வியாழன், 10 ஜனவரி, 2019

முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மார்கழி 26, 2049 வியாழக்கிழமை
10.01.2019 காலை 10.30
நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம்
12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர்
முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய
செயலே சிறந்த சொல்
கோயில் தேசத்தில் வெள்ளையர்கள்
யானைகளின் கடைசித் தேசம்
ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கி.ஆ.பெ.எழுத்தோவியங்கள் – தொடர் பொழிவுகள் 12

அகரமுதல

திங்கள்தோறும் இரண்டாம் சனிக்கிழமை, 2019
திருநெல்வேலித்தனித்தமிழ் இலக்கியக்கழகம்
தலைவர் : முதுமுனைவர் பா.வளன் அரசு

எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம்

அகரமுதல



எதையாவது சொல்லட்டுமா? – நூல் அறிமுகம்
மார்கழி 24, 2049 / 08.01.2019 மாலை 6.00
சென்னை புத்தகக் காட்சி அரங்கம்

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

தமிழில் முதல் சிறுகதை?

அகரமுதல

தமிழில் முதல் சிறுகதை?
தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன்.
தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர் ஆதாரம் காட்டி வருகின்றனர்.
ஆனால், எழுத்தாளர் ஆர்.எசு.யாக்கோபு அவர்களின் தேடுதல் முயற்சிகளில்  சாமுவேல் பவுல்(ஐயர்) எழுதிய சிறுகதைதான் முதல் சிறுகதை என்பதைத் தேடிக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
நூலாசிரியரான ஆர்.எசு.யாக்கோபு, சாமுவெல்(ஐயர்) படைத்த ‘சரிகைத் தலைப்பாகை’ என்ற கதைதான் முதலாவது சிறுகதை எனக் கூறியுள்ளார் . அவரே இப்படி எழுதுகிறார்:
‘தமிழில் முதல் புதினம் பிரதாப முதலியார் சரிதம்’ என்று கண்டுகொண்டது போன்று, தமிழில் சிறுகதை எதுவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் அவா. அந்த எண்ணம் என் உள்ளத்திலே பல ஆண்டுகளாக உறுத்திக்கொண்டே இருந்தது.. அந்த நோக்கில் நிறையப் படிக்க ஆரம்பித்தேன்..அதன் விளைவே இச் சிறுநூல். தமிழில் முதல் சிறுகதை எது? என்றசிற்றாய்வு. ரிசி மூலம், நதிமூலம் போன்று கண்டுபிடிக்க முடியாத சிக்கலான ஒன்று அல்ல” என்கிறார்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு( சேக்கப்)
இன்று நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் வாசகர்களே நீங்களும் தேடித்தான் பாருங்களேன்.
அந்தோணி சீவா
ஞானம் – சனவரி 2019(224)  பக்கம் 23

செவ்வாய், 1 ஜனவரி, 2019

மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா

 
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி
திருப்பரங்குன்றம்
இருப்பு:  திருநகர், மதுரை 625006
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
மார்கழி 21, 2049 சனிக்கிழமை
05.01.2019
காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

திங்கள், 31 டிசம்பர், 2018

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்

அகரமுதல

வி.எம்.அரங்கம்(V M Hall)
8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை 600 088
 மார்கழி 17,2049   செவ்வாய்க்கிழமை
01-01-2019  காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
நிகழ்ச்சி நிரல்:  
  • 7–ஆம் தந்திர முற்றோதல்
  • திருமுறை விண்ணப்பம்
  • தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு
  • திருமந்திர வினா விடை அரங்கம்
  • திருமுறை இசைஅரங்கம்
  • விருதரங்கம்
    • தெய்வத்தமிழ் அறக்கட்டளை
    • சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ஆராய்ச்சி மன்றம்
    • திருமுறை பாதுகாப்புச் சங்கம்
    • செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

சனி, 29 டிசம்பர், 2018

புத்தக வெளியீடு – தில்லைத் தென்றல்

 அகரமுதல


மார்கழி 15, 2048 ஞாயிறு
30.12.2018 முற்பகல் 11.00

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

புத்தக வெளியீடு
தில்லை வேந்தனின்
தில்லைத் தென்றல் (மரபுக் கவிதைகள்)
குவிகம் பதிப்பகம்
தொடர்பிற்கு: 9791069435, 9108939305

க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை

அகரமுதல


அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை
மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார்.
மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா. தமிழ் நேசன், கே. ஆர். சிறீநிவாசன், வெ. சித்தார்த்தன், மிக்கேல் அந்தோணி, இறை சா. இராசேந்திரன், சிறீதர் தமிழன் உள்ளிட்ட பலர் க.ப. அறவாணனின் தமிழ்த் தொண்டு குறித்து நினைவுரையாற்றினர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து க.ப. அறவாணன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் மகளிர் பட்டி மண்டபம்

அகரமுதல

மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00
திருமால் திருமண மண்டபம்(மாடியில்)
தலைமை – முனைவர் கண்மணி
பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது
சஞ்சீவி பருவதத்தின் சாரலே.
புரட்சிக் கவியே.
அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு

வியாழன், 27 டிசம்பர், 2018

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 583 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

அகரமுதல

மார்கழி 14, 2049 / சனி

29.12.2018 மாலை 6.00

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    583

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 45

2018 தீபாவளி மலர்கள்

சிறப்புரை:  ச.கண்ணன்

அரங்கம் அடைய