காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க்குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவதுஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு2019 (வள்ளுவராண்டு 2050)  முடிவுகள்

முதலாவது பரிசு :
 ‘பொறி’  : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ.  சான்றிதழ்.
 இரண்டாவது பரிசு : 
‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ.  சான்றிதழ்.
 மூன்றாவது பரிசு :
‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ.  சான்றிதழ்.
   நடுவர் பரிசு :
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ : பாசுகர் மகேந்திரன் (பாரிசு, பிரான்சு) – 4000 உரூ.  சான்றிதழ்,  காக்கை ஓராண்டு அளிப்பு.
 ஆறுதல் பரிசுகள் –  1500 உரூ. வீதம் சான்றிதழுடன் – காக்கை ஓராண்டு அளிப்பும்.
 ‘ஒடுக்கம்’ : த. செல்வகுமார் (குப்பிழான், இலங்கை)
 ‘தசரதன்’ : சி. சிரீரகுராம் (பருத்தித்துறை, இலங்கை)
 ‘தொலை நிலம்’ : வனிதா சேனாதிராசா (வவுனியா, இலங்கை)
இப்போட்டி மதிப்புக்குரிய பத்மநாப(ஐய)ர் (இங்கிலாந்து) நெறியாளுகையில் நடுவர்களாக மதிப்புக்குரிய திரைத்துறை ஆளுமையாளர்களான  பேராசிரியர் சொர்ணவேல் ஈசுவரன் (அமெரிக்கா)  அம்சன் குமார் (இந்தியா) ஞானதாசு காசிநாதர் (இலங்கை) பங்கேற்றனர்.
பரிசுக்குரியவர்கள் தொடர்பு கொள்ள காக்கை குழுமம் அழைக்கிறது.
மின்னஞ்சல் : kaakkaicirakinile@gmail.com  
பேசி : 00919841457503 (பகிரி உண்டு) / தொலைபேசி : 00914428471890
காக்கை, 288,  மருத்துவர்  நடேசன்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005, இந்தியா.
தமிழ் இலக்கியத் தேடலாய் அமைந்த மேற்படிப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் பாராட்டைத் தெரிவிக்கிறது.  பரிசுத் தரவரிசை தவிர்க்க முடியாத நிரல் வகைப்படுத்தலாகும். ஆனாலும் இப்போட்டியில் பரிசுக்குரியவர்களாகத் தெரிவானவர்களது ஆற்றலை காக்கை இதழ்க் குழுமம் பெருமையுடன் வாழ்த்துகிறது.
முதற்பரிசு பெற்ற  ‘பொறி’ குறும்படம் திரைப்படமாக்கப்படும்போது ஊக்கப் பரிசாக 30000 உரூ. ‘ A Gun & a Ring’ உருவாக்கிய  கண்பற்றி பல்லூடக( Eyecatch Multimedia Inc) நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.
நினைவுப் பரிசுத் தொகையை வழங்கும் கிபி அரவிந்தனின் துணைவி சுமதி – உடன்பிறந்தவர் குடும்பத்தினர், சிறப்பு நடுவர், ஆறுதல் பரிசுத் தொகையை வழங்கும் இலண்டன் துளிர், முதற் பரிசாளரின் படமாக்கலை ஊக்குவிக்கும் கண்பற்றி பல்லூடக(Eyecatch Multimedia Inc) நிறுவனர், தமிழ் எழுத்து வகையில் முதற்தடவையாக நடைபெற்ற இந்தப் போட்டியைப் பகிர்ந்த சமூகவலைத் தள நண்பர்கள், ஆர்வலர்கள், போட்டி அறிவித்தலைப் பரவலாக்கிய ஊடகங்கள். போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட போட்டியாளர்கள்,  முடிவைத் தொகுத்தளித்த மதிப்புக்குரிய நடுவர்கள் அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் நன்றியைத் தெரிவிக்கின்றது.
க. முகுந்தன்
காக்கை குழுமம் சார்பாக
காக்கை கரவா கரைந்துண்ணும்