செவ்வாய், 5 ஜூலை, 2016

குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்




தலைப்பு-குறிஞ்சிநிலத்தவர் உணவு >thaliappu_kurinchinilathavar_unavu

குறிஞ்சி நிலத்தவர் உணவு
சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304).
நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169).
நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் தேனால் செய்து மூங்கிற்குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். (எ-கா: மலைபடுகடாம் அடி: 171-183).
மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். அடி:425-26. மலைமீது நடந்து சென்ற கூத்தர் திணைப்புனத்துக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி அப்பன்றியின் இறைச்சியைத் தின்றனர். தின்று எஞ்சிய பகுதியை வழியுணவுக்காக எடுத்துச் சென்றனர். அடி:243-249.
முனைவர் மா.இராசமாணிக்கனார்
படம் நன்றி: த.இ.க.கழகம்
முத்திரை-வரலாறு தளம் : muthirai_varalaru.thalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக