வியாழன், 18 நவம்பர், 2010

முதன்மை 5 வாசகர் கருத்துகள் 18.11.10


இவற்றைச் சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கினால்

16-Nov-2010


இவைகளை சன் டி.வி.,நிறுவனம் வாங்கினால்.....



ஸ்பைஸ் ஜெட்டின்  பெரும்பான்மையான பங்குகளை சன் டி.வி. அதிபர் க(ல்)லா நிதிமாறன் வாங்கிட்டாராம்.தொ(ல்)லைகாட்சி, சினிமா இப்போது விமான போக்குவரத்து இனி இவர் கையில்.  இப்படியே போனால்.....நகைச்சுவையாக யோசித்ததில்.......


வங்காள விரிகுடா கடலை சன் நிறுவனம் வாங்கியுள்ளது.இனிமேல் அந்தப்பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் ஆங்காங்கே கடலில் இருக்கும்  டோல் சாவடியில்    சன்னுக்கு சந்தா செலுத்த வேண்டுகிறோம். மீறி சந்தா செலுத்தாமல் பயணிக்கும் கப்பல்களில் ஓட்டை போடப்படும் என்று எச்சரிக்கிறோம்.


தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஒயின் ஷாப்புகளை  சன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளது. இனி சரக்குகள் பாண்டிச்சேரி விலைக்கே கிடைக்கும்(பாண்டிச்சேரியில்). மற்ற இடங்களில் பாண்டிச்சேரி விலையைவிட பத்துரூபாய் குறைவாக கிடைக்கும். முரசொலிமாறன், கலாநிதிமாறன்,தயாநிதிமாறன் ஆகியோரின் பிறந்தநாளுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக  பாதி விலைக்கு சரக்குகள் கிடைக்கும்.


தென்னிந்திய ரயில்வே துறையை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி பயணிகள்  ரயிலுக்காக காத்திருக்கும் வேளையில் சன் பிச்சர்சின் படங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் இலவசமாக காண்பிக்கப்படும். ஏதாவது தடங்கலினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பணம் திருப்பித்தரமாட்டாது. பதிலாக....ஒருமாதத்திற்காக சன் டி.டி.ஹெச்சிற்கு ரீசார்ஜ் செய்து தரப்படும்.


இந்தியா முழுவதும் காற்று உரிமையை சன் நிறுவனம் இயற்கையிடமிருந்து வாங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கான 20 கிலோ காற்று அடைக்கப்பட்ட பேக்கேஜின் சலுகை விலை ரூபாய் இருநூறு மட்டுமே.....ஒரு வருடத்திற்கான காற்றின் சலுகை விலை ரூபாய் 2000  மட்டுமே.
எச்சரிக்கை: எப்போது கடைசியாக காற்று ரீசார்ஜ் செய்துள்ளோம் என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. முன் எச்செரிக்கையில்லாமல்  காற்று துண்டிக்கப்படும். அப்படி துண்டிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ சன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த குளறுபடிகளை தவிர்க்க முப்பது வருடத்திற்கான ஆயும் சந்தா பெக்கேஜ்ஜை வெறும் ஐம்பது ஆயிரத்துக்கு பெற்றிடுங்கள். ஆயுள் சந்தா முடியும் முன் நீங்கள் இறந்து விட்டால் மீதமுள்ள காற்று உங்கள் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

மேலும் விரிவான விளக்கங்களை பெற 000-0000-000 (TOLL FREE) என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள். உங்களுக்கு பதிலளிக்க சுமார் 50,000 ரோபோக்களை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
இதுவும் நீங்கள் படிக்கத்தான்
என்ன கொடுமை சார் இது?
பால்தாக்கரே எனக்கு கடவுள்: ர‌ஜி‌னி
ஷங்கரால் திருடப்பட்டதாக கூறப்பட்ட எந்திரனின் மூலக்கதை ...
ங்கும் இங்குமாகப் பலர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியை உதயை வீரையன் தினமணி மூலம் அருமையாகக் கேட்டுள்ளார்.  வ்ல்லரசின் கைப்பொம்மையாகச் செயல்படும் அமைப்பை எவ்வாறு பன்னாட்டு அவை என்று சொல்ல முடியும். செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கேற்ப முடிவெடுக்கும் ஓர்
அமைப்பை எவ்வாறு அனைத்து நாடுகளின் அமைப்பாகச் சொல்ல முடியும்.   ஈழததில் படுகொலை புரிந்த பொழுது  அதைத் தடுத்து நிறுத்த வேண்டியவர்களுடன் இணையாமல் கொலைகாரக் கூட்டணியுடன் இணைந்த கொடுங்கோலர் பொறுப்பில் இருந்தும் யாராலும் தட்டிக்  கேட்காமல்   இருந்த அமைப்பபை எவ்வாறு  உலக அமைதிக்கான அமைப்பாகக்கூற முடியும்?  ஒபாமா வருகையின்  பொழுது மட்டுமல்ல, மாவீரர் நாள் நெருங்குவதற்கு முன்பும் ஆனச் சரியான காலத்தில் வந்துள்ள அருமையான கட்டுரை.இதனை வெளியிட்டுத் தன் உணர்வையும் வெளியிட்டு்ள தினமணிக்குப் பாராட்டுகள். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஐ.நா. மன்றம் அவசியமானதா?


ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்கப்பட வேண்டும்; இதற்கு அமெரிக்கா ஆதரவு தரும்...'' என்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தாற்காலிக இடம்பெற்றுள்ள இந்தியாவுக்கு இது ஆறுதலான செய்திதான். ஆனால், உலக அமைதிக்கு இந்த அவை உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறதா?இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் என்ன? உலகெங்கும் வாழும் மக்களிடம் சில நேரங்களில் இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் இருக்கிறது. உலக அமைதிக்காகவும், மனித உரிமைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதைச் செயல்படுத்த இயலாதபோது அதற்கு என்ன மரியாதை இருக்கும்?அமெரிக்க ஏகாதிபத்திய நாடு ஆப்கானிஸ்தான்மேல் படையெடுத்தபோதும், இராக்மேல் படையெடுத்து அதன் அதிபரை அநியாயமாகக் கைது செய்து, விசாரணை என்ற பெயரால் மரண தண்டனை விதித்து தூக்குமேடை ஏற்றியபோதும் இந்த அவை வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.இலங்கையில் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோதும், மூன்று லட்சம் பேரை முள் வேலிக்குள் போட்டு சித்திரவதை செய்கிறபோதும் ஐ.நா. அவையும், அதன் பொதுச் செயலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, "இந்த ஐ.நா. அவை எதற்காக இருக்கிறது?' என்ற கேள்வி எழுகிறது.இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைக் கண்டுவிட்டது; அதன் விளைவுகளையும் உணர்ந்துவிட்டது. முதல் உலகப் போரின் முடிவில் "சர்வதேச சங்கம்' அமைக்கப்பட்டது. அது ஒழுங்காகச் செயல்படாததால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதன் முடிவின் தொடக்கமாகவே 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை உதயமானது. இரண்டாம் உலகப் போர் மக்களுக்கு அளவற்ற துன்பங்களையும், இழப்புகளையும் கொண்டு வந்தது; இந்தப் போரில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருள்சேதம் ஏற்பட்டது; ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன; மனித மேதைமையின் மாபெரும் படைப்புகள் அழிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் காயம், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போருக்கு மனிதகுலம் தந்த விலை எழுத்தில் அடங்காதது. சோவியத் யூனியன் 20 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பறிகொடுத்தது; அமெரிக்கா 4 லட்சம் பேரையும், பிரிட்டன் 3 லட்சத்து 70 ஆயிரம் பேரையும் இழந்தது. ஜெர்மன் தரப்பில் 13.6 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர்; காயம் அடைந்தனர்; சிறைப்பிடிக்கப்பட்டனர். இதன் ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜப்பானின் இழப்பு வரலாறு மறக்காதது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 அன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஒரே நொடியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரைச் சாம்பலாக்கியது; 1,56,555 பேரை முடமாக்கியது. 1945 நவம்பர் 20 முதல் 1946 அக்டோபர் 1 வரை நியூரென்பர்கில் சர்வதேச ராணுவ டிரிப்யூனலில் முக்கிய ராணுவக் குற்றவாளிகளின் மீது நீதி விசாரணை நடந்தது. இது ஆக்கிரமிப்பை மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாக அறிவித்தது; நியாயமாகத் தண்டித்தது. நியூரென்பர்க் டிரிப்யூனலின் தீர்ப்பில் காணப்படும் சர்வதேச உரிமை பற்றிய கோட்பாடுகளை ஐ.நா. சங்கப் பொதுச்சபை உறுதிப்படுத்தியது. இதன்மூலம், ஆக்கிரமிப்புப் போரும், மனிதகுலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களும் மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாகும் என்று ஐ.நா. அவை அறிவித்தது. இந் நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின்கீழ் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1948 டிசம்பர் 10 அன்று ஏற்றுக்கொண்டது. "மனித உரிமைகள் பொதுப் பிரகடனம்' அனைத்து நாடுகளும் ஏற்று நடக்க வேண்டிய ஒன்றாகும். 1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மனித உரிமைகள் மீறலால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டது. அந்த மாநாடு வியன்னா பிரகடனம் ஒன்றையும், செயல்திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. அதன்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் 30 விதிகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளைக் குடியியல், அரசியல் உரிமைகள் என்றும், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். குடியியல், அரசியல் உரிமைகள் இக்கால மக்களாட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது மக்களாட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. வாழ்க்கை, சுதந்திரம், தனிமனிதப் பாதுகாப்பு உரிமைகள், அடிமைத்தனம், சித்திரவதையிலிருந்து விடுதலை, சட்டத்தின் முன் சமத்துவம், சட்டத்துக்குப் புறம்பான கைது, சிறையீடு அல்லது நாடு கடத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு, நியாயமான விசாரணை என இந்த உரிமைகள் தொடர்கின்றன. இத்தனை மனித உரிமைகளையும் காலிலே போட்டு மிதிக்கும் இலங்கை அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; எச்சரிக்கைகள் மட்டுமே பலன் தந்துவிடுமா? ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு கொழும்பு சென்றார். ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் சென்றபோது தென்பகுதியில் சிங்களர்கள் "வெற்றி விழா' கொண்டாடிக் கொண்டிருந்தனர். வடக்கே தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைபட்டு, போதிய உணவு, மருந்து, தண்ணீர் இன்றி வேதனையின் விளிம்பில் இருந்தனர். இதேபோன்று ருவாண்டா, போஸ்னியா, காஸô மற்றும் டாவூரில் இனப்படுகொலை நடந்தபோதும் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. இதனால் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு இல்லை. எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்காகவே இடம்பெயர்ந்தனர். ஐ.நா. அமைப்பு ஒருசில நாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பாதுகாப்பு அவையில் விவாதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவர விரும்பியபோது சீனா அதன் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறி அதனைத் தடுத்துவிட்டது. பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 சாதாரண உறுப்பினர்களும் இருக்கின்றனர். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளுக்கே "வீட்டோ' அதிகாரம் உள்ளது. பெரிய சோஷலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா இனப்படுகொலையை ஆதரிக்கிறதா? ஐ.நா. மனித உரிமை அவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 16 நாடுகள் கையொப்பமிட்டால்தான் ஒரு தீர்மானம் விவாதிக்க முடியும் என்பது விதி. இலங்கையில் இருதரப்பும் இழைத்த போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானமும் கைவிடப்பட்டது. இதற்கு மாறாக இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 20 - 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் உள்பட 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நா. மனித உரிமை அவை நிறைவேற்றிய தீர்மானம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. "இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது; இது மனித உரிமை அவையின் கையாலாகாத் தன்மையைக் காட்டுகிறது' என மன்னிப்பு சபை சாடியுள்ளது, "ஐ.நா. மனித உரிமை அவை படுதோல்வியைச் சந்தித்துள்ளது' என்று லண்டன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இந்த இனப்படுகொலையை முற்போக்கு முகாமைச் சேர்ந்த சீனா, ரஷியா, வியட்நாம், கியூபா முதலிய இடதுசாரி நாடுகள் ஆதரித்து வருவதையே உலகம் வேதனையோடு விமர்சனம் செய்கிறது.இவர்களுக்கு மானிட விடுதலை பற்றி அக்கறையே இல்லையா? சொந்த நாட்டின் சுயநலத்தில் அடங்கிவிட்டார்களா? மனித உரிமை பற்றியும், உலக அமைதி பற்றியும் பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  இந்தியாவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. 'காந்தியம்' என்பதும் "ராஜீவ் காந்தியம்' எனக் குறுகிப் போய்விட்டது. இந்திய நாடு இலங்கையை ஆதரித்து நிற்பது ஒன்றும் வியப்பல்ல. "இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது' என இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாகவே பேசியுள்ளார். இந்தியா இதனை மறுக்காமல் பெருமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் யாருக்கும் வெட்கமில்லை. மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதுபோல உலகத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. அவை வலிமைமிக்கதாக இருக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மூன்றாவது உலகப் போரை உலகம் சந்திக்கும்.  அதன்பிறகு மனித இனமே இருக்காது.

புதன், 17 நவம்பர், 2010

தமிழகத்தில் காங்கிரசு முதல் நிலையை அடையும்: வாசனின் கற்பனை

கிடக்கிறதெல்லாம் கிடக்கக் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிதான்  வாசனின் பேச்சைப்பார்த்ததும் நினைவிற்கு வருகிறது.
ஊழல் பணக்குவியலாலும் அதிகாரத்தாலும் அறியாமையாலும் சிலர் காங்.கின் பின் நிற்கலாம். ஆனால்,  மொத்தத்தில் அழித்தொழிக்கப்படும் கட்சியில் காங். முதலிடம் வரும் என்று சொல்லலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மொழி பெயர்ப்பாளருக்குத் தொடர்புடைய  இரு  மொழியறிவும் துறையறிவும் தேவை. அந்த வகையில் துறையறிவு என்பது பன்முகத் துறையறிவாக விரிவாக்கம் பெற்றுள்ளது. ஆதலின் ஆசிரியர் கூறுவதுபோல் பன்முக அறிவும் வழக்காற்று அறிவும் வேண்டப்படுகின்றது. உலக நலத்திற்கும் வளத்திற்கும் ஒற்றுமைக்கும்  மொழிபெயர்ப்புத் திறன் வேண்டப்படுகின்ற ஒன்றாகிறது. மொழிபெயர்ப்பாளர்களை  வளர்க்கும் பணியிலும் உருவாக்கும் பணியிலும் ஊக்கப்படுத்தும் பணியிலும் பல்கலைககழகங்கள் முன்வரவேண்டும். 
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=333299&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8Dஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.  தற்போதைய  முன்தணிக்கை முறையைக் கைவிடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். ஏனெனினல் இதனால் பின்னூட்டக் கருத்துகளை உடனுக்குடன் படிக்க முடிவதில்லை. அதே நேரம் பழைய முறையைப் பின்பற்றி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் பார்வையிட்டுத் தகாத முறையில் எழுதப்பட்ட வரிகளை நீக்க வேண்டுகின்றேன். பண்பட்ட முறையில் எழுதும் வாசகர் மூவருக்கு வாரம் தோறும் பரிசளிப்பு என்ற ஊக்கு முறையைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்கின்றேன். இப்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையால் 
படிப்போரிடம் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும். என்பதையும் கவனத்தில் கொள்ள 
வேண்டுகின்றேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதைப்படிக்கும் இக்காலத் தலைமுறையினருக்குக் காங். கட்சி தூய்மையின் பிறப்பிடம் என்று எண்ணத் தோன்றும். இதுபோன்ற நடுநிலை நடவடிக்கைகளுக்கு விலையாக பெரோசு காந்தி தன் உயிரையே கொடுத்தார் என்பதையும் இதே டி.டி.கே.  மீதான ஊழல் தொடர்பில் காங். எவ்வாறு நடந்து  கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனினும் அரசியல் பண்பாடும் நாடாளுமன்ற மரபும் தேய்பிறைபோல்  இறங்கு முகமாகச் செல்கிறது என்பது மட்டும் உண்மை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
ஜனநாயகம் அழியும் - ஊழல் நாயகம் ஓங்கும்

First Published : 17 Nov 2010 04:09:40 AM IST


1957-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் மிகமுக்கியமான ஒரு பிரச்னையை பெரோஸ் காந்தி எழுப்பி, அது குறித்து  விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் நேருவின் மகளான இந்திராவின் கணவரான பெரோஸ் காந்தி இப்பிரச்னையை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் முழு கவனமும் அதன்பால் திரும்பியது.பெருமுதலாளியான ஹெச்.டி. முந்திராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செய்துள்ள முதலீடு பற்றியதே இப்பிரச்னை ஆகும். 1957-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை குறித்து ஒன்றரைமணி நேர விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய பெரோஸ் காந்தி, பின்வருமாறு குற்றம்சாட்டினார். 1957-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி முந்திரா நிறுவனங்களில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்களும் மற்றும் அதே நிறுவனங்களில் மேலும் ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய்களும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நொடித்துப்போன நிதிநிலைமையில் முந்திராவின் நிறுவனங்கள் இருந்தபோது அவரை அதிலிருந்து மீட்பதற்காகவே ஆயுள் காப்பீட்டுக் கழகம் இவ்வளவு பெரும்தொகையை அந்நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. தனி ஒரு மனிதரை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. எனவே, இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும் என அவர் வற்புறுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் அசோக் மேத்தா, பிரபாத்கர், ராம் சுபாத் சிங், மகாவீர் தியாகி உள்பட பலர் இக்குற்றச்சாட்டை வலியுறுத்திப் பேசினார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். இந்த அவைக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பிலிருந்தோ, கடமையிலிருந்தோ, விலகிச்செல்லவோ, வேறு சில அதிகாரிகள் மீது பழிபோடவோ நான் விரும்பவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை நிதியமைச்சகம் நிர்வகிக்கவில்லை. அக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் நான் தலையிடுவது சரியானதாகவோ அல்லது நடக்கக்கூடியதோ அல்ல. பிற நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது அதற்கென அமைக்கப்பட்ட முதலீட்டுக் குழுவைக் கலந்தாலோசனை செய்துதான் வாங்கப்படுகின்றன. ஆனாலும் இந்த அவையில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவிட்டதன் காரணமாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அதுகுறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று கூறி விசாரணைக் கமிஷன் அமைக்க அவர் ஒப்புக்கொண்டார். அதற்கிணங்க 1958-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி நீதிபதி எம்.சி. சக்ளா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அமைச்சராக இருந்த டி.டி.கே.,  நேருவுக்கு மிக நெருக்கமானவர். குற்றம்சாட்டிய பெரோஸ் காந்தி அவரது சொந்த மருமகன். தனது மாமனார் தலைமையில் இயங்கும் அரசுக்கு இதனால் பெரும் தலைக்குனிவு ஏற்படும் என பெரோஸ் காந்தி நினைத்து அமைதியாக இருக்கவில்லை. ஊழலை யார் செய்தாலும் அம்பலப்படுத்தி அதைச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என அவர் உறுதி பூண்டிருந்தார். 1958-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியே அதாவது அமைக்கப்பட்ட 3 நாள்களிலேயே சக்ளா கமிஷன் விசாரணையைத் தொடங்கியது. 1958-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்து பிப்ரவரி 10-ம் தேதி சக்ளா கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. முந்திரா பிரச்னை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 30 நாள்களில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அடுத்த 20 நாள்களில் முழுவிசாரணையும் முடித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. விசாரணைக் கமிஷனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய குறிப்புகள்:  முந்திரா நிறுவனம் தன்னுடைய பங்குகளை எப்படியாவது விற்க வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வத்தைவிட, அதை வாங்கியவர்கள் மிகுந்த அவசரம் காட்டியுள்ளனர்.  சந்தையில் நற்பெயரில்லாத முந்திராவுடன் எத்தகைய முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துகொள்ளாமல்  இந்தப் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.   பல்வேறு போலியான பங்கு ஆவணங்கள் குறித்த வழக்குகளில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையும், பல வங்கிகளை மோசடி செய்துள்ளார் என்பதையும் கவனிக்காமல் இந்தப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டுக் குழுவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னை  கொண்டு செல்லப்படவேயில்லை. நிதித்துறைச் செயலராக இருந்த ஹெச்.எம். படேல் அறிவுரையின் பேரிலேயே முந்திரா பங்குகள் வாங்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவரங்களை நிதியமைச்சர் அறியாமல் இருக்க முடியாது. தன் கீழ்பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு அமைச்சர் முழுமையான பொறுப்பை ஏற்றுத் தீரவேண்டும். தனது விருப்பத்துக்கும் தான் கூறியதற்கும் மாறாக அதிகாரிகள் நடந்துகொண்டதாக அவர் ஒருபோதும் கூறமுடியாது என விசாரணைக் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பிப்ரவரி 5-ம் தேதியன்றே நிதியமைச்சர் டி.டி.கே. தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிரதமருக்கு அவர் அனுப்பிய விலகல் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது முக்கியமானதாகும்.நிதித்துறைச் செயலர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பாளி என்பது சரியானதாகும். ஏனென்றால் நான் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் பதில்கூற வேண்டிய பொறுப்பில் உள்ளவன். இதன் காரணமாக என்னை உடனடியாக விடுவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதே நாளில் பிரதமர் நேரு டி.டி.கே.க்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.  இந்தப் பிரச்னைக்கு யார் பொறுப்பாளியாக இருந்தாலும் நமது நாடாளுமன்ற மரபின் அடிப்படையில் அமைச்சர்தான் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச்சரியானது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அமைச்சர் எதுவும் அறிந்திருக்காவிட்டாலும், மற்றவர்களின் நடவடிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுத்தீர வேண்டிய நிலை உள்ளது.  நாம் மிகமுக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் நல்ல மரபுகளைப் பின்பற்றியே தீரவேண்டும். இந்தப் பிரச்னையில் உங்களுடைய பங்கு என்பது மிகமிகச் சிறியது என்பதில் எனக்கு எள்ளவும் ஐயமில்லை என்று எழுதிவிட்டு அவருடைய பதவி விலகலை ஏற்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். உன்னதமான ஜனநாயக மரபுகளை நிலைநாட்டுவதில் பிரதமராக இருந்த நேருவும்  நிதியமைச்சராக இருந்த டி.டி.கே.யும் உறுதியாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஆனால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நடைபெறுவதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.  தாங்கள் நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் துச்சமாக மதிக்கப்படுவதைக் காண நல்லவேளையாக அந்தத் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களில் அலைக்கற்றை ஊழல்தான் மிகமிகப்பெரிய ஊழலாகும். மத்திய அரசின் ஓராண்டுக்கான நிதி வருவாயில் மூன்றில் ஒருபங்குக்கு இது சமமானதாகும். பிரதமரின் அலுவலகம், சட்ட அமைச்சகம் ஆகியவை தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, அமைச்சர் ஆ. ராசா தொலைத்தொடர்புத் துறையில் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த அலைக்கற்றைகளை அளிப்பதில் ஏலமுறையைப் பின்பற்றாமல் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற முறையைப் பின்பற்றி 122 நிறுவனங்களுக்கு மொத்தம் 9,013 கோடி ரூபாய்களுக்கு இதற்கான அனுமதிகளை வழங்கினார். இவ்வாறு அனுமதிபெற்ற பல நிறுவனங்கள் மனை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவை. அலைவரிசை ஒதுக்கீட்டை மிக மலிவான தொகைக்குப் பெற்ற இந்த நிறுவனங்கள், அடுத்த ஒரு சில மாதங்களுக்குள்ளாக அனுபவம் வாய்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவற்றைப் பலமடங்கு அதிக விலையில் விற்று பலஆயிரம் கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றன என்பது குற்றச்சாட்டாகும். இதனால் அரசுக்கு வரவேண்டிய ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.யை விசாரிக்குமாறு ஆணை பிறப்பித்தது. ஓராண்டு கழித்த பிறகும்கூட எந்த உண்மையும் வெளிவரவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பகிரங்கமாக இந்த விசாரணையில் இதுவரை சி.பி.ஐ. ஒன்றுமே செய்யவில்லை. விஷயம் மிகக்கடுமையானது. குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சரோ இன்றைக்கும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார். இதுதான் அரசாங்கம் செயல்படும் அழகா ஓராண்டு காலமாக நீங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உங்களைத் தடுப்பது யார் என மிகக்கடுமையாகச் சாடி  நவம்பர் 15-ம் தேதியன்று விரிவான விசாரணை  நடத்தப்போவதாக எச்சரித்தது. இவ்வளவும் அப்பட்டமாக வெளியான பிறகும் அமைச்சர் ராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகியிருக்கும்படி அவருக்கு ஆணையிடவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக்குற்றச்சாட்டை எழுப்பியவுடனே பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக்குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால்  உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யவேண்டிய அவசியமே இருந்திருக்காது.   இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கும் அதை மறைப்பதற்கும் காரணமானவர்களை மூடிமறைக்கத் துணைநின்ற பிரதமர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளானபோதிலும் மன்மோகன் சிங்கைச் செயல்படவிடாமல் தடுத்த பெருந்தலை எது? ராசா சார்ந்திருக்கிற தி.மு.க.வின் தலைவரான முதல்வர் மு. கருணாநிதி, ராசா ஒரு தலித்;  எனவேதான் அனைவரும் அவர் மீது பாய்கிறார்கள் என ஜாதிச் சாயத்தைப் பூசி ஊழலை மறைக்க முயன்றார். முந்திரா ஊழலைவிட ஒரு லட்சம் கோடி மடங்கு அதிகமாகச் செய்யப்பட்ட "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் உண்மையைக் கண்டுபிடிக்க ஓராண்டு காலமாக சி.பி.ஐ.யால் முடியவில்லை என்பதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இந்த ஊழலிருந்து அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற முயன்ற பெரும் தலைகள் எவை எவை? இந்தத் தலைகள் இந்த ஊழலால் நிச்சயமாக ஆதாயம் அடைந்த தலைகளாகத்தான் இருக்க முடியும். எனவே இந்த ஊழலுக்குப் பின்னணியில் உள்ள அந்தத் தலைகளையும் அம்பலப்படுத்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை நாடாளுமன்றத்துக்கு உண்டு. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தை முடக்காமல் இருந்தால் பதவி விலகுமாறு ராசாவை பிரதமர் கோரியிருக்க மாட்டார். தான் தவறு செய்யாமல் இருந்தும் தனக்குக் கீழிருந்த அதிகாரிகள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு சக்ளா கமிஷனின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பதவி விலகினார் டி.டி.கே. ஆனால் இன்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டிய பிறகும், உச்ச நீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்த பின்னாலும் பதவி விலக மறுத்தார் அமைச்சர் ராசா. பிரதமருக்குத் தெரியாமல் தான் எதுவும் செய்யவில்லை எனக் கூறினார். அப்போதும் பிரதமர் ஊமைச்சாமியாராகக் காட்சி தந்தார். சி.பி.ஐ. தடுமாறுகிறது. அதற்குக் காரணம் ராசாவுக்குப் பின்னணியில் உள்ள பலம் வாய்ந்த ஊழல் சக்திகளே என்பது வெள்ளிடைமலை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தி, இந்த மாபெரும் ஊழலுக்குக் காரணமானவர்களையும், பினாமி பெயர்களில் மறைந்திருந்து கூட்டுக்கொள்ளை நடத்திய அனைவரையும் கண்டறிந்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவும், சூறையாடப்பட்ட மக்கள் பணத்தை மீட்கவும் வழி வகை செய்யப்பட வேண்டும். ராசாவின் பதவி விலகல் ஆரம்பமே தவிர முடிவல்ல. குற்றவாளிகள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயகம் அழிந்து ஊழல் நாயகத்தின் கை மேலோங்கும்.

பட்டுச் சேலையில் தலைவர்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

வரதராசப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு

வரதராஜப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு


கொழும்பு, நவ.16- இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஆடம்பர வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

காட்டிக் கொடுப்பதற்காகவும் இனப்பகையுடன் கூட்டணி கொள்வதற்காகவும் பெறும் பரிசுகளும் சலுகைகளும் வரலாற்றில் கறைகளாகப் படியும். இந்தியத்தின் ஏவலால் தாய்மண்ணிற்கு இரண்டகம் - வஞ்சகம் - துரோகம் -புரிந்தும் மன அமைதியின்றி வாழ்பவருக்கு இரங்கல். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:33:00 PM
It is good.He deserves to get an apartment from the government because he organizing the tamils from the optimistic way.
By Fernandoz
11/16/2010 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சங்கரராமனைக் கொன்றவர்களைக் கைது செய்த துணிவாளர் மரணம்

முன்னாள் போலீஸ் அதிகாரி பிரேம்குமார் சென்னையில் மரணம்


சென்னை, நவ.16: முன்னாள் போலீஸ் அதிகாரி சங்கரராமன். சென்னையில் இன்று மரணமடைந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பிரேம்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக வந்த பிரேம்குமார் அங்கு மரணமடைந்தார்.இவர் காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரரை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

இவர் தவறு செய்திருக்கலாம். ஆனால், துணிந்து காஞ்சி சங்கராரமனைக் கொன்ற குற்றவாளிகளைக் கைது செய்தார். துணிவு மிக்க காவல்துறை அதிகாரிக்கு வீர வணக்கம். 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:24:00 PM
HE HAS NOT ARRESTED SANKARACHARY ON HIS OWN! EVERY THING FROM THE INSTRUCTION OF JAYA, THE THEN CM!
By SAVITHIRIAMMA, SAPTUR
11/16/2010 3:42:00 PM
THE MAN WHO SHOWED THE TRUE HIDDEN AND UNKNOWN FACES OF DUPLICATE SHANKARACHARAYARS. MAY HIS SOUL REST IN PEACE.
By Paris EJILAN
11/16/2010 3:36:00 PM
நல்லது
By kumar
11/16/2010 2:53:00 PM
ஒரு மோசமான போலீஸ் அதிகாரி, ஒரு மோசமான தலைவர் சொல் கேட்டு, மோசமான முறையில் புனிதர்களை துன்புறுத்தினார். இப்போது மோசமான முறையில் இறந்தார். அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
By Nagarajan
11/16/2010 2:37:00 PM
இந்த மனிதன் தனது பதவிக்காலத்தில், சாமான்ய ஜனஙகளை மதித்ததெ கிடையாது ! வாடிப்பட்டி நல்லகாமன் வழக்கில், இவருடைய சுயரூபம் தெரிந்து சக அதிகாரிகள் முகம்சுழித்தது தனிக்கதை, அதில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் சக அதிகாரி எவரும் அதற்காக வருத்தப்படவெயில்லை ! உலகிலெயெ தான் மட்டுமெ யொக்கியன், தன்ன்க்கு தெரியாதது எடுவுமில்லை என்ற மன்டைக்கனம் கொன்டவர் ! ஆன்டவன் அருள்ருந்தால் ஆத்மா சாந்தியடையட்டும் !
By surya
11/16/2010 1:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *