வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

The seeds of the Renaissance : மறுமலர்ச்சிக்கான விதை

 சொல்கிறார்கள்                                                                                                                           


புதுமையான முறையில், புதுமனை புகுவிழாவை நடத்தியுள்ள ராஜசேகரன்: தஞ்சையை அடுத்துள்ள பாபநாசம் தான் என் சொந்த ஊர். என் பெற்றோர் விவசாயிகள். அதில் வரும் வருமானத்தை கொண்டு தான் என்னை படிக்க வைத்து ஆளாக்கினர். நான் குடும்ப நலத்துறை பண்டக சாலையில் எழுத்தர் பணியில் இருக்கிறேன். என் இத்தனை ஆண்டு அனுபவத்தில், பெண்கள் தான் அனைத்திற்கும், அடிப்படை என்பதை உணர்ந்தவன்; நம்புபவன். எட்டு மணி நேர வேலைக்கே அலுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில், எந்தவித சோர்வும் இல்லாமல், காலம் முழுவதும் உழைக்கும் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும், கொண்டாடினாலும் தகும். என் அம்மா 15 ஆண்டுகளுக்கு முன்பே, இறந்து விட்டார். பின், என் பெரியம்மா தான் என்னை வளர்த்தார். அடுத்து என் மாமியார் முத்துலட்சுமி, இவர்களின் பாசம் மட்டுமே, என் இல்லத்தை ஆள்கிறது. இது, என் வீட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பொருந்தும். அதனால் தான் கைம்பெண்களாக இருந்தாலும், என் பெரியம்மா, மாமியாரைக் கொண்டு, புது இல்லம் திறந்தேன். என் பெரியம்மா, ரிப்பன் வெட்ட, பாரதிதாசன் படத்தை என் மாமியார் திறந்து வைத்தார். மூட நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, மனிதர்களின் மனங்களை காயப்படுத்துவதில் துளியும் விருப்பமில்லை. இந்நிகழ்ச்சியை நான் விளம்பரத்திற்காகவும் செய்யவில்லை. என் இந்த செயல், யாராவது ஒருவருக்கு, முதியவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நான் நடத்திய இந்த புதுமனை புகுவிழா, பஞ்சாங்கம் பார்த்து, நாள் குறித்து, பன்னீர் தெளித்து, பால் பொங்க வைத்து நடைபெறும் விழா அல்ல; சமுதாயத்தில் என்னால் முடிந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்தேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக