சனி, 13 ஆகஸ்ட், 2011

Thamizh Eezham is the only solvation - Baswan: தனி ஈழமே வழி - பாசுவான்

தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு

First Published : 13 Aug 2011 03:56:10 AM IST


இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ.
புது தில்லி, ஆக. 12: ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க தனித் தமிழீழமே தீர்வாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தில்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.  'இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை ஐ.நா. அறிக்கை கண்டித்துள்ள நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு மெüனம் சாதிப்பதைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வலியுறுத்தியும்' இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சுமார் ஐயாயிரம் பேர் பங்கேற்ற இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பேசினர்.  வைகோ பேசியதாவது: தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரல் ஆகும். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபய ராஜபட்ச பேசுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முதல்வரை அவர் ஏளனமாகப் பேசியதற்காக இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். இலங்கைத் தூதரகத்தை மூடிவிட்டு, அந்நாட்டுடன் ராஜீய உறவுகளைத் துண்டிக்க வேண்டும்.  இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. இனப் படுகொலைக் குற்றத்துக்கு ஆளான அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்று இனியாவது இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கு தனி தமிழ் ஈழமே வழியாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்கு முன் தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்படவேண்டும். குடியேறிய சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். ராஜீவ் படுகொலை தொடர்பாக தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்றார் வைகோ.  யஷ்வந்த் சின்ஹா : இலங்கை பிரச்னை தொடர்பாக வைகோ விடுத்த கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதமர், இதில் தலையிட்டால் சீனா நுழைந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்தியா ஒரு வல்லரசு. நமது கடற்படையை வலுவாக நிறுத்தினால், நம்மை மீறி சீனா இலங்கையில் எப்படி கால் ஊன்ற முடியும். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வைகோ தமிழகத்தில் ஒரு மாநாடு நடத்த வேண்டும். அதில் நானும் பங்கேற்க விரும்புகிறேன்.  ராம் விலாஸ் பாஸ்வான்: இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியபோது அந்நாட்டு ராணுவமும், காவல்துறையும் தாக்கியதால்தான் அமைதி வழிக்குப் பதில் ஆயுத வழி ஏற்பட்டது.  இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்துவோம். அதில் வைகோ பங்கேற்கவேண்டும். அதுபோல் தமிழகத்தில் வைகோ மாநாடு நடத்தினால் அதில் நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தனி ஈழமே வழியாகும். அதைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார் பாஸ்வான்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய லோக் தளத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் பங்கேற்றார். 




ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 

embassy relationship should be cut with ilankai - Vaiko: இலங்கையுடனான தூதரக உறவைத் துண்டிக்க வேண்டும்:வைகோ

 
 
தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த சட்டசபை தீர்மானத்தையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தி பேசிய கோத்தபய ராஜபக்ஷேயை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்' என, வைகோ வலியுறுத்தினார்.இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ம.தி.மு.க., சார்பில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டித்தும், அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை, இலங்கையின் ராணுவச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, கேலி செய்துள்ளார். தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தீர்மானம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியது. அதை இழிவுபடுத்தவும், அலட்சியப்படுத்தவும் துணியும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பாடம் புகட்டும் வகையில், இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும்.சிங்கள ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவின் பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். சிங்கள வீரர்களை வெளியேற்ற வேண்டும்.
கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் தனிநாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. அதேபோல, ஓட்டெடுப்பு நடத்தி, அதன்மூலம் தமிழர்களுக்கும் இலங்கையில் தனி நாடு கிடைக்கச் செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் நேரில் சந்தித்தபோது ராஜிவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டேன். தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. தமிழர்கள் என்றாலே துச்சமாக நினைத்து செயல்படும் போக்கை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.-நமது டில்லி நிருபர்-

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தனது மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர் உள்பட முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நேற்று நிராகரித்தார். எனவே, இவர் தூக்கிலிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் 70 வயது தாயார், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நளினிக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது 18 வது குற்றவாளியான எனது மகனுக்கு ஏன் கருணை காட்டக்கூடாது என தனது ஆற்றாமையை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18-வது குற்றவாளி பேரறிவாளன்.
ராஜீவ் கொலையாளி தனு பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பற்றரிகளை வாங்கிக்கொடுத்து குண்டு தயார் செய்வதற்கு உதவினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி

திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி

ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-
இந்த காணொளியை அனைவரும் தரவேற்றுங்கள்
Short URL: http://meenakam.com/?p=33377

மரணத்திற்குப் பயபப்டவில்லை. குற்றமற்றவன் என்பதை மெய்ப்பிக்கப் போ்ராடுகிறேன்.

mercy petitions rejected - Seeman views: கருணை மனுக்கள் நிராகரிப்பு. – சீமான் அறிக்கை

கருணை மனுக்கள் நிராகரிப்பு. – சீமான் அறிக்கை

சீமான்
பதிவு செய்த நாள் : August 12, 2011


முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி -  முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.
தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.
தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.
இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்’ என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.
சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.
“சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.
“இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.
“நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது” எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
“நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே” என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.
“மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்” என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.
சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

இதற்கான ஒரே வழி தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் ஏற்பிசைவு வழங்குவதுதான்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

First Published : 12 Aug 2011 01:23:27 AM IST


வாஷிங்டன், ஆக.11: இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தாயகம் திரும்பும் தமிழர்கள் மரியாதையுடன் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு திரும்புவதற்கு உரிய வழிகள் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பல தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். சிலர் வெளிநாடுகளில் குடியேறினர்.  இவ்விதம் புலம்பெயர்ந்த தமிழர்கள் பத்திரமாக தங்களது இருப்பிடத்துக்குத் திரும்ப வேண்டும். அதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியபோது, தமிழீழ மக்கள் விவகாரம் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பிறகு அங்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு 2 கோடி டாலர் நிதியுதவி அளித்தது.  நடப்பு நிதி ஆண்டில் 49 லட்சம் டாலர் நிதியுதவியை அமெரிக்க மனித உரிமைகள் ஆணையம் அளித்தது.

mercy petitions rejected: இராசீவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மறுப்பு

மரணத் தண்டனைகளை  ஒழிப்பது தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கும் வரை யாருக்கும்  தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது.  உண்மையான பயங்கரமான குற்றவாளிகள் இருக்கும் பொழுது் அப்பாவிகள் உயிரைப் பறிப்பது அறமாகாது. விரைவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப் பெற வேண்டும். மரணத்தண்டனைக்கு எதிரான இயக்கத்தினரும் மனித நேய இயக்கத்தினரும் விரைந்து செயலாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ராஜிவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
First Published : 11 Aug 2011 03:09:41 PM IST


புதுதில்லி, ஆக.11: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதிசெய்ததைத் தொடர்ந்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர்.3 பேரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள்

இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே பொய்யானது ..... 21 ஆண்டு தனிமை சிறை மற்றும் காவல் துறை கொடுமைகளுக்கு பின்னும் இவர்களை தூக்கில் ஏற்ற ஏன் துடிக்கிறார்கள்?
By Gautam
8/11/2011 5:12:00 PM
எதற்கென்றே தெரியாமல் சிவராசனுக்கு பாட்டரி வாங்கிக்கொடுத்த சிறு குற்றத்திற்காக பேரறிவாளன் எனும் சிறு தமிழ் இளைஞனுக்கு தூக்கு தண்டனை என்றால் , ராடார், குண்டு, துப்பாக்கி ஆயுதங்களைக் கொடுத்து ஈழத் தமிழர்களை வேட்டையாட உதவிய சோனியா & கோ வுக்கு என்ன தண்டனை? இந்தியாவின் தமிழினத்துக்கு என்றாவது நீதி கிடைக்குமா?
By மணி
8/11/2011 4:54:00 PM
CAPTIAL PUNISHEMENT SHOULD BE ABOLISHED. 96 COUNTRIES HAVE ALREADY ABOLISHED DEATH PENALITY. HANGING CAN BE REPLACED BY LIFE IMPRISONMENT. WE ARE LIVING IN THE 21th CENTUARY AND KILLING AN OFFERDER FOR KILLING ANOTHER IS ITSELF A CRIME. LET US ALL BEHAVE AS HUMAN BEEINGS.
By Paris EJILAN
8/11/2011 4:28:00 PM
ஈழ தமிழனே இறந்தாலும் வீர மரணம் . நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்
By மண்
8/11/2011 3:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *