புதன், 27 ஏப்ரல், 2011

Cinema and cesor - dinamani article: திரைப்படமும் தணிக்கையும்

<< பேச்சில் சிறந்தவர் யாரு? - அண்ணா >>இவ்வாறு பாட்டில் இடம் பெற்றதால்  மாற்றச் செய்தவர்கள் தணிக்கைக் குழுவினர். படங்களில் தி.மு.க.கொடி இடம்பெறக் கூடாது எனத் தடுத்தவர்கள் தணிக்கைத் துறையினர். <<கூந்தல் கருப்பு!  குங்குமம் சிவப்பு >> எனப் பாடல் வரி வருவதைத் தடுக்க முயன்றவர்கள் தணிக்கைத்துறையினர். இவ்வாறு அடுக்கிக் கொண்டேபோகலாம். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் இவர்களுக்குத்தான் பதவிகள் கொடுத்து ஊக்கப்படுத்தியது தி.மு.க. அரசு-இப்பொழுது போல்! (அந்தக் கொள்கையில் எக்காலமும்  மாற்றமில்லை) எவ்வகைச் சார்பும் இல்லாதவர்களாக, இலக்கிய ஈடுபாடும் கலை,பண்பாடு,  மனியத நேயம், பகுத்தறிவு (இறை மறுப்பல்ல; இறை நம்பிக்கையும் இருக்கலாம்; நம்பிக்கை யின்மையும இரு்ககலாம்)ஆகியவற்றில் ஆர்வமும்  தமிழ் நலச் செயல்பாடுகளும் உடைய தமிழர்களைத் தணிக்கைக் குழுவில் அமர்த்தினால்தான் சிறந்த திரைப்படங்களைக் காண இயலும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



சினிமாவும் தணிக்கையும்

First Published : 27 Apr 2011 01:55:46 AM IST


இந்தியாவில் சினிமாவுக்கு சென்சார் உண்டு. அதாவது இந்தியாவில் திரையிடப்படும் ஒவ்வொரு படமும் பொதுமக்கள் பார்ப்பதற்கு உகந்ததுதானா என்று சென்சார் செய்யப்பட்ட பின்னர்தான் பொது இடங்களில் திரையிடப்படுகிறது. சென்சார் என்பதைத் தமிழில் தணிக்கை என்று குறிப்பிடுகிறார்கள்.  சினிமாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்குத்தான் தணிக்கை என்று இல்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கும் தணிக்கை செய்யப்படாத படத்துக்கும்கூட தணிக்கை உண்டு. கதைப்படங்கள் என்றுதான் இல்லை. விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் என்று எல்லாவற்றுக்கும் தணிக்கை உண்டு.  சினிமா என்பது கலைப்படைப்பு. கலைக்குத் தணிக்கை என்பது கொடுமையானது. அது சுதந்திரத்தைப் பாதிக்கும். சில நாடுகளில் உள்ளதுபோல சினிமா தயாரிப்பாளர்களின் சுயகட்டுப்பாடே போதும்; தணிக்கை தேவையில்லை என்று சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள், அசல் கலைஞர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் வரையில் கலைஞர்களின் கோரிக்கை சென்றது.  சினிமா கலைப்படைப்பு என்பது முழுக்க முழுக்கச் சரியான வாதமல்ல. அது வியாபாரம், கேளிக்கை, பொழுதுபோக்கு என்று பல அம்சங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் ஆபாசம், வன்முறை, இனக்கலவரம் ஆகியவற்றைக் காட்சிகள் வழியாகவும், வசனங்கள், இசை வழியாகவும் தூண்டிவிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சினிமாவுக்குத் தணிக்கை அவசியமாகிறது. ஆனால், கலையைப் பாதிக்காமல் தணிக்கை இருக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம்.  1952-ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் சினிமா தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கொரு தலைவரும், அவருக்கு ஆலோசனை வழங்க 23 பேர்கள்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதன் தலைமை அலுவலகம் மும்பை. தணிக்கைக்குழு சுதந்திரமானது. அதன் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பெரும்பாலும் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள். சிலசமயத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இடம்பிடித்துக் கொண்டார்கள். இந்தியாவில் சினிமா என்பது மும்பை இந்தி சினிமா, கொல்கத்தா வங்காளி சினிமா. எனவே, சினிமா தணிக்கைக்குழுத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி, வங்காளி சினிமா தயாரிப்பாளர்களாகவோ, இயக்குநர்களாகவோ, நடிகர் நடிகைகளாகவோ இருந்தார்கள். அதன் காரணமாக, தணிக்கைக்குழு என்பது பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்ததென்பதைவிட சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நலம், வசூல் ஆகியவற்றைக் காப்பாற்ற ஒரு கருவியாக இருந்தது. சில சமயத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கலை, கலாசார அபிமானிகள் என்ற பெயரில் தணிக்கைக்குழுத் தலைவரானார்கள்.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவராக, தலைமைப் பதவியைப் பிடிக்கத் தனியாகத் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், சினிமாத்துறையில் இருப்பது கூடுதலான தகுதி. பிராபல்யத்தைக் கொடுக்கிறது. எனவே, சினிமாக்காரர்களில் சிலர் தணிக்கைக்குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து அடைகிறார்கள். அதற்குக் காரணம் அதிகமான அளவில் பணம் புழங்கும், பிராபல்யம் கொடுக்கும், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் கொண்ட சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பதாகக் காட்டிக்கொள்வதுதான். அதனைப் பொது விதி என்றும் சொல்ல முடியாது.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பதவி சள்ளைபிடித்தது. மோசமான, ஆபாசமான காட்சிகளையெல்லாம் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் கொடுப்பது. அதனால் கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று சிலர் ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.  சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகித் தன் பேச்சால், பதவியைப் பாதியில் விட்டுவிட்டுப் போனவர்களும் உண்டு. பிரபல இயக்குநரும், நடிகருமான விஜய் ஆனந்த் அதற்கோர் எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தவர். சினிமா தெரிந்தவர் என்று பெயரெடுத்தவர். அவர் சினிமா தணிக்கைக்குழுத் தலைவரான சிறிது காலத்துக்குள், ஆபாச சினிமாப் படத்தைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் சில தியேட்டர்களைத் தேர்ந்தெடுத்து ஆபாசப் படங்கள் வெளியிட உரிமம் கொடுத்துவிடலாம். அதனால் பொழுதுபோக்குப் படங்களில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும் என்றார். அவர் பேச்சு பெரும் பிரச்னையைக் கிளப்பிவிட்டது. நாடு முழுவதிலுமிருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனால், விஜய் ஆனந்த் தன் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.  2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னை, கலாúக்ஷத்ரா இயக்குநர். சங்கீத நாடக அகாதெமியின் தலைவர். அதோடுகூட பிரதமரின் கலாசார ஆலோசகர்.  60 வயதாகும் லீலா சாம்சன் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது சினிமாக்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அது தங்களின் உள்வட்டத்துக்கு உரியது என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஆளை, அமைச்சர் பிடித்துப்போட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.  சினிமாவோடு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வெளியாள்கள்தான். வெளியாள்கள் சினிமா பார்க்கவும், பாராட்டுக் கூட்டங்கள் நடத்தவும், பரிசு கொடுக்கவும், விருந்து வைக்கவும் உரியவர்கள். அவர்கள் சினிமா என்ற வட்டத்துக்குள் உள்ளே வரக்கூடாது. அது ஒரு மனோநிலை. அது ஜாதி அபிமானம் போன்றது. ஆனால் எல்லாத் தொழிலிலும் நிலைபெற்று இருக்கிறது. கலையாகவும், தொழிலாகவும் இருக்கும் சினிமாவில் கூடுதலாக இருக்கிறது.  பொதுப் புத்தி கொண்ட எந்தக் குடிமகனும் சினிமா தணிக்கைக்குழுவிலும், தலைவர் பதவியிலும் இருக்கலாம். சிலர் இருந்து இருந்திருக்கிறார்கள்.  இந்திய சினிமா எதிர்கொள்ளும் பிரச்னை ஆபாசம். வன்முறைதான். அதனைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது. நீக்குப்போக்குடன்தான் தணிக்கை செய்ய வேண்டும். சட்டம், விதியென்பது ஒன்றுதான் என்றாலும் படத்துக்குப் படம் அதன் கதை, அது சொல்லப்படும் விதம், காட்சிகள், வசனம் சார்ந்து மாறுபடும். அதுவே, சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறது.  மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட ஓர் இளம் பெண்ணின் கதை சொல்லும் இந்திப் படத்துக்கு "யு' சான்றிதழ் கொடுத்தார்கள். மாநில அரசு, கேளிக்கை வரியில் இருந்து சலுகை அளித்தது. அதே படம் தமிழில் பிரபலமான சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பெரிதாகச் சண்டை போட்டார். இந்தியா ஒரே நாடு. ஒரே தணிக்கைக்குழு. ஒரே விதிமுறைதான். அப்படியிருக்கத் தமிழ் சினிமாவுக்கு எப்படி மாற்றிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று கேட்டார்.  மும்பையில் பெண்கள் சட்டப்படி விபசாரம் செய்ய சிவப்பு விளக்குப் பகுதி இருக்கிறது. சென்னையிலோ, தமிழ்நாட்டிலோ அப்படிப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதிகள் ஏதுமில்லை. எனவே, விபசாரத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் காட்சிகள், வசனங்கள் கொண்ட படம் வயது வந்தவர்கள் பார்ப்பதற்குத்தான் தகுதியானது. எனவே, "ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும்.  நீங்கள் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பாருங்கள். அவர்கள் உங்கள் விருப்பப்படிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.  தணிக்கைக்குழுவின் முதல் முடிவுதான் முடிவு என்பது இல்லை. அதற்குமேல், மேல்முறையீடு இருக்கிறது. அதுவும் திருப்தி அளிக்காவிட்டால், மும்பைக்கு முறையீடு செய்யலாம். மத்திய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் பார்த்துச் சான்றிதழ் கொடுப்பார்கள். அதிலும்,திருப்தியில்லையென்றால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று நீதிமன்றங்களை நோக்கிச் செல்லலாம்.  சினிமா என்பது எத்தனைதான் கலையென்றாலும் அது பணம் சம்பந்தப்பட்டது. தயாரிப்பாளர் விரைவில் படத்தை வெளியிட்டு லாபம் எடுக்க ஆவலாக இருக்கிறார். சினிமா இயக்குநர், நடித்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் படம் விரைவில் திரையிடப்பட்டு பெருவாரியான மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அதன் வழியாகப் புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் இருக்கிறார்கள். எனவே, அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்ளும் படத்தைத் திட்டமிட்டு யாரும் எடுக்க முன்வருவது இல்லை.  2006-ம் ஆண்டில் "டாவின்சி கோடு' என்ற ஹாலிவுட் ஆங்கிலப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தியாவில் திரையிடத் தணிக்கைக்குழு படத்தைப் பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தது. ஆனால், சில மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகள் எங்கள் சமய உணர்வுகளை டாவின்சி கோடு புண்படுத்துகிறது. எனவே, படத்தைத் திரையிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், நாகலாந்து, கோவாவில் டாவின்சி கோடு திரையிடப்படவில்லை.  தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்தாலும்கூட, மாநில அரசுகள் படம் திரையிடப்படுவதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். பொது அமைதி குலைந்துவிடும் என்று கருதினால் அந்தப் படத்தைத் திரையிடாமல் தடைசெய்து விடலாம்.  இந்திய சினிமா தணிக்கைக்குழு சினிமாக்காரர்கள் தங்கள் ஆள் தலைவராகி அவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமாத் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் தலைவராகி விட்டார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவரை எப்படித் தலைவராகப் போடலாம் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.  சினிமா தயாரிக்க, சினிமாப்படத்தை இயக்க, சினிமாப் படத்துக்குக் கதை, வசனம் எழுத, பாடல் எழுத, இசையமைக்க, நடிக்க முன்அனுபவம் இல்லையென்று யாரையும் தள்ளிவைப்பதில்லை. தணிக்கைக்குழுவின் வேலை நல்ல சினிமாவா, கெட்ட சினிமாவா என்று தரம் பார்ப்பதல்ல. ஒரு படத்துக்கு விருதோ, தண்டனையோ கொடுப்பதும் அல்ல. எவ்வளவு பணச்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது, யார் யார் நடித்திருக்கிறார்கள், யார் இயக்குநர் என்று பார்ப்பதும் அவர்கள் வேலை இல்லை. ஒரு சினிமாப்படம் இந்தியக் குடிமக்கள் பார்க்கத்தக்கதா, ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்கிறதா, சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறதா, இன்னொரு நாட்டை நிந்தனை செய்கிறதா, எந்த வயதினர் படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்வதுடன் முடிந்து விடுகிறது.  இந்த வேலையைச் செய்ய சினிமாத்துறையில் பல்லாண்டுகள் இருந்து அனுபவம் பெற வேண்டியதில்லை. அது பொது அறிவும், சமூகத்தின் மீது அக்கறையும், நேர்மையும் கொண்ட எந்தவொரு குடிமகனும், குடிமகளும் செய்வார்கள்.  லீலா சாம்சன் இந்திய சினிமாத் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி ஒருவர், சிறந்த நடனக்கலைஞராகிய அவர் அடிக்கடி மட்டமான படங்களைப் பார்த்து கொண்டிருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.  லீலா சாம்சனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதா, இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை


U.N.O. should start work to form Thamizh Eezham - Ramdoss: தமிழ் ஈழம் அமைக்கும் பணியை ஐ.நா.அவை தொடங்க வேண்டும்:இராமதாசு

நல்ல வேண்டுகோள். ஆனால், இந்தியா தொடர்பான வேண்டுகோள் கனவிலும் நடைபெறாது. அதற்கு மத்திய ஆட்சி மாற வேண்டும். மத்திய ஆளும் கொலைகாரக் கட்சியுடன் கூட் டுவைத்துக் கொண்டு இவ்வாறு பேசுவதை விட அதனை உடனே முறித்துக் கொ்ண்டு தமிழ்   ஈழ மலர்ச்சிக் கருத்தை உலகெங்கும் பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.  தேர்தல் முடிவிற்குப்பின் வெளியேறினால் அவப்பெயர் ஏற்படும். எனவே, இதுதான் நல்ல சமயம் ! நழுவ விட வேண்டா! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


தமிழ் ஈழம் அமைக்கும் பணியை ஐ.நா. சபை தொடங்க வேண்டும்: ராமதாஸ்

First Published : 27 Apr 2011 12:35:25 AM IST


சென்னை, ஏப். 26: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் அமைப்பதற்கான பணியை ஐக்கிய நாடுகள் சபை தொடங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுபற்றி அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் இறுதி கட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை இடம்பெயரச் செய்து குண்டு வீசிக் கொன்றது, மருத்துவமனை மீது குண்டு வீசியது, உணவு கிடைக்காமல் தடுத்தது, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது என இலங்கை படையினர் செய்த அனைத்து போர்க் குற்றங்களையும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.  இலங்கை படைகளின் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும். இல ங்கை பிரச்னைக்கு காரணமான அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது.  ஆனால், இலங்கை அரசும், ஐ.நா. சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத்தான் ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உறுதியாக தெரிந்த பிறகும் அதுகுறித்து விசாரணை நடத்த தயங்குவது, ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.  சூடான், தர்பர், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் இனப் படுகொலைகள் நடத்தியதற்காக அந்நாடுகளின் தலைவர்கள் பன்னாட்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டனர். அதுபோலவே, தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.  இலங்கையில் இனச் சிக்கலுக்கு காரணமான பிரச்னைகளைத் தீர்க்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை அரசின் செயல்பாடுகள் எதுவுமே நம்பத்தகுந்ததாக இல்லை என்று ஐ.நா. குழு கூறியுள்ளது.  எனவே, இனியும் இலங்கை அரசுக்காக காத்திருக்கக் கூடாது. இலங்கை இனச் சிக்கலுக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைத்து தருவதுதான். இதனை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. சபையும், உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.  கிழக்கு பாகிஸ்தானில் வசித்த மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்து கொள்ள முடியாத இந்திய பிரதமர் இந்திராகாந்தி, வங்கதேசம் என்ற தனிநாட்டை ஏற்படுத்தித் தந்தார். அதேபோல், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும்.  ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்னையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சிகளை இந்தியா எடுத்தால், அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும்.  தமிழர்கள் நலனிலும், இலங்கையைத் தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வர்த்தக உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  




Thamizh Eezham is the only remedy = Ramdoss: இலங்கைச் சிக்கலுக்குத்தமிழ் ஈழமே தீர்வு: இராமதாசு

தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் அதைப்பற்றிக்கவலைப்படாமல் இப்பொழுதே இராமதாசு கொலைகாரக் காங்.அணியில் இருந்து விலக வேண்டும். அப்பொழுதுதான் அவர் சொல்லுக்கு மதிப்பு இருக்கும். படுகொலைகள் நடந்த பொழுது அமைச்சர் பதவியைத்  துறக்காத மகனை வைத்துக் கொண்டு மறைமுகமாக  உடந்தையாக இருந்தார் என்னும் பழிச்சொல் நீங்கவும் இவரது தமிழ் நலப்பணிகளின் உண்மையை உணரவும் தமிழ் ஈழம்  மலர மேலும் இவர்   போராடி வழிகாட்டவும் உடனே கொலைகார அணியில் இருந்து வெளியேற வேண்டும். அதற்கான மனம் வராவிட்டால், குறைந்தது தன் கட்சியின் சார்பாகத் தமிழ் ஈழப் பரப்புரை தூதுக் குழு என ஒன்றை அமைத்து உலக நாடுகள் எங்கும் அனுப்பி அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 



இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு: ராமதாஸ்

First Published : 26 Apr 2011 01:02:57 PM IST


சென்னை, ஏப்.26- இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட இலங்கைப் படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐநா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைப் போல, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இலங்கை இனப்பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழமே என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐநா.,வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

போடா குப்பா, எல்லாம் செய்ய உதவியது காங்கிரஸ் திமுக & பாமக கூட்டணி, பேசறது ஒன்னு செய்யறது ஒன்னு. வந்துடன் வெண்ணை.
By சகதேவன்
4/26/2011 10:48:00 PM
Regarding the views of reader Tamil Nesan, let's appreciate it. it is true LTTE is almost not in existence but some wrong elements in the Congress Government of India will continue to extend the ban on LTTE until the end of this world. Their sole aim behind closed doors- to wipe out LTTE at any cost without any regard for the civilians in Eelam. To assist, enable Singhalese there to live as a single strong nation. These they feel, will be beneficial for future India. What they have failed to see in future - the reawakening of Tamils once they come to know the truth.
By Palanisamy T
4/26/2011 10:01:00 PM
ஈழத் தமிழர்களுக்கு ஐ நா சபை, ஸ்வீடன், நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்தால்தான் உண்டு என்று நினைத்து நம்பிக்கையிழக்க வேண்டாம். தமிழகத்து ஒட்டு மொத்தத் தமிழர்கள் ஒரு மனத்தோடு உறுதி- யோடு செயல்பட்டால், சாமி சத்தியமாக, நிச்சயமாக ஈழம் உருவாகும். அதை எப்படி என்பதை சரியான நேரத்தில் இறைவன் நமக்கு அருளுவான்;நம்புங்கள்.
By பழனிசாமி T
4/26/2011 9:46:00 PM
இங்கு ஈழத் தமிழர்களை எதிர்த்து எழுதுபவர்கள் யார் தெரியுமா? தமிழினத்தைக் காட்டிகொடுத்து அழித்த இலங்கை முஸ்லீம்களும், அவரது ரத்த சொந்தங்களும்தான்! குள்ளநரித்தனமாக அவர்களை 'நீங்கள் தமிழர்களே அல்ல! வியாபாரத்திற்க்காக தமிழ் கற்றுக்கொண்டு அதனை வீட்டில் பேசும் இந்தோனேசியர்கள்'எனப் பிரித்தாண்டான் சிங்களவன்!அதனை நம்பி தமிழனை கைவிட்டு,இனத்தைவிட மதத்திற்கு முழு முக்கியத்துவம் தந்து, காட்டிக்கொடுத்தனர் பல புல்லுருவிகள்!அந்த எட்டப்பன் கூட்டத்தை முழுமையாக அழிக்காமல் விட்டது இமாலயத் தவறே! அந்த எட்டப்பன்களே சொந்த சகோதரர்களைக் கடைசிவரை காட்டிக்கொடுத்தனர்!சில யாழ் தமிழர்கள் தலைக்கனம் படித்து அலைந்தது ஒரு காலம். ஆனால் தாழ்த்தப்பட்ட மீனவர்குலத்தில் பிறந்து தன்னலம் பாராமல் தமிழனுக்காக போரிட்ட பிரபாகரனைத் தூற்றுவது மிக மோசமானது! சொந்த சகோதரர் சிறிது தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி அவரது தியாகங்களைக் கொச்சைப் படுத்துவது இழிபிறவிகள் மட்டுமே செய்யும் செயல்!
By மணி
4/26/2011 9:45:00 PM
தனி ஈழமே தீர்வு என்று சொன்னால் மட்டும் போதாது. அதில் நம் பங்கு இனிமேல் என்ன என்பதை அறிந்து செயலில் இறங்க வேண்டும். அந் நடவடிக்கைகளை ஐ நா வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்- தால், நம் தலைமுறையிலும் தனி ஈழம் உருவாகாது இனிமேல் நம் பங்கு என்ன என்பதை ஆராய்ந்து அதையும் தமிழர்கள் முதன் முதலாக தொடங்க வேண்டும். நம் பங்கை செலுத்துவதற்கு முன் நம்மை நாம் முதலில் சரிபடுத்திக் கொள்வோம். முதலாக நல்ல தமிழர்களாக வாழக் கற்றுக்கொள்- வோம். கடல் கடந்தத் தமிழர்கள் அப்படித்தான் வாழ்கின்றார்கள்
By
4/26/2011 9:31:00 PM
dai dai unoda dakalti velai theriyayha tamil makkaluku
By tamilan
4/26/2011 8:48:00 PM
Mr RAMADOSS YOU ARE A DOCTOR AND SHOULD HAVE COMMON SENSE, CAN YOU EXPECT JUSTICE FROM THE PERSON WHO COLLABARATED WITH RAJAPAKSE AND CO THE JUSTICE, IF YOU REALLY WANT TAMIL ELLAM PLS ABONDON THE PARTY AND WELL BEING OF YOUR FAMILY AS A FIRST STEP AND FIGHT IT ON THE STREETS, ONLY THEN TAMILS CAN LIVE IN PRIDE, WITH YOU, JAYA AND KARUNA AROUND EVERY BODY KNOW THE ATTITUDE TOWARDS EACH FOR MONEY, FAMILY, CASTE..................GOD SAVE THIS TAMIL RACE FROM THE BRAMANISTIC DEPENDENT ANIMALS..................
By VETRI
4/26/2011 8:46:00 PM
இந்த மாதிரி இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி விட்டு அவர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டு கடைசியில் கை கழுவி விட்டது போதும்! அந்த அப்பாவி மக்களுக்கு நார்வே. சுவீடன் அல்லது ஐநா சபை என்று யாராவது உதவி செய்தால் தான் உண்டு! இலங்கை தமிழர்களை உள்ளூர் அரசியலுக்கு பகடை காய்களாக பயன் படுத்தி அதில் ஆதாயம் தேடிய தமிழக அரசியல்வாதிகள் இனிமேல் பேசுவதை இங்கிருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ யாரும் நம்பப்போவதில்லை! போய் அன்புமணிக்கு நடுவண் அரசில் எப்படி பதவி வாங்கிக்கொடுக்கலாம் என்பதை பற்றி யோசியுங்கள் மருத்துவரே! திமுகவை விட மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் விசேஷ வெறுப்பை புரிந்து கொண்டு சற்று அமைதியாக இருங்கள்!! மே 13 க்கு அதிக நாட்கள் இல்லை
By பாலா ஸ்ரீனிவாசன்
4/26/2011 8:30:00 PM
மிக மிக தாமதமான யோசனை. இவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ ஈழம் ஒரு நாள் முகிழ்க்கும். திருடர்களின் முகத்திரை கிழியும்.
By சாது. இயேசுவானந்தா , ஒரத்தநாடு. .
4/26/2011 8:17:00 PM
ஐயோ ....உங்க கூட்டணி தலைவர் ஒரு 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தா போதுமே! எல்லாம் சரி ஆயிடும். உங்க மகனுக்கும் MP பதவி கிடைச்சுடும். அப்புறம் வேற என்ன வேணும் உங்களுக்கு!
By Suresh
4/26/2011 8:13:00 PM
திருடர்கள் ஜாக்ரதை, இவ்வளோ நாள் என்ன ராமதாஸ் கைலே கத்தி வச்சுக்கிட்டு ஆபரேஷன்???? பண்ணிக்கிட்டு இருந்தாரா
By அருண்
4/26/2011 6:22:00 PM
இதெற்கெல்லாம் துணை போன மு க வுடன்தான் இந்த மரம்வெட்டி ராமதாசு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.இப்போது இனபடுகொலை பற்றி அறிக்கை விடுகிறார். இரட்டை வேடம்!!
By Tamilian
4/26/2011 5:38:00 PM
சார் .......எலெக்சன் நடக்கும் போது ஈழ பிரச்சினைக்கு லீவு கொடுதிடீன்களோ?.உங்களை போன்ற தலைவர்கள் இருக்கும் வரைக்கும் அல்லது திருந்தும் வரைக்கும் தமிழனின் வாழ்வு உருப்படவே உருப்படாது.
By bharathi
4/26/2011 5:34:00 PM
தமிழர் பிரச்சனை , வன்னியர் முதல்வர் , முற்போக்கு கொள்கை, ஊழல் எதிர்ப்பு என்று எப்படி தனித்தனியே timetable போட்டு உங்களால் பேச முடிகிறது. நல்ல வேலை தேர்தல் முடிந்து விட்டது இனிமேல் நீங்கள் தமிழ் ஈழம் ,ஊழல் எதிர்ப்பு எல்லாம் பேசலாம்.
By ஆ.அருமை நாதன்
4/26/2011 5:12:00 PM
ஆஹாஹா என்ன ஞானோதயம்?
By karunganni
4/26/2011 5:06:00 PM
இது ஓர் ஈன பிறவி. தமிழன் என்று கூறுவதுடன் சரி.தனக்கு என்றல் மரம் வெட்டும். இது ஓர் ஈன பிறவி.
By சுரேஷ்.ச,qatar
4/26/2011 5:03:00 PM
Dear Sir, I appreciate your views. Start to prove this, please start public meetings and tell to people about the attrocities and the plight of Tamils. Tell them not to be afraid of LTTE any more because they are not in existence. Please help for a meaningful solutions.
By tamil nesan
4/26/2011 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Prathipaa speech in the parliament of Mauritius: மொரீசியசு நாடாளுமன்றத்தில் பிரதீபா பாட்டீல் பேச்சு

மொரிசீயசில் வாழும் தமிழ் மக்கள் அவர்கள் தமிழ் கற்பதற்காக வேண்டும் உதவிகள் பற்றி ஒன்றுமே பேசவில்லையா? அலைக்கற்றை ஊழலை மொரீசியசில் உசாவப் போவதால் அதைப்பற்றி மட்டும் தனியே பேசியிருப்பாரா? 



மொரீசியஸ் நாடாளுமன்றத்தில் பிரதீபா பாட்டீல் பேச்சு

First Published : 26 Apr 2011 02:52:42 PM IST


போர்ட் லூயிஸ், ஏப்.26- ஐந்து நாள் சுற்றுப்பயணமாக மொரீசியஸ் சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைகளை தடுப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. இந்தியப் பெருடங்கடலில் கடற்கொள்ளைகளை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு மொரீசியஸ் ஒத்துழைப்பு தந்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற மொரீசியஸ் தெரிவித்து வரும் ஆதரவுக்கு நன்றி.இவ்வாறு பிரதீபா பாட்டீல் தனது உரையில் குறிப்பிட்டார்.

War crimes and genocide by Sinhalese - U.N.O. committee report: இலங்கையில் நடந்தது போர்க் குற்றமே! ஐ.நா. குழு அறிக்கை தகவல்

அறிக்கை நடுநிலை என்ற பெயரில் தாய்நாட்டு மக்களைக் காத்த மாவீரர்களைக் குற்றம் சுமத்தினாலும் ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்தவாறு
சிங்களத்தின் இனப்படுகொலை வஞ்சகக் கொடூரச் செயல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகள் அப்படியே விடப்பட்டால் எல்லா நாட்டு ஆள்வோர்களுமே ஏதோ ஒரு பெயரில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகக் கூட்டாக மக்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே, சிங்களத் தலைவர்கள், படையணித் தலைவர்கள, அதிகாரிகள், உதவிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள், படைவீரர்கள்,இந்திய அதிகாரிகள், தலைவர்கள், படையணித்தலைவர்கள், என வேறுபாடின்றி அனைவருமே போர்க்குற்றங்களுக்காகவும் இனப்படுககொலைகளுக்காகவும்  தளையிடப்பட்டு
நடுவீதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள்  குடும்பத்தினர் , வழிமுறையினர்
யாரும், ௧௦௦ ஆண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பிலும்  படைப்பொறுப்பிலும் பதவி வகிக்கத் தடை விதிக்க வேண்டும். இதுவரை வாய்மூடி அமைதியாக இருந்து ஒரு வகையில் கொலைகளுக்கு உடந்தையாக இருந்த நாம், அதற்குக் கழுவாய்  தேடும் வகையில் இதனை உலகறிய முழங்கி உடனே செயற்படுத்த ஆவன செயய் வேண்டும். ஐ.நா. குழுவினருக்கும் இவற்றை வெளியிடும் தினமணி முதலான ஊடகங்களுக்கும் நம் நன்றி.  
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



இலங்கையில் நடந்தது போர்க் குற்றமே! ஐ.நா. குழு அறிக்கை தகவல்

First Published : 27 Apr 2011 02:39:25 AM IST


 நியூயார்க், ஏப். 26: இலங்கையில், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க் குற்றம்தான் என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஐ.நா. சபை, திங்கள்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இலங்கை அரசு மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  எனினும், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றம் குறித்து உறுப்பு நாடுகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து உலக அமைப்பு ஒன்று ஆய்வு செய்தது. இலங்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றால் உறுப்பு நாடுகள் இதற்கு கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது விசாரணை நடத்த இலங்கை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வு நடத்தியதாகக் கூறப்படும் உலக அமைப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. சர்வதேச விசாரணை தேவை என அந்த அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது குறித்து சுயேச்சையான சர்வதேச குழு விசாரிக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் வெளியிட்டுள்ளார்.  உலக அமைப்பு நடத்திய ஆய்வில் இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்று பேரடங்கிய குழுவினர் கடந்த 10 மாதங்களாக இதற்கான ஆதாரத்தை திரட்டியுள்ளனர். இலங்கை போரில் 2009-ம் ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசு நடத்திய குண்டு வீச்சு தாக்குதலே காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை ராணுவம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. குறிப்பாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பின்படி 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் குழுவின் அறிக்கைக்கு எவ்வித பதிலையும் இதுவரை இலங்கை அரசு தெரிவிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களை கேடயங்களாக அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.  ரஷியா, சீனா ஆகிய உறுப்பு நாடுகள் கூட இலங்கை மீது விசாரணை நடத்த முட்டுக்கட்டை போடுவதாக தன்னார்வ அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார். இந்த அறிக்கை குறித்து இலங்கை அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இத்தகைய விசாரணை நடத்தப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழாது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்தார்.  அறிக்கை குறித்து இலங்கை அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட கருத்தை அமெரிக்கா ஆமோதிப்பதாக அவர் தெரிவித்தார்.

classical thamizh young scholar awards:


செம்மொழி விருதுகள் மே 6 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார் ஆனால், விழா ஏற்பாட்டுத்தகுதி தமிழ் நிறுவனத்திற்கு இல்லையாம்!

ஒரு வழியாக வரும் மே 6 அன்று  முற்பகல் 11.00 மணிக்குச் செம்மொழித்தமிழுக்கான விருதுகளைக் குடியரசுத்தலைவர் குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்குகிறார். அத்துடன் பிற மொழிகளுக்கு உரிய செம்மொழி விருதுகளையும் வழங்குகிறார்.
தமிழுக்கு முதல் தடவையாக வழங்கப்படுகின்ற விருதுகள் என்பதால் இதனைத் தனியாக முதன்மை கொடுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  அவ்வாறு செய்ய வில்லை. மேலும் விழா ஏற்பாடுகள்  தேசியச் சமசுகிருத சன்மான் (இராசுட்டிரிய சமசுகிருத சன்மான்) என்னும் அமைப்பின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் மூலம் விழா ஏற்பாடுகளைச் செய்தாலாவது தமிழ் விருதாளர்களுக்கு உண்மையான சிறப்பு கிடைக்கும்.
அவ்வாறு செய்தவற்குத் தமிழக அரசும் செம்மொழித் தமிழ்  ஆய்வு மத்தியநிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுகளை   உடனே வழங்க வேண்டியதற்கான விழிப்புணர்வை  ஏற்படுத்திய மாலைமுரசு நாளிதழுக்கும் நட்பூ  இணைய இதழுக்கும் நம் நன்றியும் பாராட்டும்  என்றும் உரியது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

India will save in war crimes accusation:

பொதுவாக மக்கள் கருத்தின் வினாக்கள் சரியாக இருக்கும். ஆனால், இன்றைய வினா அவ்வாறு அமையவில்லை. ஆபத்தில் காத்ததால் என்பதை விட, ஏவியதே இந்தியா என்பதால்  அல்லது துணை நின்றதால் என இருந்திருக்க வேண்டும். கூட்டுக் கொலையாளி தான் மாட்டாமல் இருக்கத் தன்னைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு வருவது இயற்கைதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




ஐநா தீர்மானம் வரும்போது மன்மோகன் காப்பாற்றுவார் என்ற இலங்கையின் நம்பிக்கை...

First Published : 26 Apr 2011 12:00:00 AM IST


தற்போதைய முடிவுகள்
நட்பு நாடு என்பதால்  --  23.79%
ஆபத்தில் காத்ததால்  --  56.27%
கருத்து இல்லை  --  19.9%

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

P.M.K.. about counting method: வாக்குச் சாவடி வாரியாக ஓட்டு எண்ணிக்கை: பாமக கோரிக்கை

வாக்குச் சீட்டுப் பயன்பாட்டில் இருந்த பொழுது சாவடி வாரியாக எண்ணிக்கை  இருப்பின் குறிப்பிட்ட பகுதி மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிந்து தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது என்பதற்காகத்தான் அந்த முறையை மாற்றினார்கள். இப்பொழுது அதே முறையை நடைமுறைப்படுத்தினால், செல்வாக்குள்ள வேட்பாளர்களின் கொடுமைகளுக்கு உள்ளாக நேரிடுமே! ஒவ்வொரு வாக்குச்  சாவடி வாரியாக எண்ணிக்கையைச் சரிபார்த்த பின்பு ஒட்டு மொத்தமாக எண்ணுவதே சிறந்தது.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 





வாக்குச் சாவடி வாரியாக ஓட்டு எண்ணிக்கை: பாமக கோரிக்கை

First Published : 26 Apr 2011 05:02:02 AM IST


சென்னை, ஏப். 25: வாக்கு எண்ணிக்கையின்போது புதிய முறையைக் கையாளாமல் வாக்குச் சாவடி வாரியாக எண்ண வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.  பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.  இது குறித்து ஜி.கே. மணி கூறியது: வாக்கு எண்ணிக்கையில் புதிய முறையை கையாளப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாமக சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடிந்ததும் 17-சி என்ற படிவம் வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தரப்படும். அதில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் போன்ற விவரங்கள் தேர்தல் அலுவலர், முகவர்களின் கையெழுத்துடன் இருக்கும். அதில் ஒரு படிவம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  அந்தப் படிவத்துடன், வேட்பாளர்களின் முகவர்களிடம் இருக்கும் படிவத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவார்கள். அப்போதுதான் தவறுகளை தடுக்க முடியும்.  எனவே, புதிய முறையைப் பின்பற்றாமல் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.  ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்களின் முகவர்கள் சந்தேகம் எழுப்பினால் அதற்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களின் தலைமை முகவர் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். இது தொடர்பாக 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்றார் ஜி.கே. மணி.

war crimes and genocide - India will save singhala govt. :போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை

தாயால் எங்கள் இனம் அழிகிறது. மகனால் உங்கள் இனம்அழிகிறது. எனச் சீக்கியர்கள் தமிழர்கள்பால பரிவும் பற்றும் உள்ளவரகளாக உள்ளார்கள். ஆனால், மன்மோகன் சிங், பதவி  தந்த சோனியாவின் கையாளாக உள்ளமையால் தமிழினப் படுகொலைக்குத் துணை நிற்கிறார். எனவேதான் இது வரை சிங்களத்திற்குத் துணை நின்றார். இந்தியாவும் கூட்டுக் கொலையாளி என்பதால் சிங்களத்தைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு உண்டு. அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் இவ்வாறு பேசியுள்ளார் சிங்கள அதிகாரி. எவ்வாறு இருப்பினும் காலம் கடந்ததேனும் இனப்படு கொலையாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதன் மூலம் உலகில் வேறு எங்கும் இனி இனப்படுகொலை நடப்பது தடுக்கப்படும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை

First Published : 26 Apr 2011 06:10:05 AM IST


கொழும்பு,ஏப்.25: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்துமீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்படும் நிலை வந்தால், இந்தியா - அதிலும் குறிப்பாக - பிரதமர் மன்மோகன் சிங் தங்களைக் காப்பாற்றிவிடுவார் என்று இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது.  இலங்கை அரசின் மூத்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு இதை கொழும்பில் திங்கள்கிழமை தெரிவித்தார்.  "இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவிக்கு வந்திருக்கிறார். இலங்கையுடனான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்றவர்களைவிட அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும் ஜெனீவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது, எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் 2009-ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்துக் காப்பாற்றியது இந்தியாதான். இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா பேசியதால் அது கைவிடப்பட்டது.  பொருளாதார நிலைமை காரணமாக வெளிநாட்டு வர்த்தகப் பற்று-வரவில் பற்றாக்குறையால் இலங்கை அரசு தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாகப் பரிந்துரைத்து வாங்கித் தந்தது.  சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் டுனா கமிஷன் கூட்டத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான கடல்பரப்பில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக மீன் பிடித்ததற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்படவிருந்த தருணத்திலும் இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகப்பேசி மீட்டது.  சீனா, ரஷியாவை நம்ப முடியாது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் உள்ள சக்திவாய்ந்த நாடுகள். ஆனால் மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் வரும்போது இலங்கைக்கு ஆதரவாக அந்த இரண்டும் செயல்படும் என்று நம்ப முடியாது. இந்தியா இப்போது தாற்காலிக உறுப்பு நாடாக சுழற்சி அடிப்படையில் இடம் பெற்றிருக்கிறது. ரத்து அதிகாரம் இல்லாவிட்டாலும் அது இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்தாலே இலங்கை காப்பாற்றப்படும்.  ஈரான், சூடான், லிபியா ஆகிய நாடுகளையும் இதே போல மனித உரிமை மீறலுக்காகக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது சீனாவும் ரஷியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிட்டன. எங்கள் விவகாரத்திலும் அப்படிச் செய்யக்கூடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எங்களைக் கண்டிக்கத் தீவிரம் காட்டுகின்றன. அமெரிக்கா கூட தனது நிலையை இறுதியில் மாற்றிக்கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளால்தான் பிரச்னை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு எங்களைக் காப்பாற்றும்.  மனித உரிமைகள் கமிஷன் எங்களைக் குற்றஞ்சாட்டிய உடனேயே இலங்கை அரசின் நிலையை விளக்க வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். சீனத் தூதர் அதில் பங்கேற்கவில்லை. காரணம் கேட்டபோது தங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பதில் கிடைத்தது.  நாங்கள் ஃபேக்ஸ் மூலம் அழைப்பை அனுப்பிவிட்டு தொலைபேசி மூலமும் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டோம். ஏதோ காரணத்துக்காக சீனா வரவில்லை. அத்துடன் அந்த அறிக்கை குறித்துகூட அது கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அது எங்களை ஆதரிக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ரஷியாவைப்பற்றியும் உறுதியாக எதையும் கூற முடியவில்லை. ரஷியாவும் சீனாவும் எங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத நிலையில், இந்தியா எங்களை ஆதரித்தால் நாங்கள் மீண்டுவிடுவோம்' என்று அந்த இலங்கை உயர் அதிகாரி தெரிவித்தார்.

unite to punish rajapakshe : இராசபட்சவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும்: பழ. நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன் அழைப்பு

அனைத்துக்கட்சி என்னும் பொழுது பேராயக்கட்சியாகிய காங்கிரசே குற்றவாளியாக உள்ளதால் அக்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் - குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும  - கட்சிக்கு எதிராக ஒன்று சேர்வதா என எண்ணக்கூடாது. இன நலன் கருதி, மக்கள் நலன்  கருதி, நாட்டு நலன் கருதி, மனித நேயம் கருதிப்  போராட வேண்டும். குறைந்தது தனி மேடைகளிலாவது இனப்படுகொலையாளிகள் அனைவரையும் கூண்டிலேற்றித் தண்டிக்கப் போராட வேண்டும்.
பிற கட்சிகளில் உள்ளவர்களும் தலைமைக்குக் கொத்தடிமைகளாக இல்லாமல்  மனச் சான்றுடன் செயல்பட்டு  மீனவர் படுகொலைகள் நிற்க, தமிழர் நலன் காக்க,  தமிழ் ஈழம் மலர ஒன்றுபடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 






ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும்: பழ. நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன் அழைப்பு
First Published : 26 Apr 2011 05:03:37 AM IST

இலங்கை அதிபர் ராஜபட்சவை ஐ.நா சபை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் நட
சென்னை, ஏப். 25: இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற தமிழக மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.  இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்ட மேடையில் ராஜபட்ச போன்று ஒருவருக்கு உடை, முகமூடி அணிவிக்கப்பட்டு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த குற்றவாளிக் கூண்டில் கைவிலங்குடன் நிறுத்தப்பட்டு, வைகோவால் தூக்கில் ஏற்றப்படுவது போன்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது:  பழ. நெடுமாறன்: உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபட்சவுக்கு உண்டு.  முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து தப்பி வந்த தமிழர்களிடம் சாட்சியம் திரட்டி பதிவு செய்ய முயன்றோம். ஆனால் இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. க்யூ பிராஞ்ச் போலீûஸ வைத்து மிரட்டி சாட்சியம் பெற முடியாமால் தடுத்தார்.  இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபட்ச, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார். இவர் லண்டன் சென்ற போது அவரை போர்க் குற்றவாளி எனக்கூறி அங்குள்ள அமைச்சர்கள் அவரைச் சந்திக்க மறுத்ததுடன் அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் இதை பின்பற்றின.  போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபட்ச மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபட்ச போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.  வைகோ: இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமரனில் இருந்து சமீபத்தில் கிருஷ்ணமூர்த்தி வரை தீக்குளித்து இறந்துள்ளனர். இதைப் பேசி, நாங்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இளைஞர்கள் தீக்குளிக்கும் முடிவுக்கு செல்லக் கூடாது. அனைவரையும் போராட்டக் களத்துக்கு கொண்டுவரும் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும்.  முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதே போல்தான் மற்றொரு கட்சியின் பொதுச் செயலரும் இரங்கல் தெரிவிக்கவில்லை.  ஆனால் இப்போது விடுதலைப் புலிகள் குறித்து பேசாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று தெரிந்து கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசிவருகின்றனர்.  விடுதலைப் புலிகள் குறித்து விமர்சனம் செய்ய எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை. வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கொள்கையில் இருந்து விலகப்போவதில்லை. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான். அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை.  தமிழீழம் மலர, ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.  தா. பாண்டியன்: நாம் நடத்தும் போராட்டம் இன்றுடன் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போராட்டம் தொடரும். இலங்கைத் தமிழர்களுக்காக நாம் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி, இப்போது உலக நாடுகள் பார்வைக்குச் சென்றுள்ளது. இதனால் ஐக்கியநாடுகள் சபையும் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  இலங்கையில் போர் நடந்தபோது சர்வதேச பத்திரிக்கையாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கேமராவுக்கு அனுமதி அளிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தைக் கூட அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி இலங்கை ராணுவத்தால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்போது சாட்சியமாக வந்துள்ளது.  இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும்.  புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.