வெள்ளி, 12 அக்டோபர், 2012

குறறவாளியிடம் தீர்வு கேட்கும் அறிவாளிகள்

 குறறவாளியிடம் தீர்வு கேட்கும் அறிவாளிகள்

இலங்கை த் தமிழர் சிக்கலுக்கு அரசியல் தீர்வு: தலைமையர் உறுதி

புதுடில்லி: இலங்கையில், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ.,) பிரதிநிதிகளிடம், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டும்; தமிழர்கள் கண்ணியமாகவும், சுய மரியாதையுடனும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற நிலையில், இந்தியா உறுதியாக உள்ளது. பல ஆண்டுகளாக தொடரும், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா எப்போதும் ஆதரவு தரும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

இதன்பின், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்காக, ராஜபக்ஷே அரசால் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் தேர்வு குழுவில் இடம் பெறுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசீலனை செய்யும். அதேநேரத்தில், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, ராஜபக்ஷே தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு சம்பந்தன் கூறினார். கூட்டமைப்பினர், பின், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசினர்.

இழிபொருள் தகவல்களுக்கு மூன்றாண்டு ச் சிறை : 3 years imprisonment for porn messages and pictures

இழிபொருள் தகவல்களுக்கு  மூன்றாண்டு ச் சிறை
ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மூன்றாண்டு சிறை

புதுடில்லி: மொபைல் போனில், ஆபாச படங்களை அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து, எஸ்.எம்.எஸ்., மற்றும் மெயில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக சித்தரித்தும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, தண்டனை வழங்கும் வகையில், 1986ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு, பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துள்ளன. மொபைல் போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம், தெரிந்தோ, தெரியாமலோ தகவல்களை எளிதில் பெற முடிகிறது. இதை சிலர், தவறாகப் பயன்படுத்தி, மொபைல் போனில் ஆபாச படங்களை, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அதிகரித்துள்ளது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து, இணையதளத்தில் பரவ விடுவது போன்ற செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில், பெரும்பாலும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆபத்தை உணராமல் சிக்கிக் கொள்கின்றனர். "இது போன்ற, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்டிலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பிரதமர் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சட்ட திருத்தம் கொண்டு வர, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, பெண்களை இழிவுபடுத்தி, சித்தரித்து மோசமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வகை செய்யும், ஐ.ஆர்.டபிள்யூ.ஏ., சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மின்னணு தொடர்பு சாதனங்களான, மொபைல் போன் மற்றும் இணையதளம் வழியாக, பெண்களை ஆபாசமாக சித்தரித்து படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சம், மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த குற்றத்தை, முதல் முறையாக செய்து மாட்டிக் கொள்பவருக்கு, தற்போது, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்சம், 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை தண்டனை அனுபவித்து, இரண்டாவது முறையாக, இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், 1 லட்சம் அபராதம், 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரிகள், சந்தேகப்படுவோரின் வீடுகளைச் சோதனையிடவும், பறிமுதலும் செய்யலாம். இது மட்டுமின்றி, விளம்பரம், ஓவியம், எழுத்து என, எந்த வடிவிலும் பெண்களை இழிவுபடுத்தி, படங்களோ, வாசகங்களோ அமைந்தால், அதை தடுக்கும் வகையில், இந்த சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம், வரவிருக்கும் பார்லிமென்டின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படியொரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, பல உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதால், இது கட்சி பேதமின்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சட்ட வடிவமாக்குவதற்கு முன், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

வியாழன், 11 அக்டோபர், 2012

ஃச்‌டெர்லைட்டு ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதம்

ஃச்‌டெர்லைட்டு ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதம்

First Published : 11 October 2012 06:51 PM IST  
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகி வாதிட்டதாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு இன்று (11.10.2012)  உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று  வைகோ ஒன்றேகால் மணி நேரம் பேசினார்.
வைகோ: இன்று மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டு இருப்பது சுற்றுச்சூழலை நாசமாக்கும் அபாயமாகும். காற்று மண்டலத்தை, நிலத்தடி நீரை, பூமியை மாசுபடுத்தி அழிக்கும் நச்சுகளின் தாக்குதலில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாப்பதுதான் எழுந்துள்ள அறைகூவல் ஆகும். தாமிர உருட்டு ஆலையை முதலில் குஜராத் மாநிலத்தில் நிறுவ ஸ்டெர்லைட் கம்பெனி முயன்றது.
சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளையும் என அஞ்சி, குஜராத் மாநில அரசு அனுமதிக்க மறுத்தது. பின்னர் கோவா மாநிலத்தை ஸ்டெர்லைட் கம்பெனி அணுகியது. அந்த அரசும் மறுத்தது. பின்னர் மராட்டிய மாநில அரசின் அனுமதியை எவ்விதத்திலோ பெற்று, 1993 இல் இரத்தினகிரி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிறுவப்பட்டது. 250 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. அம்மாவட்ட விவசாயிகள், குறிப்பாக அல்போன்சா மாந்தோப்பு விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். போராட்டம் பெரும் வன்முறைப் போராட்டமாகியது. உருட்டுக் கம்பிகளுடனும், சம்மட்டிகளுடனும் போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கினர்.
மக்கள் கிளர்ச்சியின் நியாயத்தை உணர்ந்து மராட்டிய மாநில அரசு, தான் வழங்கிய லைசென்சைத் தானே இரத்து செய்து, மாநிலத்தை விட்டு விரட்டி அடித்தது. ஸ்டெர்லைட் கம்பெனி 1994-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அன்றைய தமிழ்நாடு அரசை அணுகி நாசகார நச்சு ஆலையை அமைக்க அனுமதி பெற்றது. தூத்துக்குடியை அடுத்த கடலில் 21 தீவுகள் உள்ளன. இவை தேசிய கடல்பூங்கா ஆகும். இத்தகைய சுற்றுச்சூழலில் நுண்ணிய பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது. ஆனால், ஸ்டர்லைட் ஆலையில் இருந்து 6 கிலோமீட்டர், 7 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர் தொலைவில் கடல்பூங்காத் தீவுகள் அமைந்துள்ளன. எனவே, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை அப்பட்டமாக மீறி ஆலை அமைக்கப்பட்டது.
இது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காரணங்களை நீரி நிறுவனம் சுட்டிக் காட்டியதன்பேரில் சென்னை உயர் நீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது. நீதிபதி அவர்களே! இந்த உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் இம்மாதிரி பிரச்சினைகளில் நிபுணர்கள் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியும் என்று சொன்னீர்கள்.
நிபுணர்களின் நிலைமையை நான் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீரி நிறுவனத்தின் இயக்குநராகச் சுற்றுச்சூழல் மேதை பேராசிரியர் கண்ணா இருந்தார். 1998-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை விவசாய நிலங்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துப் போடும்; அப்பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு நேரும் என்று கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் சொல்கையில், ‘எங்கள் நீரி நிறுவன எல்லைக்குள் எந்தத் தொழில் நிறுவனமும், கம்பெனியும் பேரம் பேச நுழைய முடியாது’ என்றார். பல வெளிநாடுகளிலே இருந்து அவருக்கு வேலைக்கு அழைப்புகள் வந்தன. நான் இந்தியாவில்தான் சேவை செய்வேன் என்று கூறி மறுத்தார். தர வேண்டிய பதவி நீட்டிப்பை மத்திய அரசு தரவில்லை. அவர் ஓய்வு பெற்றார். அதற்குப்பின் அதே நீரி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை கொடுத்தது.
நீதிபதி பட்நாயக்: ஸ்டெர்லைட் ஆலை எப்பொழுது தொடங்கப்பட்டது? நீங்கள் எப்போது வழக்குப் போட்டீர்கள்?
வைகோ: 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் ஆலை தொடங்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டும், 1997-ஆம் ஆண்டும் விவசாயிகளையும், மீனவர்களையும் திரட்டி தொடர்போராட்டங்களை நான் நடத்தினேன். பிரச்சார நடைப்பயணம் சென்றேன். பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டி அறப்போர் நடத்தினேன். நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1997-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் நாங்கள் அறப்போர் நடத்திய மறுநாள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், நாங்கள் வன்முறையில் ஈடுபடப் போவதாக ஒரு செய்தியைப் பரப்பியது. அதனால், இனி இங்கு போராட்டம் நடத்தப்போவது இல்லை. நீதிமன்றத்தில் போய் போராடுகிறேன் என்று வழக்குத் தொடுத்தேன்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இரண்டாவது நிபந்தனை யாதெனில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளாகம் அமைக்க வேண்டும் என்பதாகும். 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-இல் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனைக் குறைக்கச் சொல்லி ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. அடுத்த ஏழாவது நாள் ஆகஸ்டு 18-இல் பசுமை வளாகத்தை 250 மீட்டரிலிருந்து, 25 மீட்டராகக் குறைத்தது. 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-இல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேற்கூறிய இரண்டு நிபந்தனைகள் மீறப்பட்டதைச் சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தீர்ப்பு அளித்தது.
நீதிபதி பட்நாயக்: உணர்ச்சிகளின் அடிப்படையில் நீதிமன்றம் இயங்க முடியாது. இந்தக் காரணங்களுக்கு எல்லாம் ஆலைகளை மூடினால், தொழிற்சாலைகளை எப்படி இயக்குவது? இதுகுறித்து நீங்கள் பதில் தர வேண்டும்.
வைகோ: விவசாயிகளையும், மீனவர்களையும், எங்கள் மக்களையும் காப்பாற்றுவதற்காகத்தான், இந்த நீதிமன்றத்திற்கு முன்னால் நிற்கிறேன். மனித உயிர்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று, அரசியல் சட்டத்தின் 21-ஆவது பிரிவு சொல்கிறதே, மாட்சிமை தங்கிய நீதிபதிகளே! நீங்கள்தானே பாதுகாக்க வேண்டும். நாங்கள் எங்கு போய் முறையிடுவது?
நீதிபதி பட்நாயக்: இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் தாருங்கள்.
வைகோ: என்னுடைய வாதத்தில் 25 சதவிகிதம் தான் நான் வாதிட்டிருக்கிறேன். ஆலையை மூடவேண்டும் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை வைத்திருக்கிறேன்.
நீதிபதி பட்நாயக்: அடுத்த விசாரணையை என்றைக்கு வைத்துக்கொள்ளலாம்?
வைகோ: எந்தத் தேதியை நீங்கள் அறிவித்தாலும் சரி.
வழக்கு விசாரணை அக்டோபர் 16-ஆம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- இவ்வாறு மதிமுக சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

First Published : 11 October 2012 04:43 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்து, கர்நாடக செயலர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இன்று புது தில்லியில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, புதுச்சேரி, கர்நாடக மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது.
அக்டோபர் மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவையும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையும் நிராகரித்துள்ளது கர்நாடக அரசு.

Sinhalese occupy grazing lands of Tamil cattle breeders in East

Sinhalese occupy grazing lands of Tamil cattle breeders in East

[TamilNet, Wednesday, 10 October 2012, 22:56 GMT]
Tamil cattle breeders face threat and intimidation from the occupying Sri Lanka Army to use their grazing grounds in Periya Maathava'nai and Mayilaththa-madu areas situated in Koara'laip-pattu South DS division of Batticaloa district. Eezham Tamils are being chased away from the area with their cattle by the occupying Sri Lanka Army that only allows the Sinhala cattle breeders to enter the grazing lands. A group of Tamil cattle breeders led by K.Thurairajasingham, a former Batticaloa district parliamentarian who is an elected member to the Eastern Provincial Council (EPC), went to the site on October 4 to see the ground situation. They were told by the occupying Sri Lanka Army camped in the area that more than one hundred Sinhalese had been settled down in the area and are preparing for the Maha paddy cultivation.

The occupying Sinhala military personnel claimed that the area, prior to 1980, was inhabited by Sinhalese and that the region comes under the Ampaa'rai district. Therefore, the area belonged to Sinhalese, the military had told the Tamil politician, who went there on a fact-finding mission.

Tamil cattle breeders say that a former Kalkuda parliamentarian late K.W.Devanayagam who was also a Minister of Justice under in the then United National Party government at that time had chased away a group of Sinhalese when they illegally occupied the land in 1978.

However, the land now occupied by the Sinhalese had been declared grazing ground for Tamil cattle breeders already in 1972 by an extra gazette notification. The gazette notification is still in force even after 2009, Tamils say.

Already about 7,500 acres in Neluk-ku'lam, 7,500 acres in Ampu-mu'rai and 7,500 areas in Tharavai area gazetted as grazing grounds for Tamil cattle breeders in Koara'laip-pattu South DS division have been brought under paddy cultivation. Now only 1,800 areas are available in Periya Maathava'nai and Mayilaththamadu as grazing grounds.

Since the capture of the area by the occupying Sri Lanka Army in 2007 army cantonments have been established in the area and Sinhalese are being brought down from the south and being settled and allowed to cultivate.

The occupying Sinhalese villagers are also alleged of killing cattle belong to Tamils for consumption and for sale.

Complaints made by the affected Tamil cattle breeders against illegal encroachment to the Tamil government politicians have not been entertained.

Meanwhile, the order made by the Batticaloa District Court for the eviction of the illegal occupants in Kevu'liya-madu Swamimalai area has not been carried out yet.

Instead, more Sinhala settlers are being brought down from South and are being settled down in the area.

No action has been taken even after complaints made at District Co-ordinating Committee meetings, Tamil civil officials told TamilNet.

Canada’s will to intervene guided by geopolitics or humanity

Canada’s will to intervene guided by geopolitics or humanity, ask Tamil activists

[TamilNet, Wednesday, 10 October 2012, 20:17 GMT]
On September 24, the Canadian capital of Ottawa announced its endorsement of the “Will to Intervene” Project. It is the fourth Canadian city to endorse external military intervention on human rights grounds. Discussion at September 24th's event centred on the present civil conflict in Syria. Given Canada's recent rupture of diplomatic ties with Iran, the prospect of intervention in Syria holds clear geo-strategic implications. "Genocide" discourse, however, masks a selectively humanitarian foreign policy whose inconsistency demonstrates Canada's political interests in conflict situations. The divergence between Canada's approaches toward Syria and Sri Lanka is instructive and Tamil activists allege that Canada does not want the “Responsibility to Protect” Eezham Tamils, and harbours no moral “Will to Intervene” against Sri Lanka.

Brainchild of Concordia University human-rights intellectual Frank Chalk and Canadian Senator Romeo Dallaire, the Will to Intervene project is organized through the Montreal Institute for Genocide and Human Rights Studies (MIGS) at Concordia. September 24th's panel highlighted the Canadian-led “Responsibility to Protect” (R2P) doctrine at the United Nations.

The R2P doctrine elicits an instructive comparison with the rhetoric and the reality of America’s 1823 Monroe doctrine – and, in particular, its 1904 Roosevelt corollary. This precept gave the USA the mandate to intervene militarily in foreign countries in case of atrocity. As American power grew, the Roosevelt corollary often justified the militarily-backed replacement of unfriendly governments within the US sphere of influence.

Invoking R2P toward Syria has serious consequences. It provides a responsibility, "should peaceful means be inadequate and national authorities manifestly fail to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity," for military intervention under UN mandate. International observers such as Genocide Watch have labelled Syrian military operations against its insurgent population "genocide and mass atrocity.

Sen. Dallaire’s moral weight as former UN commander during the Rwandan genocide, and Prof. Chalk’s juridical human-rights expertise, inform the admixture of honest intentions and geo-political interests that underpin the Will to Intervene project. It is good public relations to call genocide by its name, to express horror, and to call for military intervention against it.

However, expressing the “Will to Intervene” against genocide means more than simply to protect the innocent from slaughter. To call an act “genocide,” post-Rwanda, is to call for military action by the international community. Such action does not follow from moral, but from strategic consideration. Just as the Roosevelt Corollary invoked the word “atrocity,” the word “genocide” today functions to morally justify and conceal military advancement of financial and strategic interests.

Thus, professed allies in Canada and elsewhere have discouraged Eezham Tamils from using this simple, clear, and accurate word to describe what they have suffered. Military intervention or oversight of the post-conflict phase would disrupt orderly relations with the unitary Sri Lankan state. Those very relations, from the perspective of powerful geo-political interests, made 2009’s mass slaughter necessary.

Far from showing a will to intervene, Canada facilitated and helped lay the groundwork for genocide against Eezham Tamils.

Harmonizing its "anti-terror" policy with that of the United States, Canada's Conservative administration reversed the political neutrality of previous decades by proscribing the LTTE and the World Tamil Movement. In the country home to the largest Tamil Diaspora in the world, such action in concert with the US and EU tilted the global balance of forces in favour of the Sri Lankan Army, making a military rather than diplomatic resolution inevitable.

When genocidal military operations caused refugees to flee for their lives, by any means of transport available to them, this same Conservative administration then took the election-time opportunity to accuse these victims of being terrorists. Now, to court the Eezham Tamil vote, Ottawa threatens to boycott the Commonwealth Heads of Government summit in Colombo over "alleged human rights abuses." But, as Commonwealth Secretary-General Sharma noted recently, communication between the two parties continues.

So while “human rights abuses” took place and “both sides are responsible” (despite the casualties being massively one-sided), and although the Sri Lankan Army killed more people than Assad's forces have to date, Canada refuses to acknowledge genocide in the first case, proclaiming it loudly in the latter.

அகற்றக்கோரி அக்.,29முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்.,29முற்றுகைப் போராட்டம்

First Published : 11 October 2012 12:15 PM IST
கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்டோபர் 29ம் தேதி நடைபெறவிருக்கு முற்றுகைப் போராட்டத்தில் ம.தி.மு.க. சார்பில் மணிமாறன் பங்கேற்பார் என்று வைகோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்டோபர் 29ம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை செயின்ட் ஜார்ஜ்கோட்டை முற்றுகைப் போராட்டத்தினை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அணு உலை எதிர்ப்பாளர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்திட இருக்கும் போராட்டக் குழுவில் ம.தி.மு.க. சார்பில், ஒருங்கிணைப்பாளராக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் பங்கேற்பார் என்று கூறியுள்ளார்.

பாவம்! இந்தியா என்ன செய்யும்? இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்

இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை க் கடற்படையினர் தாக்குதல்

First Published : 11 October 2012 11:08 AM IST
இராமநாதபுரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 100 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மீன் பிடி வலைகளும் அறுபட்டன,  படகுகளை சேதமாயின.

தமிழ்ப்பல்கலைக்கழக நிலப்பறிப்பு - உண்ணாப் போராட்டம் : Hunger strike against the land snatch of T.U.


அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

தினமலர்
கொழும்பு : இலங்கையைச் சேர்ந்த, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள், மூன்று நாள், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இலங்கையில், விடுதலை புலிகளுடனான, சண்டை ஓய்ந்த பிறகு, அந்நாட்டு அரசு, தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்திய அரசும் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது. ரயில்வே திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வடக்கு மாகாணத்தில், அடுத்த ஆண்டு, தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் ஏழு பேர், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ,அழைப்பின் பேரில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சம்பந்தன் தலைமையில் டில்லி சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களை இவர்கள் சந்திக்கின்றனர்.தமிழர்களுக்கு, அதிகாரங்கள் வழங்க வழிவகை செய்யும், 13வது சட்டத் திருத்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர்.