ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

அன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

சென்னை, டிச. 4: அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.அன்னை தெரசா விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: அன்னை தெரசாவின் அரும்பெரும் தியாகத்தைப் போற்றி, அவர் வழி நடப்பதாக நாம் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே போதாது. எடுத்துக் கொண்ட உறுதியை காற்றிலே பறக்கவிடாமல், தேர்தல் கால வாக்குறுதியாக ஆக்காமல் என்றென்றும் அந்த உறுதிமொழியை நன்றியுடன் நினைத்து நிறைவேற்றுவோம், நடைமுறைப்படுத்துவோம் என்று நானும் உங்களுடன் சேர்ந்து உறுதியேற்கிறேன்.முதன்முதலில் முதல்வராகப் பொறுப்பேற்று பேரவையில் உரையாற்றியபோது மிக, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான். இதில் எத்தனை மிக, மிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் வெற்றிக்காகப் போராடுவேன், வெற்றி கிடைக்கும்வரை ஒயமாட்டேன் என்று சூளுரை மேற்கொண்டேன்.சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் நலனுக்காக, உலகத்தின் அன்னை என்று போற்றப்படும் தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது.ஏழைகளைக் கண்டு இரங்கிய மாதரசி அவர். அன்னை தெரசா என்று ஒருவர் மட்டுமே இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. நலிந்தோருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தெரசா. உலகுக்கே அன்னையாக விளங்கிய அவரது புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. அவருக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஒரு நாளை தேர்வு செய்து நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. அவருக்கு இந்த விழா போதாது.இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத்திய அரசை விட்டுக் கொடுக்காமல், ""அன்னை தெரசாவின் நினைவாக நாங்கள் நாணயத்தை வெளியிட்டுள்ளோம்'' என்றார்.நாணயத்தை வெளியிடுவது மாத்திரம் அல்ல. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும்.தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரு பெரிய கட்டடத்துக்கு தெரசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெரசாவின் புகழ் நிலைக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவற்ற பெண்களின் திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கும் ஏற்கெனவே  அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த டாக்டர் ராய் தனது பிறந்தநாள் செய்தியில், ""என்னை முழுவதுமாக காந்தி, நேரு மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் கூட ஆக்கிரமித்துக் கொண்டதில்லை. ஆனால், ஏழைகளின் துயர்நீக்கப் பாடுபடும் அன்னை தெரசா குறித்த நினைவும், எண்ணமும் எனது இதயம், மூளை அனைத்தையும் அணைத்துக் கொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.அந்த வங்கத்தில் இந்த விழாவைக் கொண்டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவை இல்லை. நாம் விழா கொண்டாடுவதும் வங்கம் கொண்டாடுவதைப் போலத்தான். ஏழை, எளியோரை, பாட்டாளிகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் எனபதே தெரசாவின் கொள்கை ஆகும். அந்தக் கொள்கையை மதித்து நடப்பதால் அவருக்கு விழா கொண்டாட நமக்குத் தகுதி இருப்பதாக நாமே கருதுகிறோம். தெரசா வாழ்ந்து, மக்களுக்காக பாடுபட்ட மேற்கு வங்கத்தில் இன்னமும் கை ரிக்ஷா வண்டிகள் ஓடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே, தகுதியோடு இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். நம் அளவுக்கு சில மாநிலங்கள் கொண்டாடா விட்டாலும் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும், மனித தெய்வமாக வணங்கக் கூடியவர் அன்னை தெரசா' என்றார் முதல்வர் கருணாநிதி.முன்னதாக அன்னை தெரசாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
கருத்துகள்

ஹா ஹா ஹா ஹா ஹா ........................ஹா ஹா ஹா ஹா ...............................ஹா ஹா ஹா.............................................ஹா ஹா ...........முடியல வயிறு நோவுது..............ஹா ஹா ஹா ஹா .......
By தமிழன்
12/5/2010 12:41:00 PM
ஒட்டு காக பேசும் கருணா, ராஜ வூழல் திசை திருப்ப கருணா செய்யும் நாடகம். தமிழர்களே விளிழ்து கொள்வீர்
By basarie
12/5/2010 12:40:00 PM
அன்னை தெரசா அவர்கள் ஏழை ,மற்றும் அநாதை குழந்தைகளுக்காக சேவை செய்தார்களே தவிர பிற்ப்படுதப்பட்டோர்,மிக பிற்ப்படுதபட்டோர்,மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் மிக மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் என்று பார்க்கவில்லை .அரசியலுக்காக அன்னையின் பெருமையை சிறுமைப்படுத்தாதீர்கள் கலைஞரே
By சாமி
12/5/2010 12:22:00 PM
Thalaivar reminds 3 issues 1) Even the centre forget the minorities we are here to celebrate 2) Kai rickshaw West bengal (Left ) has no " thakuthi " 3)I am only the person following Mother Therasa's policy Ellam Spectrum paduthum padu ,Thalaivar Thaguthi manithaneyam pesugirar
By sekar
12/5/2010 11:34:00 AM
சரி!!! சரி!!! விடுங்கப்பா அவரு எதாவது பேசிட்டு போறாரு ,,,,,,,, பாவம் !!!!,,,,,,,,
By MUTHU
12/5/2010 11:25:00 AM
மு ச...வுக்கு மட்டும் அருகதை இருக்கிறதா? //அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும். // ஈழத்தமிழனை கொன்றவன் கொன்றவன் என்று சொல்லி சொல்லியே ராஜபக்சேவுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் வாக்களித்தீர்களோ? எதிரிக்கு எதிரி நண்பன் என்று சரத் பொன்சேகாவை ஆதரித்தீர்களோ? அவர் என்ன தடவியா கொடுத்தார்? இப்போது டக்ளஸ், ஆறுமுக தொண்டைமான் இவர்கள் எல்லாம் இலங்கை அமைச்சர்களாக ராஜபக்சேவுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் யார்? அங்குள்ள தமிழர்கள் எல்லாம் என்ன? தேர்தலையா புரக்கணித்தார்கள்...அதிபரை ஜெயிக்கவைக்கவில்லை...என்ன நீ மட்டும் தான் தமீமீமீல்லனா? நீங்கள் எத்தனை சதவீதம் உங்கள் நாட்டில் உள்ள மொத்த தமீலர்களில்...? முதலில் உன் வீட்டு அரசியலை பார் அப்புறம் அடுத்த வீட்டிற்குள் மூக்கை நுழைக்கலாம். உன் வீட்டிலேயே உனக்கு ஆதரவு இல்லை. என்ன? தமிலா...? சரியா?
By Es
12/5/2010 10:46:00 AM
As the elections for TN assembly is shortly approaching, this gentleman will play more magic just to gain the vote bank of minority community. Instead of wasting his time to plead the Union government for Mother Terrassa's centenary celebrations, let this gentleman consider the welfare of common men who suffering from power-cut, price rise of commodities, etc. No body will bother if the Union government fails to pay attention on Mother Terrasse or her centenary celebration.
By Umashankar. K
12/5/2010 10:15:00 AM
அன்னை தெரசாவை பற்றி உச்சரிக்க எந்த அருகதையும் இல்லை இந்த முத்துவேல் கருணாநிதிக்கு. சீக்கிரம் பதவியை விட்டு விலகு.
By மு. ச. chagla
12/5/2010 9:34:00 AM
for vote,,,,
By imran
12/5/2010 9:28:00 AM
அன்னை இன்று இருந்தால் தினகரன் ஏற்ரிப்பு , தா கீ கொலை பற்றி என்ன நினைப்பர். சில குடும்பம் வாழ , அப்பாவிக்கள் பலியைக் பற்றி என்ன நெனிபர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை கொலை கொள்ளை அட்டிக்க உரிமை இருக்கிறது. என்று நேநிபர்ரோ ?
By Pandiyan
12/5/2010 9:19:00 AM
அய்யா யாருக்காக இந்த neethi போதனைகள்? உங்களுக்கு நீங்களே solli கொள்ளுங்கள்.. அதன் padi நடந்துகொள்ள muyarchiyaavathu செய்யுங்கள்.. தியாகம் என்ற சொல்லை ucharikka கூட தகுதி இல்லாத நிலையில் தான் இன்று ungaluthu செயல்பாடு இருக்கிறது. arasu பணத்தில் ௫ ருபாய் எடுத்து மக்களுக்கு செயல் திட்டம் அறிவித்து விட்டு ஐநூறு ருபாய் எடுத்து தனது சந்ததிக்கு சேர்த்து வைப்பதன் பெயர் தியாகம் அல்ல... திறுடு.. கொள்ளை... nambikkai துரோகம்.....
By இளந்தளிர் - மதுரை
12/5/2010 8:50:00 AM
யோவ் ! இப்போ அன்னை திரேசா தினம் கொண்டாடனும் என்பாய்! பின் அன்னை சோனியா தினம் கொண்டாடனும் என்பாய்! நிறுத்துய கதை வசனம் எழுதுவதை!
By Indian
12/5/2010 8:30:00 AM
kalaingar can try another 30minutes fasting against central govt. High drama aasaami!!
By SRV
12/5/2010 7:49:00 AM
மனித உயிர்களை நேசித்த கடவுள் போன்ற அன்னை தெரசா வாழ்ந்த இந்த பூமியில் மனித நேயம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் எல்லாம் தங்களை தங்கள் அடிமைகளால் 'அன்னை', 'அம்மா' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்துக்கொள்கின்றதுகள்.
By மரமண்டை
12/5/2010 6:56:00 AM
மற்ற உயிரினங்களுக்கு இல்லாத நிறைய சிறப்புகள் மனித இனத்துக்கு உண்டு. அந்த மனித இனத்திலேயே சிறந்து விளங்குபவர்கள் அவ்வப்போது இந்த மண்ணில் தோன்றுவதும் உண்டு. அந்த சிறந்தவர்களுக்கே சிறந்தவராக வந்து தோன்றிய அன்னை தெரசா அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம். அவரது நல்ல பல குணங்களில் ஒன்றை யாகிலும் வாழ்நாளில் கடைபிடிப்போம் என்று இந்த அவரது நூற்றாண்டு நாளில் சபதமேற்போம்.
By மரமண்டை
12/5/2010 6:53:00 AM
கேப் கேட்ச போதும், வோட்டு ஆகீடிவாரூ .
By அண்ணா துரை
12/5/2010 6:52:00 AM
"வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது " பின்னே ராசாவை ராஜினாமா பண்ண வைத்தால் என்ன சொல்லுவதாம்
By mpm
12/5/2010 5:54:00 AM
கருணாநிதி தாத்தா, கருணாநிதி தாத்தா, நீங்கள் கேட்டவரா, நல்லவரா
By Jothi
12/5/2010 5:34:00 AM
ஒட்டுககாக
By Cholan
12/5/2010 5:32:00 AM
வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. !!!???? அய்யா யாரை சொல்லுறார் ????
By துரை
12/5/2010 5:23:00 AM
அன்னை தெரசாவின் தொண்டு பாராட்டிற்குரியது. என்றாலும் அதன் அடிப்படை சமயம் சார்ந்ததே. எனவே, அவரை மதித்தாலும் அவரது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட வேண்டா என இந்திய அரசு கருதியிருந்தால் அது சரியே. மேலும் இலங்கையில நடைபெற்ற படுகொலைகளுகு்க்கு எதிராக மனித நேய ஆர்வலர்கள் அறிக்கை ஒன்றில் கையொப்பம் இட வேண்டியவர்களிடம் அதற்கு மறுப்பு தெரிவித்தவர் இவர். என்ன இருந்தாலும் பக்சே புத்தர் போர்வையில் உள்ள கிறுத்துவர்தானே. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்ட அறிர்ஞர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தமிழக அரசின் கொள்கையாக இருந்தும் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாத கொடும் போக்கை மாண்புமிகு முதல்வரிடம் சுட்டிக்காட்டி நினைவு படுத்தப்போவது யார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2010 5:21:00 AM
தமிழக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் தங்களை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் இதற்காக தாங்கள் துவண்டு விடமாடீர்கள் இன்னும் பல தமிழக முன்னேற்றத்திற்கு திட்டங்களை செயல் படுத்த தங்களுக்கு சக்தியை தரும் படி எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
By swathi
12/5/2010 4:41:00 AM
அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும்.
By tamilan
12/5/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
-கருத்துக்கள்‎(4)‎
 
வெளியிடு
தங்கம் போன்ற நேயர்களுக்கு அன்பு வேண்டுகோள். பிறரது கருத்து பிடித்திருந்தால் அதை மேற்கோளாகக் குறிப்பிட்டு உடன்படுவதாகவோ பாராட்டுவதாகவோ எழுதினால வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படியே தன் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடுவதால் உங்களைப்பற்றிய தவறான எண்ணம்தானே மேலோங்கும். இது தேவையா? இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/5 இந்த இடுகையை நீக்கு பதிலளி

this is very unfortunate to view like this video. however in the buddhist they will never think to kill the ant. But now they are killing the human being. the culprits sholuld be cut like mutton peaces, the peaces should be thrown into the sea.
ananda kumar pandiaraj 12/3 பதிலளி

இப்படிப்பட்ட கொடுங் கொடுமைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புபவர்களைத்தான் சிங்கள இறையாண்மைக்கு எதிரான குற்றம் என நம் நாட்டு அரசுகள் சொல்கின்றன. நம் நாட்டில் நம் நாட்டுத் தலைவர்கள் பற்றி என்னவெல்லாமோ பேச உரிமை இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் பற்றிக் கூறினால்அவனது உடந்தையாளர்கள் இறையாண்மைக்கு எதிரானது என அடக்கி ஒடுக்குகிறார்கள். இவர்களை யெல்லாம் குடும்பத்தினருடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும். இதற்குப் பிறகும் விடுதலைப்புலிகளையோ மேதகு பிரபாகரன் அவர்களையோ தமிழ்த்தேசிய உணர்வாளர்களையோ தாக்குபவர்கள் மனிதப பிறவிகள் அல்லர். மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! வேதனையுடன்
thangam 12/2 பதிலளி

இப்படிப்பட்ட கொடுங் கொடுமைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புபவர்களைத்தான் சிங்கள இறையாண்மைக்கு எதிரான குற்றம் என நம் நாட்டு அரசுகள் சொல்கின்றன. நம் நாட்டில் நம் நாட்டுத் தலைவர்கள் பற்றி என்னவெல்லாமோ பேச உரிமை இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் பற்றிக் கூறினால்அவனது உடந்தையாளர்கள் இறையாண்மைக்கு எதிரானது என அடக்கி ஒடுக்குகிறார்கள். இவர்களை யெல்லாம் குடும்பத்தினருடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும். இதற்குப் பிறகும் விடுதலைப்புலிகளையோ மேதகு பிரபாகரன் அவர்களையோ தமிழ்த்தேசிய உணர்வாளர்களையோ தாக்குபவர்கள் மனிதப பிறவிகள் அல்லர். மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/2 இந்த இடுகையை நீக்கு பதிலளி

மொழிபெயர் »
« முந்தைய  அடுத்து »

சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட பாலியல் பலாத்காரம்: சனல் 4 காணொளி

channel4_dec_video
கடந்தவருடம் சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை அவ்வப்போது சனல்4 செய்திகள் வெளிக்கொணர்கின்றன.
இந்த வகையில் மகிந்த ராசபக்சே லண்டனுக்கு நேற்று வந்திருக்கையில் இன்று மீண்டும் ஒரு காணொளியை சனல்4 ஒளிபரப்பியுள்ளது.
நேற்று லண்டனுக்கு வருகை தந்திருக்கும் போர்க்குற்றவாளி  மகிந்த ராசபக்சே  நாளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் சனல்4  செவ்விச் சேவையானது இன்றும் ஒரு போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளமை மகிந்தவை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(அல்லது)
மகிந்தவின் லண்டன் பயணத்தை எதிர்த்து குளிர்காலநிலையையும் பொருட்படுத்தாமல் விமானநிலையத்தில்  புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தியும், அவ் எதிர்ப்புக்களையும்  கருத்தில்கொள்ளாமல் போர்க்குற்றவாளி மகிந்தவை அனுமதித்தது பிரித்தானிய அரசாங்கம்.
ஆனால் இன்றைய சனல்4 காணொளியில் ஒளிபரப்பான பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை பார்வையிடுமா பிரித்தானிய அரசு? பார்வையிடுமானால் மகிந்த ராசபக்சேவை கைது செய்யுமா? இவ்வாறான கேள்விக் கணைகள் ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உள்ளத்தில் எழுந்துள்ளது.
}
இது உங்களுக்குப்பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் valaiyakam,tamilish,tamil10 திரட்டிகளில் உங்களின் ஓட்டினையும் இடவும்
அன்னை தெரசாவின்  தொண்டினைப் பாராட்டலாம். என்றாலும் அதன் அடிபப்படை சமய நோக்கு என்பதை மறக்க்க் கூடாது. எனவேதான் அவரை மத்திய அரசு மதித்தாலும் நாடு முழுவதும் விழா எடுக்கும் முடிவிற்கு வரவில்லை. (தேர்தல் நேரத்தில் அச்சமயத்தினர் வாக்கிற்காகக்கூட விழா நடத்தாவிட்டால் பாராட்டலாம்.) மேலும் இலங்கைப் படுகொலைகளுக்கு எதிராக மனித நேய ஆர்வலர்கள் அறிக்கை யொன்றில் கையொப்பம் வேண்டியபொழுது அவர் மறுத்துவிட்டார்.   பக்சே புததப் போர்வையில் உள்ள கிறுத்துவர்தானே. எனவே, அவருக்கு நாடெங்கும் விழா எடுக்காவிட்டால் ஒன்றும் தவறில்லை. ஆனால் தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவது என்பது தமிழக  அரசின் கொள்கையாக இருப்பினும்
தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  இன மேம்பாட்டிற்கும் பாடுபட்ட தமிழறிஞர்களின்
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாதது குறித்து யார் முதல்வரிடம் நினைவூட்டுவார்கள்.  (ஆனால் மத்திய அரசு சார்பில் பொதிகைத் தொலைக்காட்சி நூற்றாண்டு கண்டவர்களுக்கு எல்லாம் நிகழ்ச்சியை நடத்துகிறது.) வட நாட்டுச் சமயத் தலைவர்களுக்கு எல்லாம் இந்தியா
முழு வதும் விழா எடுக்கும் மத்திய அரசிடம் நாடெங்கும் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்  என்று யார் நினைவு படுத்துவார்கள்?

சாதனையின் வலி

இராசபட்சவைக் கைது செய்ய வேண்டும்: மலேசிய நா.உ.

௧. இங்கிலாந்து விமான நிலையத்தில் காலை ௭.௦௦ மணி முதல் இரவு ௧௦ மணி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள்  இனப்படுகொலைகாரனுக்கு எதிர்ப்பாகக் கூடியிருந்த போதும் ௧௦ காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிய தமிழர்களை அந்த  அரசே பாராட்டியுள்ளது. சிங்களத் தூதரகத்தை முற்றுகையிட்ட போதும் அதிகாரிகளுக்கு எதிராகத் தாங்கள் போரிடவில்லை எனக் கூறி அவர்களை நலமாக வெறியறே இசைவு தந்துள்ளனர்.  இதனையும் காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். மனித நேயம் மிக்கச் சிங்களர்களும் இங்கிலாந்து நாட்டினரும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்களைததான்  ஓராள் கொச்சைப்படுத்தி எழுதியுள்ளான். எப்போதடா திருந்துவாய் நீ?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
௨.  மலேசிய நா.உ. வேண்டுகோள் சரியானதுதான். இருப்பினும் இங்கிலாந்தில் ஏற்பட்ட  அவமானத்தைத் துடைக்க இந்தியாவே இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் அழைத்துச் சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யும். இந்தியாவில் மன்மோகனையோ சோனியாவையோ கலைஞரையோ பிற தலைவர்களையோ தாக்கினால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், பக்சேவி்ற்கு எதிராகப் பேசினால்
சீமான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் அரைத்தீவு சிங்களத்திற்கு அடியாளாகத்தான் செயல்படுகிறது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராஜபட்சவை கைது செய்ய வேண்டும்: மலேசிய எம்.பி.

கொழும்பு, டிச.4- போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த அறிக்கையில் குலசேகரன் கூறியிருப்பதாவது:லண்டன் வந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபட்சவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவுக்கு உலகின் எந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.இனப்படுகொலை புரிந்த சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுபோல் இலங்கை அதிபர் ராஜபட்சவையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபட்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் மலேசிய எம்.பி. குலசேகரன் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

ராஜபக்சேவை சோனியா, கருணாநிதி ஆதரவு உள்ள வரை ஒன்றும் செய்ய முடியாது
By சாமிநாதன் திருத்தணி
12/4/2010 10:42:00 PM
மலேசியா தமிழனுக்கு உள்ள உணர்வு, இங்குள்ள தமிழனுக்கு இல்லையே?............
By usanthan
12/4/2010 10:06:00 PM
மகிந்தா நாடு திரும்பி விட்டார். பிரிட்டனுக்கு அவர் வரமாட்டார் பயத்தில் இலங்கையை விட்டு போகமாட்டார் என எழுதிதள்ளிய புலி ஊடகங்கள் அவர் பிரிட்டனில் கைது செய்யப்படவில்லை என்றவுடன் அவரது உரையை நடத்த விடாமல் பண்ணி விட்டோமே வெற்றி எங்களுக்கு என்கிற பாணியில் எழுதித்தள்ளுகின்றன. புலம்பெயர்நாடுகளில் அதிகமான விசர்ப்புலிகள் உள்ள நாடு எது என்றால் அது பிரிட்டனில்தான். குறிப்பாக லண்டனில் உள்ள புலி ஆதரவாளர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. புலிகளின் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களை அழைக்கின்ற பாணியே தமிழ்ப்பட வில்லன்களின் அடியாட்கள் கட்டாயம் வரவேணும் என்ன என மக்களை பலவந்தமாக மிரட்டுகின்றமாதியிருக்கும். புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு போகாவிட்டால் இந்த மொக்கன்கள் ஏதும் செய்துவிடுவாங்கள் என்கிற பயத்தில் போகிற தமிழ் மக்கள் அதிகமாக லண்டனில் இருக்கிறார்கள்.
By Also Tamil
12/4/2010 9:59:00 PM
இராசபக்சே வுக்கு எதிரான இந்த கருத்துக்கள் அந்த கொடுங்கோலன் மட்டுமே தமிழர்களை அழித்த மொத்தமும் முதலுமான குற்றவாளி போன்றதொரு தோற்றத்தை பொதுமக்களுக்குத் தருகிறது. அதுவா உண்மை? இங்குள்ள காங்கிரசுக்காரர்களே முதல் குற்றவாளிகள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழன் இப்படியே இருந்தால்... இராசபக்சேவை எதிர்ப்பதற்கு இந்தத் தமிழர்களுக்கு இவ்வளவு துணிச்சல் யார் கொடுத்தது? இராசபக்சேவை எதிர்ப்பவர்களைக் கைது செய்து சிறையில் அடை..! என்று இங்குள்ள காங்கிரசுக்காரர்கள் சாலைமறியல் செய்தாலும் செய்வார்கள்! தமிழன்தான் ஏமாளியும், தமிழன் என்ற உணர்வும் இல்லாதவனாயிற்றே...! காசிமேடு மன்னாரு.
By காசிமேடு மன்னாரு
12/4/2010 7:52:00 PM
யார் இந்த பிரபாகரன்…? தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
By Ramasamy
12/4/2010 7:21:00 PM
A)செய்கையில் காட்டுங்கள். எங்கு முறை இடவேண்டுமோ முறை இடுங்கள்!!!.... "ராஜபட்ச தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபட்சவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது"...Well done my dear london Tamils B)சும்மா இந்த பத்திரிகைகளில் அறிக்கை விடுகிற பாவ்லாவை நிறுத்துங்கள்!!!....Hello Manoharan news in the media is very important, Mr Kulasekaran is doing a good job support him.
By Narayanan-Chennai
12/4/2010 6:23:00 PM
நாம் இன உணர்வை இழந்துவிட்டோம்?????
By ramesh
12/4/2010 5:07:00 PM
செய்கையில் காட்டுங்கள். எங்கு முறை இடவேண்டுமோ முறை இடுங்கள். அல்லது வழக்கு தொடருங்கள். சும்மா இந்த பத்திரிகைகளில் அறிக்கை விடுகிற பாவ்லாவை நிறுத்துங்கள்.
By manoharan
12/4/2010 4:45:00 PM
மலேசியா தமிழனுக்கு உள்ள உணர்வு, இங்குள்ள (தமிழ் நாட்டில் ) தமிழனுக்கு இல்லையே என்பது தான் வருத்தமாக உள்ளது .. தமிழா உன்னை அந்த பரம்பொருள் தான் காப்பாற்ற வேண்டும் ...
By மைந்தன்
12/4/2010 4:23:00 PM
what about union indian govt, Tamilnadu govt and its rulers?
By Paris EJILAN
12/4/2010 3:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *