செவ்வாய், 15 மே, 2018

தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்


தமிழர் தலைவிதி தமிழர் கையில் :

பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் ! 


பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது.
இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது.
கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது.
செருமன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒத்துழைப்பும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதனை முன்னெடுத்திருந்தது.
பேர்லின் தமிழ்பள்ளிச் சிறார்களின் நடனங்கள், நாடகம், பாடல் எனப் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருந்த இந்த மக்கள் அரங்கத்தில் (தமிழகம்) தமிழர் தேசிய இயக்கச் சார்பாளர் தோழர் தியாகு,  தலைமையர் வி.உருத்திரகுமாரன் சிறப்புரைகள் இடம்பெற்றிருந்தன.
செருமன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பேர்லின் சார்பாளர், செருமன் ஈழத்தமிழர் மக்களவை  சார்பாளர்  உரைகளும் இடம்பெற்றிருந்தன.
மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு செயல்பாடு குறித்து சுதன்ராசு அவர்கள் கருத்துரைகளை வழங்கியதோடு, பொதுமக்களின் கேள்விகளுக்கும் மறுமொழிகள் அளிக்கப்பட்டன.
தமிழீழ மக்களின் தேசியத்தன்னுரிமை அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும்  விடுதலையும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது தன்னுரிமையினை வெளிப்படுத்தும் மக்கள்நாயக வழிமுறையாகவே இப்பொது வாக்கெடுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.
தேசிய இனச் சிக்கலுக்கு அரசியற்தீர்வாக தமிழீழத் தனியரசு உட்பட்டதீர்வுத்திட்ட முன்மொழிவு தமிழீழ மக்களின் முன்வைக்கப்பட்டுபொதுவாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தும் மக்கள்நாயக முடிவுக்கு ஏற்பஅரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலகஆதரவினைத் திரட்டும் பணியினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள்இயக்கம் மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3



புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3

புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார்.
சித்திரை 30, 2049  / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
 புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.
 புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். திக.வின் மண்டலத்தலைவர் அரசும் அவர் துணைவியார் தி.க.மகளிர் அணித்தலைவர் விலாசினிஆகியோரும் சிற்றுரையாற்றினர்
இறுதியில் நெ.நடராசன்  க.தமிழமல்லன் உரையப் பாராட்டி நன்றிகூறினார்
முனைவர் க. தமிழமல்லன் உரை

ஞாயிறு, 13 மே, 2018

குவிகம் இல்லம் – அளவளாவல்: திருமதி தாரிணி கோமல்

குவிகம் இல்லம் – அளவளாவல்

சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக் கிழமை – மே 13, 2018காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை

திருமதி தாரிணி கோமல்
(நாடக த் தயாரிப்பாளர், இயக்குநர்)
அவர்களுடன் 
அளவளாவல்

வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை 17

வெள்ளி, 11 மே, 2018

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு

அகரமுதல


மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் 

ஆய்வியல் மாநாடு

பாரிசு


ஆவணி 23 &  24, 2049

 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018  


– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்
– சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்

அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049
  • சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
  • மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
  • அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய

இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018

sachchithanantham@gmail.com   என்ற மின்வரிக்குக்  கட்டுரையினைஅனுப்பிவையுங்கள்
தங்களது கட்டுரையின் படிகளை மின்மினிக்கும்  அனுப்பிவையுங்கள்
கட்டுரையாளர் பதிவு விவரம்  பின்னர் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர்பேரா.சச்சிதானந்தம்
நன்றி.
அன்புடன்
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர்,  மின்மினி
WWWPhone: +41 43 526 70 24 (மீளழைப்பு-Call Back)
+61469437285 (SMS) AU
+41787261122 (SMS) CH

செவ்வாய், 8 மே, 2018

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை


அகரமுதல

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு

நடத்தும்

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு

சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018

பெரியார் திடல், சென்னை 600 007

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
மாநாட்டுப் பொறுப்பாண்மையர்