சனி, 18 டிசம்பர், 2021

குவிகம் அளவளாவல் – திரைப்பாடல்களில் . . . .

 அகரமுதல


மார்கழி 04, 2052 / ஞாயிறு 19.12.2021

மாலை 6.30                        

 குவிகம் அளவளாவல்

 “திரைப்பாடல்களில் வைர ஊசி வரிகள்”                                   

கூட்ட எண்  / Zoom  Meeting ID:

 619 157 9931

கடவுச் சொல் /  Passcode:

 kuvikam123   

 பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

 




வெள்ளி, 17 டிசம்பர், 2021

தமிழ் முதலெழுத்து கட்டாயமா? -குமுதம் செய்தியாளர் செவ்விக்கட்டுரை

 அகரமுதல


தமிழ் இன்சியல் கட்டாயமா?

நடைமுறையில் சிக்கலோ சிக்கல்

– கணேசுசுமார்

 

அமைச்சர் தங்கம் தென்னரசு

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்

இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்

 








வியாழன், 16 டிசம்பர், 2021

புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் உரை

 அகரமுதல


புதுயார்க்கு தமிழ்ச்சங்கம்

வெள்ளிதோறும் இலக்கிய உலா

அமெரிக்கா: மார்கழி 02, 2052 / சனி / 17.12.2021 இரவு 9.00

இந்தியா:  மார்கழி  03 / ஞாயிறு /

18.12.2021 நேரம் காலை 7.30

சிறப்புரை : பதிவர்

இ.பு.ஞானப்பிரகாசம்

அன்றாட வாழ்வில்

தமிழ்ப்பயன்பாடு

மெய்ந்நிகர் நிகழ்ச்சிக்கான கூட்டப்பதிவு விவரங்களை அழைப்பிதழில் காண்க.



சனி, 11 டிசம்பர், 2021

குவிகம் இலக்கிய வாசல்: சிறப்புரை: அ.கி.வரதராசன்

 அகரமுதல




குவிகம் இலக்கிய வாசல்
குவிகம் இணைய வழி அளவளாவல்
கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021
மாலை 6.30

சிரம் தள்ளிய சரம்
சிறப்புரை :

அ.கி.வரதராசன்


நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணைய
கூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 –
கடவுச்சொல் / passcode kuvikam123
அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib

வலையொளி youtube இணைப்பு : https://bit.ly/3v2Lb38

திங்கள், 6 டிசம்பர், 2021

சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை

 அகரமுதல




தமிழே விழி !                                                                             தமிழா விழி  !

 

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 14

அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை

கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021  காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

கவிஞர்  தமிழ்க்காதலன்

முனைவர் அதிரடி அன்பழகன்

நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா

 நிறைவுரை:  தோழர் தியாகு

 அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம் 



சனி, 4 டிசம்பர், 2021

குவிகம் 100 அறிமுகம் : செந்தூரம் செகதீசு & இரம்யா வாசுதேவன்

 அகரமுதல


குவிகம் இணைய அளவளாவல்

கார்த்திகை 19, 2052 ஞாயிறு

5.12.2021 மாலை 6.30                  

அறிமுகம் : செந்தூரம் செகதீசு 

                         இரம்யா வாசுதேவன்

 

இணையவழி அளவளாவல் நிகழ்வு  தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி / Passcode: kuvikam123   
அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09




தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்

அகரமுதல 


தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் 

வெற்றிபெற முடியும்

     – சிலம்பாட்ட வீரர்களுக்கு

மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை 

      வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.  

       திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

      இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரையாற்றினார். வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் தாளாளர் பா.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். 

     இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் ஏராளமாய்ப் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக ஈரோடு மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் தேசிய நடுவர் ஆறுமுகம் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மின்னிலா, இராணி, சேட்டு, காளிதாசு ஆகியோர் இருந்தனர்.


    சார் இளையர்ஆண்கள் பிரிவில் சேத்துப்பட்டு புத்தாசு சிலம்பக் குழுவின் சேதுராமன், பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை சிலம்பக் குழுவின் தருசினி ஆகியோர் முதலிடத்தையும், ஆண்களுக்கான மூத்தோர் பிரிவில் பெரணமல்லூரைச் சேர்ந்த இளவரசன் முதலிடத்தையும், பெண்களுக்கான மூத்தோர்பிரிவில் வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரி மாணவி ஆர்.லெட்சுமி ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு  மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்  கா.விசுவேசுவரய்யா,  பரிசுகளை வழங்கிச் சிறப்புரை
ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
   “எந்த பணியில் சேர வேண்டுமானாலும் நல்ல ஆரோக்கியமும், உறுதியான உடலும் நமக்கு அவசியம் இருக்க வேண்டும். தமிழர்களின் பரம்பரைக் கலையான சிலம்பாட்டத்தைக் கற்றுக்கொள்வதன் மூலமாக, நம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, நமக்குள் ஒரு தன்னம்பிக்கையும் பிறக்கும். இளவயதிலேயே சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வது, பிற்காலத்தில் நம் வாழ்க்கைக்குக் கைகொடுக்கும். சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 % ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. இது இன்னும் சிலம்பாட்டக் கலைக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
    எந்தப் போட்டிகளில் நீங்களும் பங்கேற்றாலும், தோல்வி ஏற்பட்டால் தயங்கி நின்றுவிடக் கூடாது.
ஒரு போட்டியில் பங்கேற்பது என்பதே நமக்கு புதிய அனுபவம்தான். எதிலும் தன்னம்பிக்கையோடும், உறுதியோடும் பங்கேற்றால் நம்மால் வெற்றிபெற முடியும்” என்று கூறினார்.
    இந்த விழாவில், சிரீ  வெங்கடே சு வரா பதின்நிலைப்பள்ளியின் நிருவாக இயக்குநர் சி.வி. இரங்கநாதன், வந்தவாசி ஆண்கள் மேனிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
    இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் திசம்பர் – 18,19 ஆகிய நாள்களில் சிவகங்கையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.



வெள்ளி, 3 டிசம்பர், 2021

14th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace

 

 14th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace


 14th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace

Date & Time: Saturday 4th-December-2021, 5:00 PM (IST).
Madrid: 12:30 PM , Toronto: 6:30 AM,   London: 11:30AM ,
Mauritius: 3:30 PM , Sydney: 10:30 PM 

Topic: "The Universal Radiance of the Kural, A Key to Good Governance"

Chief Guest: Mr. Krishnasamy Ponnusamy, Senior Chief Executive, Mauritius Public Service (retd), Mauritius.

Join Zoom Meeting
https://zoom.us/j/94899339981?pwd=MDNNQTQ5NnhKVm8rZTJiaFQ0UTU5UT09

Meeting ID: 948 9933 9981
Passcode: 112233





Prof. Armoogum Parsuramen
Founder-President
International Thirukkural Foundation

வெள்ளி, 26 நவம்பர், 2021

தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

 அகரமுதல


நலமும் வளமும் நிறைந்து
உரிமை ஈழத்தை உயர்த்தி
நூறாண்டு கடந்தும் வாழியவே!



தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்து
நாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது:


1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு!

2. நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே.
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்!

3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.

4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை.

5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.


– மேதகு வே. பிரபாகரன்


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

படங்கள் நன்றி – https://www.likemystatus.in/2020/08/prabakaran-tamil-quotes.html