைப்பு தான் சௌந்திர பாண்டியன் .எதிர்பாராத துயரம்.
By வீ.ந .சோமசுந்தரம்
12/31/2011 8:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக