10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா

அன்புடையீர்  வணக்கம்.!
வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள், கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பி உள்ளார்கள். 
 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குச் சிறப்பாக, தொழில்முனைவோர் கூட்டம்‘GTEN’ என்ற பெயரில் ஒரு முழு நாள் நடக்கவுள்ளது. விரைவில் விழாப் பதிவுத் தகவல்கள் பேரவை இணைய தளங்களில் வெளியிடப்படும். நீங்கள் அனைவரும் உடனடியாகப் பேரவை விழாவுக்கு நன்கொடையாளர்களாகப் பதிவுசெய்து, ஆதரவு தரும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வரும் சனவரி மாதத்தை நம் தமிழ்ச்சங்கங்கள் மரபுத் திங்களாகக் கொண்டாட வேண்டுகிறேன். தமிழ்ப் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைப் பொங்கல் விழாவில் நடத்தி, நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது நம் கடமை.
“கீழடி நம் தாய்மடி”
என்ற மையக் கருத்தோடு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேரவைத் தமிழ்விழா நடத்துவோம், வாரீர்!
தமிழன்புடன்,
சுந்தர் குப்புசாமி
பேரவைத் தலைவர் 
இவ்விழாவின் சிறப்பு அங்கமாக நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் கீழ்க் குறிப்பிடும் முத்தாய்ப்பான நிகழ்ச்சிகள் உங்களின் பங்களிப்புடன் சிறப்புற நடைபெறஉள்ளன.
நமது இளைய தமிழ் தலைமுறையினருக்காக:
  1. சிறுவர் சிறுமியர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த குறள் தேனீ – தமிழ்தேனீ (வினாடி வினா)
  2. சிறார்களுக்கான தேசிய அளவில் நடனம் (பரதநாட்டியம், மரபுவழி நடனம் , ஊரக இசை- திரை இசை நடனம்,  பாட்டுப் போட்டி (கருநாடக இசை / மெல்லிசை)
சிறுவர் மட்டும் அல்லாமல் 18 அகவைக்கு மேற்பட்டோரும் தங்களின் தமிழ் திறனைவெளிப்படுத்த
  1. கருத்துக்களம் – பேச்சுப்போட்டி
  2. இலக்கிய வினாடி வினா
ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
இப்போட்டிகளுக்கு உண்டான விதிமுறைகள்  மற்றும் குறிப்புகள் பேரவையில் இடம்பெற்றுள்ள  அனைத்து தமிழ் சங்கங்களிற்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விழாவில்  முனைவர் கன்னிக்சு கன்னிகேசுவரன் அவர்களின் மாபெரும் சேர்ந்திசை தமிழ்ப் பண் கலை நிகழ்ச்சி  ‘முரசு’  நடைபெற இருக்கின்றது. இச் சேர்ந்திசையில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள்,  இசை, நடனகலைஞர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட  சங்கக் காலம்  தொட்டு இந்நாள்தமிழ் இலக்கியங்கள் வரை உள்ள இசையின் மேன்மையை உங்கள் முன் படைக்கஉள்ளனர்.
     இந்த இசை   நிகழ்ச்சியில் பங்கு பெற  அனைத்து அமெரிக்க மாநிலங்களில் இருந்து நன்கு பாடும் திறன்  (திறமையான பாடகர்கள்)  உடையவர்களை வரவேற்கிறோம்.
     தங்கள் மாநிலத்தில் நன்கு திறன்பட பாடும் கலைஞர்களின் பெயர், தொலைபேசிஎண், மின்னஞ்சல் ஆகியவற்றை 1/5/19 தேதிக்குள்  கீழ்வரும் மின்னஞ்சலுக்குஅனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி
‘முரசு’  குழு
தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்கும்,
பேரவை – சிகாகோ தமிழ்ச் சங்க விழா குழுக்கள்.