சனி, 30 மார்ச், 2013

பிரன்லால் பட்டேல் என்ற 103 அகவை ஒளிப்படக்கலைஞர்













பிரன்லால் பட்டேல் என்ற 103 அகவை ஒளிப்படக்கலைஞர்.
கடந்த 28 ஆம் தேதி டில்லியில் நடைபெற்ற 2011- 12 ம் ஆண்டிற்கான தேசிய புகைப்பட விருது வழங்கும் விழாவில், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை சபாநாயகர் மீரா குமார் வழங்கியபோது மொத்த அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது.


அவர்தான் 103 வயதாகும் பிரன்லால் பட்டேல்.


குஜராத் மாநிலம்ஆமதமாபாத்தைச் சேர்ந்த பிரன்லால் பட்டேல், இருபது வயதாகும் போது அவர் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளி ஒன்றின் மூலையில் தொங்கிக்கொண்டிருந்த" பாக்ஸ் டைப்' கேமிராவைத் தொட்டுப்பார்த்து இருக்கிறார்.



அப்போது இவரது மேலதிகாரி, "உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும், பேசாமல் வை' என்று சொல்லியுள்ளார். இந்த வார்த்தை அவரை உசுப்பேற்றிவிடவே சொந்தமாக ஒரு "பாக்ஸ் கேமிரா' வாங்கி படம் எடுக்கத் துவங்கினார்.
கொஞ்ச நாளில் புகைப்படம் எடுப்பது பிடித்துப் போகவே ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழுநேர புகைப்படக்கலைஞரானார்.



இவர் காலத்தில் "பிளாஷ் லைட்' என்ற ஒன்றே கிடையாது, இவர்தான் முதன்முதலாக செயற்கை வெளிச்சம் தரும் "பிளாஷ் லைட் 'கருவியை வெளிநாட்டில் இருந்து தருவித்து மன்னர் ஒருவரின் திருமணத்தை எடுத்திருக்கிறார். அதன் பிறகே "பிளாஷ் லைட்டின்' உபயோகம் பரவலானது.
தான் பிறந்து வளர்ந்த ஆமதாபாத்தை பெரிதும் நேசிக்கக் கூடியவரான இவர் எடுத்த பழைய ஆமதாபாத், சபர்மதிகரையோர படங்கள்தான், இப்போதும் பராம்பரிய படங்களாக, பலரது வீடுகள், ஒட்டல்கள், அலுவலகங்களை அலங்கரித்து வருகிறது. பழைய ஆமதாபாத் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு இவரது படங்கள் மட்டுமே இன்றும் சான்றாக விளங்குகிறது.



ரயில் என்பது அபூர்வமான, வேடிக்கையான பொருளாக கருதப்பட்ட காலத்தில், இவர் எடுத்த ரயில் தொடர்பான படங்கள் இப்போதும் எப்போதும் ரசனையை தருபவையாகும்.
இவர் எடுத்த படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தாலும், இவருக்கு பத்திரிகையின் பரபரப்பு ஒத்துவராததால் வர்த்தக ரீதியிலான புகைப்படக் கலைஞராகவே இருந்துவிட்டார்.



ஆமதபாத்திற்கு பிறகு காஷ்மீர் இவருக்கு மிகவும் பிடித்த இடம். கேமிரா தொழில்நுட்பம் வளரும் போதெல்லாம் அதனை செயல்படுத்திப் பார்க்க இவர் செல்லும் இடம் காஷ்மீர்தான்.
அப்போது இருந்த அமைதி, பசுமையான சுற்றுச்சுழல், நெருக்கடியில்லாத போக்குவரத்து, குறைந்த மக்கள் தொகை, வறட்சியில்லாத பூமி, வளமான, இனிய, எளிய, பொறுமையான மக்கள் என தான் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த ஒவ்வொன்றும் சொர்க்கமானவை என்று நினைவு கூறுகிறார். இந்த தலைமுறையினர் மட்டுமல்ல இனி எந்த தலைமுறையினருக்கு அந்த இனிய தருணங்கள் கிடைக்காது என்று எண்ணும்போது வருத்தமாகவே இருக்கிறது என்று சொல்லும் பிரன்லால் படேலின் மகன், பேரன் உள்ளிட்ட இவரது குடும்பத்தார் பலரும் புகைப்படத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், இப்போதும் தனக்கு பிரியமான படங்களை எடுக்க விரும்பினால், தனக்கான கேமிராவை தூக்கிக்கொண்டு படம் எடுக்க கிளம்பிவிடுவார்.



வயது, உடம்பிலும், முகத்திலும் மட்டுமே சுருக்கம் ஏற்படுத்துமே தவிர மனதில் அல்ல. மிதமான உணவு, யோகா, மூச்சுப்பயிற்சி தவிர பெரிதாக நான் ஒன்றும் என் உடம்பிற்காக மெனக்கெடுவது இல்லை.
யார் ஒருவர் தன் செய்யும் தொழிலை நேசமுடன் செய்கிறார்களோ அவர்களுக்கு சோர்வும் கிடையாது, தோல்வியும் கிடையாது என்று சொன்ன பிரண்லால் பட்டேல் இன்னும் பல ஆண்டுகாலம் வாழ வாழ்த்துவோம்

                                                       - எல்.முருகராசு.
 

அரிதான நாணயங்கள் கிடைத்தால் பாராமுகமாயிருக்காதீர்! : இரா.கிருட்டிணமூர்த்தி



ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.
உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இவை பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் பல உள்ளன. பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் < http://thiru-padaippugal.blogspot.in/2011/02/golden-period-of-gold-coins-andre.html> என்னும் கட்டுரையில் விரிவாகக் காணலாம். இவற்றுக்கெல்லாம் சான்று பகரும் வண்ணம் கிடைக்கும் நாணயங்களை ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்கப் பாதுகாக்க வேண்டும். தமிழக வரலாற்றையும் நாகரிகச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும்  தொன்மையையும் உணர்த்த இவை உதவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



அரிதான நாணயங்கள் கிடைத்தால் பாராமுகமாயிருக்காதீர்! : முனைவர் இரா.கிருட்டிணமூர்த்தி வேண்டுகோள்

சென்னை: "அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்' என, "தினமலர்' நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். "மெட்ராஸ் காயின் சொசைட்டி' அமைப்பின் சார்பில், "நாணய கண்காட்சி 2013' ராஜா அண்ணாமலைபுரம், குமார ராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கியது. "மெட்ராஸ் காயின் சொசைட்டி' தலைவர் வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

"தினமலர்' நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாணய கண்காட்சியை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, காசு இயல் அல்லது நாணயவியல் பற்றி, 1984ம் ஆண்டிற்கு பின் தான், வெளியில் தெரிய துவங்கியது. அதற்கு முற்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்கள் அனைத்தும், ராஜ ராஜன் காலத்து நாணயங்கள் குறித்து, ஏதோ ஒரு பக்கத்தில் மட்டும், தகவல் எழுதியிருப்பர். கடந்த, 1984ம் ஆண்டு, நான் மதுரையில் ஒரு நாணயவியல் வியாபாரியிடம், ஒரு சதுர காசை விலைக்கு வாங்கினேன். அதன் முன்புறம் குதிரை இருந்தது. அதன் மேல், "பெருவழுதி' என்று, தமிழ் பிராமி எழுத்து முறையில் குறிக்கப்பட்டிருந்தது. பின்புறம், கோட்டு வடிவத்தில், மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. "பெருவழுதி' என்ற பெயர், சங்க கால இலக்கியமான, புறநானூற்றில் உள்ளது.
முதன் முதலாக, "பெருவழுதி' என்ற பெயர் பொறித்த, நாணயம் கிடைத்த பிறகு தான், சங்க காலத்தில் மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர் என்ற கீர்த்தி வெளிவந்தது.

உருக்கு ஆலைக்கு விற்றனர் : அதற்கு முன், வரலாற்று நூல் ஆசிரியர்கள், "சேர, சோழ, பாண்யர்கள், சிறு வட்டத்தில் ஆண்ட மன்னர்கள்; அவர்களுக்கு நாணயம் வெளியிடும் தொழில்நுட்பம் கிடையாது; அவர்களுக்கு நாணயத்தின் தேவையும் கிடையாது; பண்ட மாற்று முறைதான் இருந்தது' என்று கூறி வந்தனர். ஆனால், இந்த "பெருவழுதி' நாணயம் கிடைத்த பிறகு, அந்த கூற்று மாற்றப்பட்டது. 1987ம் ஆண்டு, கரூர், அமராவதி ஆற்றில் இருந்து, ஏராளமான, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கிரேக்க நாட்டு நாணயங்கள், சேரர் நாணயங்கள் கிடைத்தன. தகவலறிந்து, நான் அங்கு சென்று பார்த்த போது, கரூர் பஜாரில் உள்ள, சிறு சிறு பாத்திரக் கடைகளில் எல்லாம், அவற்றை குவித்து வைத்திருந்தனர். அந்த நாணயங்கள் குறித்து கேட்ட போது, அவர்கள், "கடந்த ஒரு மாதமாக கிடைக்கிறது. இவற்றில், ஐந்து டன் நாணயங்களுக்கும் மேலாக, திருப்பூர் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்து விட்டோம்' என்று கூறினர்.
அதைக் கேட்டதும் நான், அளவில்லாத துக்கம் அடைந்தேன். முதன் முதலாக, அங்கு தான், சங்க கால சேரர் நாணயங்கள் கிடைத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சோழர், பாண்டிய, மலையமான் காலத்து நாணயங்களும் கிடைத்து விட்டன. கரூரில் கிடைத்த, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த நாணயங்களை சுத்தம் செய்து, ஆய்வு மேற்கொண்டு, நூல் எழுதினேன். அதற்கு முன் இந்தியாவில், அது குறித்து யாரும் நூல்கள் எழுதவில்லை.

பீட்டர் பர்கேஸ் என்ற, ஜெர்மன் பேராசிரியர், என் நண்பர். நான், 1985ம் ஆண்டு முதல், தமிழ்நாடு நாணய சங்கம் ஆரம்பித்து, நடத்தி வந்தேன். ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, கருத்தரங்குகள் பல நடத்தினேன். பிற்காலத்திய, ரோம நாட்டு செப்பு நாணயங்கள் குறித்த புத்தகங்கள் எதுவும், எழுதப்படவில்லை. ஆனால், பீட்டர் பர்கேஸின் மாணவர் ஒருவர், இலங்கையில் கிடைத்த ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு புத்தகங்கள் எழுதினார்.
அவருக்கு என்னிடம் இருந்த நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பி, "அவை எந்த காலத்து நாணயங்கள் என்று அடையாளம் காட்டினால், அது குறித்த கட்டுரை எழுத, வசதியாக இருக்கும்' என, கடிதம் எழுதினேன். அதற்கு அவர் எழுதிய பதிலில், "உங்களுக்காக நான் எனது நேரத்தை செலவிட வேண்டுமா? இனி இதுபோன்ற கடிதங்களை எழுதாதீர்' என்று கூறியிருந்தார். என் வாழ்நாளில், அது போன்ற அவமானம் அடைந்ததில்லை. இருப்பினும் விடாப்பிடியாக, பிற்கால ரோம நாட்டு நாணயங்கள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசையில், ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியர் ஒருவரை, தொடர்பு கொண்டேன். லண்டன் சென்று, அவரை சந்தித்தேன். அங்கிருந்த 150 ஆண்டு பழைமை வாய்ந்த இங்கிலாந்து நாட்டு நாணயவியல் சங்க நூலகத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நூலை என்னிடம் காண்பித்தார். அது ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்த நூலின் பெயரை எழுதி கொண்டு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கு சென்று, என் நண்பர்கள் உதவியுடன், அந்த நூலின் புகைப்பட பிரதி ஒன்றை பெற்று, இந்தியா திரும்பி, அது குறித்த நூலை எழுதினேன்.
அது தான், நாணயம் குறித்த, என் முதல் ஆங்கில நூல். அந்த நூல், மிக பிரபலமானது. தென்னிந்திய நாணய சங்கம் ஆரம்பித்தோம். அது தமிழகம் முழுவதும், கிளைகளுடன் வளர்ந்துள்ளது.
இப்போதெல்லாம், பழங்கால நாணயங்களே வாங்க முடியாது; நல்ல விலைக்கு போகிறது.
நான் வைக்கும் ஒரே கோரிக்கை இது தான். உங்களிடம், அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அவற்றை தயவு செய்து, நாணயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களிடம் காண்பியுங்கள். அல்லது அவற்றின் புகைப்படங்களையாவது கொடுத்து, ஆராய சொல்லுங்கள். பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

பிரிகேடியர் பாக்கியநாதன் பேசுகையில், ""இந்த சொசைட்டி, 1991ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதற்கு முன்பாக துவங்கியிருந்தால், நானும் கண்காட்சியில் கலந்து கொண்டிருப்பேன். நான், நாணயங்களின் மகத்துவம் அறிந்தவன். இந்த நாணயங்களை சேகரித்து பாதுகாப்பதன் மூலம், நமது பாரம்பரியத்தையும் காப்பாற்றுகிறோம்,'' என்றார்.

"மெட்ராஸ் காயின் சொசைட்டி' தலைவர் ராவ், நன்றி கூறினார். நேற்று துவங்கிய இந்த கண்காட்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 65 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
அவற்றில், பழங்காலத்து நாணயங்கள், பல நாடுகளின் கரன்சிகள், பழங்காலத்து பொருட்கள் உள்ளிட்டவை, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாணயங்களை சேகரிக்கும் மாணவ, மாணவியருக்கு, இந்த கண்காட்சி, மிகவும் பயனுள்ளதாக அமையும்.

TNA MP cautions on PC elections harped on by Geneva resolution

TNA MP cautions on PC elections harped on by Geneva resolution

[TamilNet, Friday, 29 March 2013, 15:05 GMT]
“We are a distinct Nation with historic records in this soil, proving our evolution [as a Nation]. The Sinhala Nation destroyed us. A nation was destroyed by another nation here. But, the international community has handed us over to those who destroyed us to investigate the crimes against us; we have been handed over to those who fired upon us; to those who fired shells on us; to those who fired phosphorus bombs against us; to those who fired cluster munitions on us. How can you expect justice from this country [of the Sinhala Nation],” asked Tamil National Alliance (TNA) parliamentarian Sivagnanam Sritharan, in a press meet in Jaffna on Wednesday. “Therefore, an intervention by the international community is a must and an urgent one,” failing which the existence of the Tamil nation in the island would be wiped out from the maps of the world, he further said.

Sritharan press conference
Tamil National Alliance (TNA) parliamentarian S Sritharan addressing journalists at Jaffna Press Club on Wednesday


Mr Sritharan was addressing media in Jaffna at the Jaffna Press Club on Wednesday.



The TNA parliamentarian also noted that the resolution passed at Geneva was making reference to conduct Provincial Council elections to the Northern Province.

“We find ourselves in a situation where we have to take part in the PC elections. Since we have already taken part in the PC elections in the East, we can’t denounce the PC elections in the North. If we don’t take part, it would be viewed as a wrong thing. Since the recently passed UNHRC resolution, brought out by the USA for the second time, also mentions the elections to Northern Province, taking part in the PC elections has become a necessity as well as a pressure thrust upon us,” he said.

But, the SL government aims at deploying the All Ceylon Muslim Congress led by SL minister Rishard Badurdeen, the EPDP led by Douglas Devananda, the SLFP [in North] led by Geetanjali or Angkayan, the SLMC, various other factions and the so-called independent groups to contest separately in the Northern PC elections, Sritharan said.

“The SL government has schemed a plan to [divide and conquer]. Unlike in Jaffna peninsula, this would have an impact in Vanni – in Ki’linochchi, Mannaar, Vavuniyaa and Mullaiththeevu,” Mr Sritharan said.

Citing that there are only 3 seats in Ki’linochchi district, the grassroots oriented parliamentarian said that even if the TNA polled 40,000 votes, it will only receive one seat under the proportional representation system as all parties that manage to poll more than 5% votes would have a claim for a seat. The exact number of seats from Ki’linochchi is yet to be announced by the SL Department of Elections.

The SL government is now gifting motorbikes to those former LTTE members who are now brought under the so-called Civil Security Division, where they are given monthly wages of 18,000 rupees each. They are held under the grip of the SL government.

Likewise, there are 67,000 homeless people, 35,000 in Ki’linochchi district and 32,000 in Mullaiththeevu district. Following the resolution passed in Geneva, the SL government is aiming to use these details to obtain further funds from foreign countries as if it is going to help these people and utilize the opportunity to trap the people into its fold till the elections are over.

“This is purely an exercise aimed at the PC elections, the Tamil parliamentarian said adding that the EPDP would also have its arsenal of arms, violence and powers to be deployed for the manipulation of the voting. I don’t need to tell how Rishard Badurdeen would behave under elections, as you are all aware,” Mr Sritharan said. “It is an easy task for these parties to gain 5% voting through manipulations”.

“They will contest the elections separately, but after the elections, the SL government would bring an alliance consisting of them to seize the power of the Provincial Council,” he said adding that similar tactics was used by the SL government in the East.

“We are not prepared to fool our people that this PC system would bring in solutions to our problems. Neither are we prepared to fool our people that a political solution would come through this system. Perhaps, the act of taking part in these elections could set the course for the demise of the TNA. Perhaps, we may get into a situation where we can’t talk anymore about resolving our national question,” he said adding that the TNA has been placed at a situation where it cannot ignore taking part, as those are opposed to the TNA would be filling the seats of the PC. However, he said: “With the backing of our people and using the PC elections, we have to again prove that we are united and remain powerful under the TNA.”

Mr Sritharan also expressed displeasure on the conduct of Ranil Wickramasinghe, who has offered to save the SL State by convening an all-party meeting. Except, Mano Ganeshan, who opposed the proposal, even those whom we go around boasting as ‘progressive forces’ among the Sinhalese wearing red shirts were keeping mum with the UNP, he said.

Coming hard on the SL propaganda being waged by the SL Governor, Major General (retd.) GA Chandrasiri, that the people under the LTTE had no development for 30 years, the TNA parliamentarian said the real development of the people of Vanni was witnessed under the LTTE-run civil administration. This was much more meaningful than what the SL government is bragging as ‘development’ it had brought forward, Sritharan said.

Even, most of the buildings that the SL government has claimed opened for civilians along the A9 road after the war, were in fact buildings that were built by the LTTE for the civilian infrastructure, he said, citing examples and challenging the SL government to disprove his claim.

SL military launches inteligence operations to monitor Muslim youth

SL military launches inteligence operations to monitor Muslim youth of Mannaar

[TamilNet, Friday, 29 March 2013, 13:43 GMT]
While the Sinhala Buddhist organizations, with alleged backing from certain sections of Colombo government, have stepped up attacks on places of worships of the Muslims in the South and a hate campaign against Halal meet is being whipped up, the Sri Lankan military intelligence operatives in Mannaar district have started to ‘observe’ Muslim youth under a military operation termed as ‘preventive measures’. The SL police sources in Mannaar said Muslim youth who might contemplate on armed resistance against the Sinhala extremist elements in South are being monitored in recent days, both day and night.

The Muslim organisations in the Mannar district, the activities of Muslim clergy and any other activities in relation to the Muslim places of worship are under scrutiny by the intelligence forces.

The SL operation has been launched following the Halal food controversies and the killing of two Sinhala officers in the district.

Information regarding any possible existence of a Jihad movement in Mannar district, whether there existed a Jihad movement earlier, the details of the Islamic organisations that function at present, information about the funding sources and the persons who provide leadership etc., are being collected in a confidential manner, news sources further said.

Muslim dominated areas of Mannaar city, such as Moor Street, Uppuk-ku'lam, Periya-kadai, Puthukkudiyiruppu, Karaisal are continuously monitored by SL intelligence operatives during the day time. SL military personnel have stepped up monitoring duties at nights.

Further, particulars relating to individuals who retired from government service are also being collected in a covert manner in the Mannaar district.

The SL intelligence operatives are also collecting details such as the department they belonged to, whether they receive funds from abroad, where and with whom they stay at present etc., the news sources further said.

வெள்ளி, 29 மார்ச், 2013

கொரியாவில் இனப்படுகொலை மீதான கவன ஈர்ப்புக் கூட்டம்

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!


இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது .

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் .

மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்

௧. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் .

௨. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும்

௩. இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் .

௪. தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் .

௫. ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் .

௬. இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ , கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் .

௮. பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது .

இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர்
Like · ·

செருமனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...

12 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் உயரம் தாண்டுதலில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.

கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டெலானா 1.74 மீட்டர்தான் தாண்டியிருந்தார்.

செங்கல் சூளையில் வேலை செய்து 70 ரூபாய் தினக்கூலி பெற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் மாரியப்பனின் தாய் சரோஜா. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தனது மகனுக்கு தகுதி இருந்தும் வறுமை தடையாய் இருப்பதை எண்ணி வேதனையில் உழல்கிறார்.

தேசிய அளவிலான போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபித்த மாணவர் மாரியப்பன், சர்வதேச போட்டிகளிலும் அதனை நிரூபிக்க முனைப்பாக இருக்கிறார்.

அதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கித் தருமானால், மாரியப்பனால் ஃப்ரான்சில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த வாய்ப்புக்காகவும் உதவிக்காகவும் காத்திருக்கிறார் மாரியப்பன் நம்பிக்கையுடன்.

காணொளி: http://youtu.be/WeC_CN1vNAs

www.puthiyathalaimurai.tv

திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்



பாவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் இன்று  பதவிகளை இழந்த வெறுப்பிலும் வேதனையிலும் குமுறுகிறார். அவருக்கே தெரியும் என்பதால் விரிவாக எழுத வேண்டியதில்லை. எனினும் ஒரு கேள்வி. அப்புறம் எதற்கு அப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! இப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! என்றெல்லாம் வெற்று மிரட்டல்கள் அவ்வப்பொழுது?  பழைய கலைஞராக இருந்திருந்தால் இதனால் என்ன நன்மை விளைந்தது என்று முதன்மையில்லை. தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் முடிந்ததைச் செய்தோம் என்ற மன அமைதி எங்களுக்கு என்றுதானே கூறியிருப்பார்.  அடிக்கடித் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் மூலம் அப்பொழுதும் ஒன்றும் நடந்திருக்காது எனப் பிதற்ற வைத்தவர் இப்பொழுது தானே ... எடுத்திருக்கிறார். கலைஞரே! உங்களை இன்னும் பல்லாயிரவர் நம்புவதால் இனியேனும் மாறக்கூடாதா? தமிழர் வரலாற்றில்  மாற்றம் ஏற்படுத்தக்கூடாதா? தமிழ் ஈழத்திற்கு உதவக்கூடாதா? உங்களுக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கக்கூடாதா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா என்று திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2009-ம் ஆண்டே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாராம்.
ஆனால் நான் (கருணாநிதி) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வர் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றினேன் என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி ராஜிநாமா நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் எதை ஜெயலலிதா நாடகம் என்கிறார்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக அப்போது ஜெயலலிதா, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குப் புரியவில்லை என்று கூறினார்.
இப்படித் தான் கூறியதையே வசதியாக மறந்துவிட்டு பேசுவதற்குப் பெயர்தான் இரட்டை வேடம்.
இலங்கைப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா, சட்டப்பேரவையில் தீர்மானம் என திமுக ஆட்சியில் கண்துடைப்பு நாடகங்கள்தான் நடந்தன என்று ஜெயலலிதா கூறுகிறார்.
அப்படியென்றால் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை  ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா?
ஜெயலலிதா போன்ற சிலரின் அபிலாஷையின் காரணமாக மத்திய அரசில் இருந்து திமுக இப்போது வெளியேறிவிட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைத் திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது. ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை.
2009-ம் ஆண்டும் மத்திய அரசிலிருந்து திமுக விலகியிருந்தால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி

சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இந்தியா திருத்தம் கொண்டு வந்து விட்டதா? அல்லது பார்லிமென்ட்டில் தான் தீர்மானம் எதுவும் கொண்டு வந்து விட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்து விட்டது. இது ஒன்று தான் நடந்துள்ளது. ஆனால் இதற்காக கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, தி.மு.க., ஏன் வெளியே வரவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், இவையெல்லாம் தி.மு.க., மீது பழி போட நடக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார். வரலாறு தெரிந்தவர்கள் இது போன்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தான் இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 1956 ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் தனது நடவடிக்கைகளை அறிவார்கள் என்றும், அதே வேளையில், கடந்த 2002ம் ஆண்டு பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும் என ஜெ., தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை மக்கள் மறந்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் உறவுகளை முறித்துக்கொள்ள தி.மு.க., தயங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், இதன் மூலமாக மத்திய அரசு கவிழ்ந்து தான் பிரதமராக வரலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் இவ்வாறாக கூறிவருவதாக கருணாநிதி பதிலளித்துள்ளார். சேது சமுத்திர திட்டம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவற்றில் முதல்வர் ஜெயலலிதா தான் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழர்களை க் கொன்று குவித்த வெறியைக் கொண்டாடும் இலங்கை







கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றதை உலகிற்கு பறைசாற்றும் வகையில், இலங்கை அரசு பயங்கரவாத சுற்றுலா ( டெரர் டூரிசம்) என்ற பெயரில் சுற்றுலாவை நடத்தி வருகிறது.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக அதிபர் ராஜபக்சே உலக நாடுகளிடையே பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ள நிலையில், தற்போது, தமிழர்களின் சோகத்தை தங்களது வெற்றியாகக் காட்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகிறது.இதன்படி, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்ற இடங்களை காட்சிப்பொருளாக்கி, அதை தங்களது வெற்றியின் சின்னங்களாகக்கருதி, சுற்றுலாவாக வெளிநாட்டினருக்கு அதை எடுத்துக்காட்ட முயற்சி செய்து வருகிறது. பொதுவாக ஒரு நாடு எதிரி நாட்டுடன் நடத்திய போரில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக்கொண்டு போர் நினைவிடங்களை அமைப்பது வழக்கம். ஆனால் இலங்கையோ, தனது சொந்த நாட்டு மக்களை கொன்றதை வெற்றியாக சித்தரித்து இத்தகைய போர் நினைவிடத்தை உருவாக்கியுள்ளது. பயங்கரவாத சுற்றுலாவின் ஒருபகுதியாக, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகனங்கள் போரின் போது தீக்கிரையாக்கப்பட்ட எச்சம் தற்போது ஊமை சாட்சியாக விளங்கி வருகிறது. இதே போல், மனித உரிமை அமைப்புகளால் உலகின் மிகவும் பயங்கரமான இடம் என வர்ணிக்கப்படும் இடமும் இந்த சுற்றுலாவில் அடக்கம். இதில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல்மாதம் ஒரு லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், கடந்த 2006ம் ஆண்டு கடற்கரை ஒன்றில் ஜோர்டான் நாட்டு கப்பலை ஒன்றை கைப்பற்றிய விடுதலைப்புலிகள் அந்த கப்பலை உடைத்து வாகனங்கள் செய்த இடமும் இடம்பெற்றுள்ளது. மேலும், போரின் போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இந்த பயங்கரவாத சுற்றுலா உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





 
தமிழர்களை க் கொன்று குவித்த வெறியை க் கொண்டாடும் இலங்கை அரசு: 
அதிர்ச்சி அறிக்கை

துவரை நடவில் மாற்று ச் சிந்தனை!

துவரை நடவில் மாற்று ச் சிந்தனை!நாற்றங்கால் முறையில், துவரை பயிர் செய்வது பற்றி விளக்கும், வெங்கடகிருஷ்ணன்: நான், தென்காசி வேளாண் துறையில், உதவி இயக்குனராக பணி செய்கிறேன். துவரை போன்ற பயறு வகையை, நாற்றங்கால் முறையில் நடவு செய்யாமல், விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பது தான் வழக்கம். நெற்பயிரைப் போன்று, துவரையையும் நாற்றங்கால் முறையில், ஏன் பயிர் செய்ய முடியாது என்ற மாற்று சிந்தனையில் உருவானது தான், இந்த திட்டம். துவரையில், அதிகப் புரதச் சத்து உள்ளது. நம் மாநிலத்தில், பழங்காலம் முதல் இதுவரை, விதை தூவல் முறையில், விதைகளை நேரடியாக நிலத்தில் பயிரிடுவது தான், நடைமுறையில் உள்ளது. இம்முறையில் பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், விவசாயிகள், துவரை சாகுபடியில் அதிக நஷ்டம்அடைந்தனர். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென்காசி வட்டாரத்தில், மூன்று விவசாயிகளின் வயல்களை தேர்ந்தெடுத்து, நாற்றங்கால் முறையில் துவரையை பயிரிட்டோம். நாற்று விட்ட, 25 நாட்கள் கழித்து, நாற்றுகளை பிடுங்கி, வரிக்கு வரி, 6 அடியும்; செடிக்கு செடி, 2 அடியும் இடைவெளி விட்டு, நடவு செய்தோம். பழைய முறையில், 1 ஏக்கருக்கு வெறும், 400 கிலோ துவரை மட்டுமே கிடைக்கும். ஆனால், நாற்றங்கால் முறையில், 800 கிலோ துவரை கிடைத்தது. வழக்கத்தை விட, 50 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை, விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. 150 நாட்களில், 80 சதவீத காய்கள், நன்கு முற்றியதும், அறுவடை செய்து பயன் பெறலாம். விதைத் தூவல் முறையில் விதை விதைக்க, 1 ஹெக்டேருக்கு, 10 கிலோ விதைகள் தேவைப்படும். ஆனால், நாற்றங்கால் முறையில், 2 கிலோ விதைகளே போதுமானது. நீர் பற்றாக்குறையுள்ள விவசாயிகளும், நடவு முறையில் பயிரிடலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். துவரை பயிர் நடவுக்கு, ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றது. வறண்ட பூமியான நாகை மாவட்ட விவசாயிகள், மழை பெய்யும் காலங்களில், மானாவாரி பயிராகவும் பயிரிடலாம்.