வியாழன், 27 டிசம்பர், 2018

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவும்

அகரமுதல

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா

அன்புடையீர்  வணக்கம்.!
வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் நடக்க இருக்கும் உலகத்  தமிழ்ஆராய்ச்சி மாநாடு (10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா) நிகழ்ச்சிகளுக்கு தங்களின்குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இதுவரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக, ஏறத்தாழ 500 ஆராய்ச்சியாளர்கள், கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பி உள்ளார்கள். 
 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குச் சிறப்பாக, தொழில்முனைவோர் கூட்டம்‘GTEN’ என்ற பெயரில் ஒரு முழு நாள் நடக்கவுள்ளது. விரைவில் விழாப் பதிவுத் தகவல்கள் பேரவை இணைய தளங்களில் வெளியிடப்படும். நீங்கள் அனைவரும் உடனடியாகப் பேரவை விழாவுக்கு நன்கொடையாளர்களாகப் பதிவுசெய்து, ஆதரவு தரும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வரும் சனவரி மாதத்தை நம் தமிழ்ச்சங்கங்கள் மரபுத் திங்களாகக் கொண்டாட வேண்டுகிறேன். தமிழ்ப் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைப் பொங்கல் விழாவில் நடத்தி, நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது நம் கடமை.
“கீழடி நம் தாய்மடி”
என்ற மையக் கருத்தோடு தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேரவைத் தமிழ்விழா நடத்துவோம், வாரீர்!
தமிழன்புடன்,
சுந்தர் குப்புசாமி
பேரவைத் தலைவர் 
இவ்விழாவின் சிறப்பு அங்கமாக நீங்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் கீழ்க் குறிப்பிடும் முத்தாய்ப்பான நிகழ்ச்சிகள் உங்களின் பங்களிப்புடன் சிறப்புற நடைபெறஉள்ளன.
நமது இளைய தமிழ் தலைமுறையினருக்காக:
  1. சிறுவர் சிறுமியர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த குறள் தேனீ – தமிழ்தேனீ (வினாடி வினா)
  2. சிறார்களுக்கான தேசிய அளவில் நடனம் (பரதநாட்டியம், மரபுவழி நடனம் , ஊரக இசை- திரை இசை நடனம்,  பாட்டுப் போட்டி (கருநாடக இசை / மெல்லிசை)
சிறுவர் மட்டும் அல்லாமல் 18 அகவைக்கு மேற்பட்டோரும் தங்களின் தமிழ் திறனைவெளிப்படுத்த
  1. கருத்துக்களம் – பேச்சுப்போட்டி
  2. இலக்கிய வினாடி வினா
ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
இப்போட்டிகளுக்கு உண்டான விதிமுறைகள்  மற்றும் குறிப்புகள் பேரவையில் இடம்பெற்றுள்ள  அனைத்து தமிழ் சங்கங்களிற்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த விழாவில்  முனைவர் கன்னிக்சு கன்னிகேசுவரன் அவர்களின் மாபெரும் சேர்ந்திசை தமிழ்ப் பண் கலை நிகழ்ச்சி  ‘முரசு’  நடைபெற இருக்கின்றது. இச் சேர்ந்திசையில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள்,  இசை, நடனகலைஞர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட  சங்கக் காலம்  தொட்டு இந்நாள்தமிழ் இலக்கியங்கள் வரை உள்ள இசையின் மேன்மையை உங்கள் முன் படைக்கஉள்ளனர்.
     இந்த இசை   நிகழ்ச்சியில் பங்கு பெற  அனைத்து அமெரிக்க மாநிலங்களில் இருந்து நன்கு பாடும் திறன்  (திறமையான பாடகர்கள்)  உடையவர்களை வரவேற்கிறோம்.
     தங்கள் மாநிலத்தில் நன்கு திறன்பட பாடும் கலைஞர்களின் பெயர், தொலைபேசிஎண், மின்னஞ்சல் ஆகியவற்றை 1/5/19 தேதிக்குள்  கீழ்வரும் மின்னஞ்சலுக்குஅனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி
‘முரசு’  குழு
தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்கும்,
பேரவை – சிகாகோ தமிழ்ச் சங்க விழா குழுக்கள்.

புதன், 26 டிசம்பர், 2018

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

அகரமுதல

மார்கழி 15, 2049 / 30.12.2018

முற்பகல் 10.00-நண்பகல் 1.00

நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம்

சென்னை

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல்

அன்புடன்

பச்சையப்பன் கல்லூரி, சென்னை
அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை
தொடர்பிற்கு
90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832

செவ்வாய், 25 டிசம்பர், 2018

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

அகரமுதல

 மார்கழி 13, 2049 / 28.12.2018

வெள்ளி மாலை 6.00

பண்டிதர் சவகர்லால் நேரு சாலை

மும்பை 400 080

 தலைமை: சு.குமணராசன்

படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன்

இலெமூரியா அறக்கட்டளை
தானே, மும்பை 400 606

விருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்

 அகரமுதல


மார்கழி 12, 2049 / 27.12.2018

வியாழன் மாலை 5.45

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,  

சாபர்கான் பேட்டைசென்னை

(காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து
அசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு)

விருட்சம்  நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவதுகூட்டம்

தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்

தொடர் உரை :- முனைவர்  வே சு

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

 

அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!

  தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,  இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018)  காலை இயற்கை எய்தினார்.
நீரிழிவு நோயால் இடக்கால்  பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர்  நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார்.
 ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும்  வகையில் மரணமுற்றார்.
என்மீது தனிப்பட்ட அன்பு கொண்ட அவர் இழப்பைத்தனிப்பட்ட இழப்பாகவும் கருதுகிறேன்.
எப்பொழுதும் கூட்டத்திற்குத் தொலைபேசிவழி அழைத்ததும்  மறுக்காமல் வந்துவிடுவார்.
அண்மையில், ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து நடத்திய உரையரங்கத்தில் பங்கேற்றுத் தொடக்க வுரையாற்றியதை மறக்க இயலாது. “நிகழ்ச்சிக்கு அழைக்க யாரும் வருவார்களா அல்லது நானாக வரவேண்டுமா” எனக் கேட்டார்.  “ஐயா, நீங்களாகவே வழக்கம்போல் வந்துவிடுங்கள்”  என்றேன்.  உரிய நேரத்தில் வந்துவிட்டார்.
நான் ஏற்படுத்திய அறிமுகம் ஒன்று அவரை அறியாதவரகளும் அவரை அறியச் செய்து துணைவேந்தர் பதவியில் அமரத் துணைநின்றது என அப்பதவியில் சேர்ந்தபின் அன்புடன் நினைவுகூர்ந்தார்.(தகுதியில் வந்த பதவியை என் சிறு அறிமுகத்துடன் இணைத்துக் கொண்டார்.)
எப்பொழுது சந்தித்தாலும், “தமிழுக்கு ஏற்படுத்தும் கேடுகளுக்கு எதிராக இதழ்கள் வழியாகக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்” என்று பாராட்டி அன்பை வெளிப்படுத்தும் பண்பாளர்களில் அவரும் ஒருவர்.   
அண்மையில் தொலைபேசியில்  “தமிழைக் காக்குமா தமிழக அரசு?” என நான் தினமணியில் எழுதியதையும் நக்கீரனில் “கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!”  என எழுதியதையும், “வேறு யாரும் துணிந்து எழுதாதபொழுது எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்” என ஊக்கப்படுத்தினார். வஞ்சகம் இல்லாமல் பாராட்டும் நல்லுள்ளம் கொண்ட அவர் மறைவு சொல்லொணா இழப்பைத் தருவதாக உள்ளது.
 தமிழரை மட்டம்தட்டும்வகையில் அவர் கருத்துகள் சில இருப்பதாக நான் கூறினாலும், “என் கருத்து அது. என் நோக்கமும் உங்களுக்குப் புரியும். உடன்படாவிட்டால் நீங்கள் அதை மறுத்து எழுதுங்கள்” என்பாரே தவிரச் சினமடையமாட்டார்.
 அவர் நாளை காலை 11.00 மணிக்கு
அரும்பாக்கம் மின்மயானத்தில்
எரியூட்டப்பபடுகிறார்.

இல்ல முகவரி
2, முனிரத்னம் தெரு
அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
சென்னை – 600029

தொடர்பிற்கு

முனைவர் தாயம்மாள் அறவாணன்   9444064568
திரு அறிவாளன்   9940235525 
முனைவர் வாணி அறிவாளன் 9444188795
[(அமைந்த கரையில் இருந்து பிரியும் நெல்சன்மாணிக்கம் சாலையில் தொடக்கத்தில் உள்ள எம்.ஆர்.மருத்துவமனை &  முகில்நடை(skywalk) கடைவளாகம் எதிர்ப்புறம்]

அவரைப்பற்றி அறிய அகரமுதல இதழில் நான் எழுதியுள்ள

 மன்பதை நூல் மருத்துவர் க.ப.அறவாணன்

கட்டுரையைக் காண்க.

குடும்பத்தினருக்கும் அன்பர்களுக்கும் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 – இலக்குவனார் திருவள்ளுவன்

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

அகரமுதல

மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018

முதல்

மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018

வரை

எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ(

3ஆவது தளம்

1, சவகர்லால் நேரு சாலை,

100 அடி சாலை, வடபழனி, சென்னை 26

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன்

சிறப்பு நிகழ்ச்சி

மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018

மாலை 5.00 முதல் 7.00 வரை

எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை
இராசராசன் கல்வி பண்பாட்டுக்  கழகம்
வள்ளலார் பண்பாட்டுச்சன்மார்க்கச் சங்கம்
திஇராநி பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்

குவிகம் இல்லம்: அளவளாவல்: கிரிசா இராகவன்

அகரமுதல

  

மார்கழி 08, 2049 / திசம்பர் 23, 2018

பிற்பகல் 3.30

6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,

சென்னை 600 017


குவிகம் இல்லம்அளவளாவல்

 

கிரிசா இராகவன்

தொடர்பிற்கு: 9791069435. 8939604745