புதன், 4 செப்டம்பர், 2013

பெண்களின் கவனத்திற்கு!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79530220130903235237.jpg

இரண்டாம் குழந்தையை ப் பெற்றெடுக்கும் பெண்கள், முதல் குழந்தையின் பிரச்னையை உளவியல் ரீதியாக சந்திக்கும் முறையை கூறும், வெங்கடேசு: மனநல மருத்துவராக, சென்னையில் பணியாற்றுகிறேன். இரண்டாம் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களின் முதல் கவலை, இரண்டாம் குழந்தையின் புது வரவால், முதல் குழந்தையின் மனம் வாடிவிடக் கூடாது என்பது தான். அதனால், குழந்தைகளின் சிக்கலான உளவியலை, பக்குவமாக கடக்கும் வழிமுறைகளை கற்பது அவசியமாகிறது. இரண்டாம் குழந்தையை கருவில் சுமக்கும் போதே, "அம்மா வயித்துல, உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி, தங்கச்சி பாப்பா வளருது' என, முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுத்துங்கள். "பாப்பா பிறக்கும் போது, அம்மாக்கு சோர்வா இருக்கும். அப்பா தான் உன்னை பார்த்துப்பார். நீ சமத்தா இருக்கணும்' என, சின்ன வேண்டுகோளை முன்கூட்டியே வைப்பது நல்லது.
ஏனெனில், தனக்கான அன்பு பங்கிடப்படுகிறது என்ற தவிப்பை தவிர, வேறு எதுவும் குழந்தைகளுக்கு அப்போது புரியாது. முதல் குழந்தையின் எதிரில், பிறந்த குழந்தையை அதிகம் கொஞ்சுவதை தவிருங்கள். எக்காரணம் கொண்டும், இரண்டாம் குழந்தையோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். இதனால், குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும், தன் உடன்பிறப்பின் மீது தீராத பகையும் ஏற்படும்.
"நீ பெரியவன், விட்டுக் கொடுத்து போ' என, முதல் குழந்தையிடம் பொறுப்புகளை சுமத்தாதீர்கள். இரண்டாம் குழந்தையின் சின்ன சின்ன தேவைகளை, முதல் குழந்தையை செய்ய பழக்குங்கள். "நீ பவுடர் எடுத்து கொடுத்தா தான், பாப்பா போட்டுக்குமாம்' என, அத்தருணத்தை இரு குழந்தைகளுக்கான பாலமாக மாற்றுங்கள். ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள், சகோதரராகவோ, பங்காளியாகவோ மாறுவது, அத்தாயின் வளர்ப்பு முறையில் தான் உள்ளது. எனவே, குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாமல், குழந்தைகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளை அறிந்து, இருவரையும் ஒரு சேர அரவணைத்து செல்வதில் தான், தாயின் திறமை அடங்கிஉள்ளது. தொடர்புக்கு: 98402 35617


பெண்களின் கவனத்திற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக