திங்கள், 26 ஜூலை, 2010

மத்திய அரசு மானியத்தில்தான் ஒரு ரூபாய் அரிசி: இளங்கோவன்
கம்பம்,ஜூலை 25: மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான், தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.தேனி மாவட்டம், சின்னமனூரில் காமராஜர் சிலையைத் திறந்துவைத்து, அவர் மேலும் பேசியதாவது:"காமராஜர் ஆட்சியில் கக்கன் உள்பட 5 அமைச்சர்கள் சுயநலமில்லாமல் உழைத்ததால்தான், திமுக உள்பட அனைத்துக் கட்சியினரும் காமராஜர் ஆட்சியை இன்றுவரை பெருமையாகப் பேசுகின்றனர். காமராஜர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகின.இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை எவ்வாறு ஆட்சிப்  பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதில்தான், அதிக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். நான் பஞ்சாப் அரசியலை சொன்னேன், நீங்கள் எதாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல. காமராஜர் 10 ஆயிரம் நாள்கள் மக்களுக்காகச் சிறையில் இருந்துள்ளார்.இன்றைய ஆட்சியாளர்களைப் போல் மக்களுக்கு பணம் கொடுத்தாலோ, நிலம் கொடுத்தாலோ, பெண்களுக்கு நகை கொடுத்தாலோ ஆட்சி நிலைக்காது என்று  தெரிந்துதான் காமராஜர் கல்வியைத் தந்தார், மாணவர்களுக்குச் சீருடையும், மதிய  உணவையும் தந்தார். அப்போது,மதிய உணவுத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகளையும்  மீறி 100 கோடியில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் ஒரு பைசா கூட வழங்கவில்லை.இன்று, தமிழக அரசின் 1 ரூபாய் ரேஷன் அரிசித் திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 7 மானியம் வழங்குகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் மத்திய அரசு  அளித்து வருகிறது. தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் செல்லும் மிதவை பஸ், சொகுசு பஸ்கள் மத்திய அரசின் ஜெயபால் ரெட்டி வழங்கியது. ஆனால், இதுபோன்ற செய்திகள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன.பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏறினால், அதை எப்படித் தக்கவைப்பது என தில்லி முதல்வரிடம் இடதுசாரிக் கட்சிகளும், பாஜகவும், பிற மாநிலக் கட்சிகளும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.காங்கிரஸ் கட்சி குடும்பப் பாசத்தைவிட நாட்டுப் பாசம் மிகுந்த கட்சி. சோனியாகாந்தி நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார். அவரது மகன் ராகுல்காந்தி துணைப் பிரதமராகி விட முடியும். மகள் பிரியங்கா தில்லி முதல்வர் ஆகியிருக்கலாம். மருமகன் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆகியிருக்க முடியும்.ஆனால், பதவிகளை விரும்பாத சோனியா, நாட்டின் மீது பாசமாக உள்ளார்.காங்கிரஸ் மீது அக்கறை உள்ளவர்களும், காங்கிரஸ் கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புபவர்களும் மதுரைக்கு ஜூலை 31-ம் தேதி வாருங்கள்' என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

பஞ்சாப்பில் பேச வேண்டியதைஇங்கு ஏன் பேச வேண்டும் கோவன்? துணிவிருந்தால் நேரடியாகத் தாக்கட்டுமே! மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் பொழுது தன் மகளைக் காங்.கட்சியின் தலைவராக நியமித்தது காங். ஆட்சிதானே! கட்சியில் குடும்பத்தினருக்குப் பதவி கொடுத்த முன்முறைக்கட்சி காங்.தானே! மத்திய அரசுதான் பணம் தருகின்றது என்றால் காங்.ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே! இன்றைய காங்.தலைவர்களும் அமைச்சர்களும் முந்தைய காங். தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வழிமுறையினர்தானே! ஊழலை அறிமுகப்படுத்தியதும் நீதிமன்றத் தீர்ப்புகளை மிதித்ததும் காங்.தானே! தமிழ்நாட்டின் நிலப் பகுதியும் மொழி உரிமையும் பறிபோனதற்குக் காரணம் காங்.தானே! கட்சி அரசியலில் வன்முறையைப் புகுத்தியதும் காங்.தானே!இந்திய நிலப்பகுதியை அயலவரிடம் பறி கொடுத்ததும் காங்.தானே! தேர்தலில் பேரம் பேசும் கோவன் பேரம் படிந்ததும் முடங்கிக் கிடப்பார் என்பது தெரிந்த செய்திதானே! கோவனுக்கெல்லாம் மறுப்பு எழுத வேண்டியுள்ளதே என்ற வேதனையுடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:35:00 AM
soniya makal methu mukaoum anbaka ouilar athanal than tamil makal 2lakes kondar
By tamilan
7/25/2010 11:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழில் அர்ச்சனை: நடைமுறைக்கு வருமா?


வேதாரண்யம்: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய கடந்த காலத்தில் தமிழக அரசு வகை செய்தது. இதைச் செயல்படுத்தும் வகையில், பல கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பரத் தட்டிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கோயில்களில் இந்த நடைமுறை இன்று வரை சாத்தியமில்லாத  நிலையே நீடிக்கிறது. தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்கு மொழியாகவும், பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்றவற்றின் பயிற்று மொழியாகவும் மாற வேண்டும் எனப்  போராட்டங்கள் நடைபெறும் அதேநேரத்தில், அதற்கான நடவடிக்கைகளும்  சாத்தியமாகி வருவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இறைவனை வழிபட மட்டும் இன்று வரை பொருள் புரியாத மொழி சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யேசுவரர் கோயில்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட சிறப்புப் பெற்றது. இந்தக் கோயிலில் இறைவனை வழிபட்டு வந்த ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் கோயிலின் பிரதானக் கதவுகளை மூடிச் சென்றுவிட்டதாகவும், பின்னர் இங்கு வந்த  சமயக்குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம்பாடி கதவுகளைத் திறக்கவும், அடைக்கவும் செய்ததாக செவிவழித் தகவல்களாகச் சொல்லப்படுகிறது.இது இறைவனை வழிபட வடமொழிகளுக்கு நிகரானது தமிழ்  என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில்,  ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழாவின் போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் திருவிழாவும் நடந்து வருகிறது.  இது தமிழுக்கு எடுக்கப்படும் விழாவாகவே  பலரும் கருதுகின்றனர்.அதேநேரத்தில், இங்கு தமிழில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட வகை  செய்யப்படவில்லை.     ஆதனூரைச் சேர்ந்த முருகையன் தனது மகனின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை தமிழில் அர்ச்சனை செய்ய கோயிலுக்குச் சென்றுள்ளார். தமிழில் அர்ச்சனை செய்வது இல்லை என மறுத்த அர்ச்சகர், பூஜைக்குரிய பொருள்களைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.    இதுகுறித்து கோயில் தக்காரும், இந்து சமய அறநிலையத் துறை நாகை உதவி ஆணையருமான தென்னரசு கூறியது: அர்ச்சகர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அரசின் உத்தரவும் உள்ளது. தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மறுப்பு குறித்து முறையான புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். நாங்கள் 5 ஆண்டுகள் கற்றுக் கொண்டதைத்தான் செய்கிறோம். தமிழில்  அர்ச்சனை செய்யப் பயிற்சியோ, வழிகாட்டுதலோ இல்லை என்கின்றனர் அர்ச்சகர்கள்.
கருத்துக்கள்

சமயம் வழித் தமிழ் வளர்த்ததாகப் பெருமை பேசிக் கொள்ளும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழி்ல் வழிபாடு கிடையாது. காரணம் கேட்டால் அரசின் கட்டுப்பாட்டில் தங்கள் மடம் வராது என்கிறார்கள். உண்மையில் இம்மடத்தினர்தான் முன் முறையாகத் தமிழ் வழிபாட்டை மட்டுமே நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு என்று கேட்டால் சமற்கிருதத்தில் ஓதி விட்டுத்தான் தமிழ் வழிபாட்டைத் தொடங்குவர். மூலவர் தவிரப் பிற இறையிடங்களில் தமிழில் வழிபாடு செய்யுமாறு கேட்டால் மூலவர்க்கு மட்டுமே தமிழில் வழிபாடு என்று மறுக்கின்றனர். தமிழ் வழிபாட்டிற்கு எதிரான பூசாரிகள் விலக்கப்படுவார்கள் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்து தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெறும் சமசுகிருத வழிபாடு வேண்டுமென்றால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேண்டுகோள் அடிப்படையில் நடத்தப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட அம்பிகாபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: இலவசத்தை இலவசமாகக் கொடு!

இந்தியாவில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளை கேபிள் டி.வி. நிறுவனங்கள் மூலம் பெறுவதற்கு மூன்று வகையான கட்டணங்களைத் தீர்மானித்திருப்பதாக இந்திய தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையம் (பதஅஐ)அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதில் வியப்பும் வருத்தமும் தருவது என்னவென்றால், முதல்வகை கட்டணமான மாதம் ரூ. 100-க்கு தூர்தர்ஷன் உள்பட 30 இலவச ஒளிபரப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருப்பதுதான். இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் ஏன் ரூ. 100 செலுத்த வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம், இது கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கான வாடகை என்பதுதான்.முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான காலகட்டத்தில், ஒருமுறைச் செலவாக ஆன்டெனா மட்டும் வாங்கினால் போதும், ஒளிபரப்பை இலவசமாகப் பார்க்க முடிந்தது. இந்த 20 ஆண்டுகளில் செயற்கைக் கோள்களும் தொழில்நுட்பமும் முன்னேற்றம் கண்டுவிட்டது. இனியும்கூட, இலவச அலைவரிசைகளையும் மாத வாடகை செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்ற நிலையை அரசே உருவாக்குவது சரியாக இருக்குமா? இலவச அலைவரிசைகள் அனைத்தையும் சிறு "செட்-டாப்' கருவி மூலம் எந்தவொரு குடும்பமும் இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் இலவசமாகக் காண முடியும். இதற்கான கருவிகளை மிகக் குறைந்த விலையில் அளிக்க சிறுதொழில்கூடங்கள் தயார்.  இது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் அனைத்துத் தனியார் அலைவரிசைகளையும் அரசாங்கமே இந்த நிறுவனங்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ஒளிபரப்பினால்தான் முடியும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும்.ஒரு குடும்பம் தன் வீட்டுக்கு  இலவச ஒளிபரப்புகள் மட்டுமே போதும் என்று விரும்பினால், இதற்கான ஒருமுறைச் செலவை மட்டுமே செய்துவிட்டு, முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான  காலகட்டத்தில் எப்படி மாத வாடகை பற்றிய கவலையில்லாமல் பார்த்தார்களோ அதேபோன்று பார்க்கச் செய்வதற்கான அனைத்துத்  தொழில்நுட்பமும், அரசு அதிகாரமும் இருக்கும்போது, ஏன் இலவச அலைவரிசைகளுக்கும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரைச் சார்ந்திருக்கும்படியான ஒரு சூழலை தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையமே உண்டாக்குகிறது? தற்போதுள்ள சூழலில் டிடிஎச் தொழில்நுட்பம் நடைமுறையில் இருந்தாலும், இலவச அலைவரிசை (தூர்தர்ஷன் உள்பட) மட்டுமன்றி, கட்டண அலைவரிசைகளையும் கேபிள் டி.வி. நிறுவனங்கள் அல்லது அவர்களைச் சார்ந்து செயல்படும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாகத்தான் பெறமுடியும்  என்கிற நிலைமை இருக்கிறது. இதனால் தூர்தர்ஷனைக்கூட ஆபரேட்டர்கள் தயவில்தான் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து ஒளிபரப்பை வாங்கி, கம்பிகள் மூலம் வீடுகளுக்கு அளித்து வருகிறார்கள். இவர்களது சங்கம் போராட்டம் நடத்தினால், தாங்கள் சார்ந்துள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒளிபரப்புகளை மட்டுமன்றி, இலவச ஒளிபரப்புகளைக்கூட பார்க்க முடியாதபடி இருட்டடிப்புச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவியுள்ள இடத்தில் மின்தடை என்றால், அந்தப் பகுதியில் உள்ள எந்த வீட்டுக்கும் ஒளிபரப்பு இருக்காது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்தால்கூடப் பரவாயில்லை, அவர்களுக்குத் துணைநிற்கிறதே, இதுதான் அவலத்திலும் அவலம். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 சதவீதம் போலி அட்டைகள் என்று அரசு சொல்கிறது. ஆக, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 200 வீதம் (டிடிஎச் என்றாலும், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் என்றாலும்) கட்டணம் செலுத்த நேரிடும் என்றால், ரூ.360 கோடி கேபிள் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்குப் போகிறது. இதில் தொழில்நுட்பத்தைத் தவிர உடல்உழைப்போ, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களோ கிடையாது. ஆனால் லாபமோ பல நூறு மடங்கு! இதற்காக அந்தந்த  உள்ளாட்சிகளுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்தும் வரியைக் கணக்கிட்டால் மிகமிகச் சொற்பம்.மேலும், இலவச அலைவரிசை, கட்டண அலைவரிசை ஆகியவற்றில் யார் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிபந்தனைகள் வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அத்தகைய வேறுபாட்டை உருவாக்கவே இல்லையே! கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டிய அலைவரிசைகளைப் பார்க்க விரும்புவோர் தாராளமாக அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பைப் பெறட்டும். அதைப் பற்றி யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால், மாத வாடகை செலுத்த மனமின்றி, வழியின்றி, இலவச அலைவரிசைகளை மட்டுமே விரும்பும் குடிமக்களின் நியாயமான உரிமையைக் கூட ஏன் அரசு நிலைநாட்டக்கூடாது. சட்டம் இயற்றிப் பறிக்கப் பார்க்கிறதே, ஏன்?தமிழ்நாட்டில் நல்லதொரு முன்னுதாரணமாக அரசு கேபிள் என உருவாயிற்று. ஆனால், அது செயல்படும் முன்பாகச் செயலிழந்தது என்பதோடு, அதைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிய அதிகாரி உமாசங்கர் மீது அரசும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் நடைமுறை உண்மை.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வால்வு ரேடியோ (வானொலி பெட்டி) வாங்கியவர்கள் உள்ளூர் தபால் அலுவலகத்தில் அதற்காக ஆண்டுதோறும்- ஒலிபரப்பைக் கேட்டு அனுபவிப்பதற்காக-உரிமக் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்றிருந்தது. அதற்காக தனி பாஸ் புத்தகம் கொடுக்கப்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டு, டிரான்ஸ்சிஸ்டர் நடைமுறைக்கு வந்தபோது, வால்வு ரேடியோக்களும் காணாமல் போயின, கட்டணமும் மறைந்தது. இப்போது வானொலியை யார் வேண்டுமானாலும் கேட்கலாம், இலவசம்தான். தற்போது பண்பலை ஒலிபரப்பில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவையும் இலவசம்தான்.ஒளிபரப்புத் துறையில் தூர்தர்ஷன் நுழைந்தபோது, வெறும் ஆன்டெனா செலவு மட்டும்தான். ஒளிபரப்புக்குப் பணம் கிடையாது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது. விளம்பரங்கள் உள்ள சேனல்கள் இலவசமாக, முற்றிலும் இலவசமாக மக்களுக்குத் தரப்பட வேண்டும். இதில் இடைத்தரகர்களுக்கு இடமிருக்கக் கூடாது. இலவச அலைவரிசைகள் அனைத்தையும் யார் தயவும் இல்லாமல் இலவசமாகப் பார்க்க வகை செய்வதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்.
கருத்துக்கள்

சரியான கோரிக்கை. ஆனால், அரசே உடந்தையாக உள்ளதால் இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்க முடியும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 2:57:00 AM
NOW CABLE OPERATORS ARE NOT THE EARLIER ORDINARY GUYS, THEY ARE NOW MAFIAS. TO WHOM YOU ARE GIVING ADVICE? THIS CENTRAL AND STATE GOVERNMENTS ARE WORKING FOR THE UPLIT OF AMBANI,TATA AND OTHERS. THEN HOW YOU GET FREE TELECAST IN POORS' HOUSE
By RUSKEEN
7/26/2010 2:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசின் நிலையில் மாற்றம்: இலங்கை எம்.பி தகவல்

கொழும்பு, ஜூலை.25: கடந்த காலத்தைவிட ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இதை சமீபத்திய தமது இந்தியப் பயணத்தின்போது அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியை இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:புதுதில்லிக்கு 6 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தன் தலைமையில் சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விரிவாக உரையாடினோம். மேலும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினோம்.இலங்கையில் இன்னும் 50 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில்தான் உள்ளனர். அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து இந்தியப் பிரதமரிடம் பேசினோம்.இதுதொடர்பாக இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார். ஒட்டுமொத்தமாக இந்தியா-இலங்கை இடையே நிலவும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை காக்க இந்திய அரசு முழுமூச்சுடன் செயல்படும் என மன்மோகன் சிங் தெரிவித்தார்.கடந்த காலங்களைவிட இந்திய அரசின் நிலைப்பாட்டில் தற்போது நிறைய முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியா மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க முயற்சிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு முனைப்புடன் உள்ளதும் உண்மை. தில்லியில் இலங்கை அரசுத் தரப்புக்கு எந்தளவு கெளரவம் அளிக்கப்பட்டதோ அதே அளவு வரவேற்பும், உபசரிப்பும் தமிழ் மக்கள் சார்பாக சென்ற எங்களுக்கும் கிடைத்தது. இது மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

பாவம் அப்பாவிகள்! தாங்களும் ஏமாற்றமுற்று பிறரையும் ஏமாற்றப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்களா அல்லது வேறு வழியின்றிக் கூறுகிறார்களா எனத் தெரியவில்லை. கொள்ளையடித்த பங்காளிகளில் சண்டைவரும்பொழுது ஒருவன் உடைமையாளனிடம் நீதிமான் போல் பேசினால் அவன் மேலும் வஞ்சகனாகத்தான் கருதப்படுவான். கூட்டுக் கொலைகாரன் அவ்வாறு கூறினால் அதன் காரணத்தை அறிய வேண்டும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டிய இந்தியா குறைந்தது சம உரிமை தராவிட்டாலும் மீனவர்படுகொலையை நிறுத்தா விட்டாலு்ம் தமிழ் ஈழத்திற்கு அங்கீகாரம் சொல்வோம் எனக் கூறினால் அதுதான் உண்மையான மாற்றம். பிறவெல்லாம் நமக்குத் தருவன வெறும் ஏமாற்றம் மட்டுமே. 
ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 10:11:00 PM
இலங்கை பிரச்சினையை நீங்க பார்த்துக்கோங்கன்னு இந்தியா சொன்னால் நாங்க பார்த்துக்கொள்வோம் என்று சொல்லுவது சரி அல்ல .இந்தியா தலை இடாது என்று வைத்துக்கொண்டால் வேறு ஒரு நாட்டு உதவி யை தைரியமாக அப்போது இலங்கை களத்தில் இறக்கும் .அப்போது தமிழன் நிலைமை பாடு மோசம் ஆகும் அப்போது நீ எங்கே பார்ப்பாய் அயல் நாட்டில் இருந் து கொண்டு கருத்துக்களை அள்ளிவிட்டு தமிழன் வாழ்வில் மண்ணை போடாதீர்கள் அகதிகள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு படிப்பு ,வேலை வாயிப்பு அளிக்கும் இந்தியாவை குறை சொல்பவன் உண்மையான இலங்கை தமிழன் அல்ல .
By தேசநேசன்
7/25/2010 9:21:00 PM
ஒப்சேவர் என்ற பெயரில் எழுதிய நண்பனே நாங்களும் அதைதான் விரும்புகிறோம். இந்தியா தன் பாட்டிலிருந்தால் நாங்கள் எங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்வோம்.ஆனால் இந்தியா சத்தமில்லாது சிங்களவர்களுக்கு உதவி எங்களை அழிக்க முனைகின்றது.....
By Karan
7/25/2010 8:55:00 PM
செங்கம்பள வரவேற்பா? ஓ தமிழ் நாட்டின் தேர்தல் தேதியும் நெருங்குகிறது.. thedipaar.com
By ki
7/25/2010 8:04:00 PM
THIS THIRD RATE PUBLICITY MAN WHOIS ALWAYS AGAINST INDIAS UNITY SSEMAN SHOULD NOT BE RELEASED FORM JAIL. ON BEHALF OF ALL INDIAN PEOPLE WE REQUEST OUR INDIAN GOVT THAT HE SHOULDNOT RELEASE FROM JAIL. HE SHOULD KNOW THE VALUE OF INDIANS UNITY AND IF HE WANTS HE CAN GET OUT OF INDIA. HE IS POISONING YOUNGSTERS IN INDIA WITH EMOTIONAL WAY.NOW BY READING THIS ARTICLE PEOPLE SHPOULD KNOW THE TRUE COLOUR OF THESE THRIRD RATE POLITICIANS WHO ARE BARKING FOR MONEY FROM FOREIGN LIVING REFUGEES NOW FROM CANADA AND OTHER PLACES ALL REFUGEES ARE GOING FOR HOLIDAYS AND BUYING PROPERTIES IN SRILANKA. THEY ENJOY FOREIGN LIFE AND MAKE DRAMAS TO CREAT THE PROBLEMS.OTHERWISE THEY WILL BE SENT BACK BY FOREIGN GOVTS TO SRILANKA.IF THEY CAN GO AND ENJOY FOR A HOLIDAY OF TWO MONTHS IN LANKA WHY CANNOOT THEY LIVE?IF THEY CAN SELL AND IMPORT PRODUCTS FROM SRILANKA WHY CANNOT THEY GO BACK.TO EXTEND THEIR LUXURIOUS LIFE THESE DRAMAS ARE GOING.NOE THEIR ONLY SLOGAM IS ANTI INDIA.
By INDIAN
7/25/2010 7:56:00 PM
India is a country born with peaceful independence.With out any terror only with satyagraha we got our valuable frredom and we love each other and live in unity withour different language and religion and region. INDIAN GOVT IS ALWAYS HELPING SRILANKA ISSUE IN APROPER LEGALWAY.SOME PEOPLE LIKE VAIKO,SEEMAN ETC.,MAKE THEM SELVES AS HERO TO GET CHEAP PUBLICITY USING THE EMOTION OF FOREIGN LIVING REFUGEES AND SOME YOUNGSTERS IN TAMILNADU,tHEY ARE GOOD FOR NOTHING.THEY CAN BARK.IF SSEMAN LOVES REALLY SRILANKAN TAMILS HE SHOULD GOTO THE POOR SRILANKAN PEOPLE WHO CANNOT MOVE FROM SRILANKA AND DO LOT OF SOCIAL SERVICE AS THER LOT OF SOCIAL SERVICE ORGANISATION.INDIAN GOVT WILL DO ITS DUTY WHAT IS POSSIBLE FOR A FOREIGN GOVT.THERE IS NO NEED FOR ADVICE OR AGITATION AND DRAMA FROM SEEMAN ETC., ATLEAST NOW INDIAN AND SRILANKAN PEOPLE SHOULD KNOW THW TRUE COLOURS OF THESE PEOPLE . THE REAL CAUSE IS FOREIGN LLIVING REFUGEEES LOVING FOR THEIR LUXURIOUS LIFE AND THESE THIRDRATE BARKING PEOPLE
By INDIAN
7/25/2010 7:48:00 PM
Persons like Vaiko and others who pose themselves as saviers of Srilanka Tamils should read this and act accordingly.there is no point in fishing in dirty waters.
By K.Thirumalairajan
7/25/2010 6:56:00 PM
நமக்கு இருக்கற ப்ரிச்சனை போறதுன்னு இந்த இலங்கை பிரிச்சனைய வேற சும்மா பேசி பேசி கழுதருகரங்க. தீவரவாதி பிரபாகரன தான் சேது போயிடேனைய சும்மா ஏன்யா ஏங்க உயிரை எடுகிறீங்க. இந்திய வ விட்டு தொலைங்க நிம்மதியா. உங்க ப்ரிச்சனை நீங்க பார்த்துக்கங்க. எங்கள கேட்ட பிரபாகரன் தமிழர்களை கொலை பண்ணினான். பொய் ஒழுங்க வேலைய பாருங்க. ஏங்க கழுத
By Observer
7/25/2010 6:48:00 PM
War crime inquiery is now strated by the UN for what happend in Sri Lanka. This is surely going to implicate India for its role in Sri Lanka during the closing stages of the war. They never got their price - to caputre and bring Parabaharan to justice . Sarath Fonseksa also wanted to do the same but Gotabaya sent Sarath Fonseka to China and cheated the Indians also with Mass Murder India will never ever be able to match the Jakallish diplomacy of the Sri lankan sinhalese the Indian leadership is no match for the Rajapakse brothers who also know how to buy support if needed and I am sure they have already done it several times
By sena
7/25/2010 6:36:00 PM
இந்திய அரசால் 13வது திருத்தச்சட்டத்தை 1987ம் இந்திய இலங்கை அரசுகள் நடைமுறை படுத்தி இருக்க வேண்டும். பிரபாகரன் தான் மறுத்துவிட்டான். இந்தியரசால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வரதராஜபெருமாள் ஆட்சியில் உள்ளபோதும் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை.வரதராஜபெருமாள் இலங்கையில் இருந்து வெளியேறும்(1991) போது என்ன கூறினார் இலங்கையரசு ஏமாற்றிவிட்டது.சட்டத்தை நடைமுறை படுத்தவில்லை. இனி கடவுள் தான் தமிழரை காக்க வேண்டும் என்று கூறினார். தமிழர்கள் சிங்களவரால் ஏமாற்றப்படுவது 1948ல் இருந்து. தமிழருடைய பிரச்சனையை 1955 இருந்து சட்டசபையில் தமிழருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் .என்று முத்தமிழ் வேந்தன் சகலகலாவல்லவன் கருணாநிதி கீறினார்.
By kuru
7/25/2010 6:08:00 PM
அப்படியாயின் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் இன்று இன பிரச்சனை உருவானதுக்குரிய காரணிகள். இந்தியா என்ன அமெரிக்கா வந்தாலும். இலங்கையை எவரும் நிர்ப்பந்திக்க முடியாது.கட்டுப்படுத்தவவும் முடியாது. காரணம் சிங்களவர்கள் பொய்யிலையே வாழ்ந்து பொய்லையே வளர்பவர்கள். மற்றது சிங்களவர்கள் தாங்களை ஒரிசா வங்காளி தான் தன்னுடைய மூதாதையர் இனம் என்று கூறி இன்னும் அவர்களுடம் தெடர்பில் இருப்பவர்கள் பிரனாப் முகர்ச்சி போன்ற அவர்களுடைய இனம் சிங்களவருக்கு உறுதுணையுடன் இருந்து உதவி செய்கிறார்கள். தமிழருக்கு எவர் உதவி செய்கின்றனர்??? தமிழனை அழிக்கும் விரோதிகளுக்கு தமிழன் என்று கூறிக்கொள்ளப்படுவர்களால் தமிழனை அழிக்கும் சிங்களவருக்கு 1955ல் இருந்து பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார்கள்
By kuru
7/25/2010 6:07:00 PM
தமிழர்கள் சிங்களவரால் கொன்றெழிக்கப்படுவது தாக்கப்படுவது தினசரி நிகழ்வாகும் ஒரு மிருகங்களை எப்படி சித்திரவதை செய்து துன்புறுத்தி வாழ்வார்களே. அதை போலவே தமிழரை சித்திரவதை செய்து சிங்களவன் துன்புறுத்தி ஆனந்தப்படுகிறான் புலிகள் இருக்கும் வரை தமிழரை நிமிர்ந்து பார்கக பயந்த சிங்களவன் இன்று இந்திய மத்திய மானில அரசுகளின் அஜாயகங்களேடு கொன்றொழிக்கப்பட்ட இல‌ட்சக்கணக்கான தமிழர்களின் மயான பூமியின் மேல் ஏறி நின்று தெடர்ச்சியாக சிங்களவன் தமிழிச்சிகளை கர்ப்பழித்து ஆறு தலைமுறை தமிழர்களை கொல்(ன்று)லும் அரக்கனுக்கு செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும்
By முத்தமிழ்
7/25/2010 4:54:00 PM
செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும் இந்திய தேசமே கொலைகார தேசம் .கருணாநிதியால் நடத்தப்பட்ட தாமிரபரணி கொலை தாண்டவத்தை போல் இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பான‌ முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வரலாற்றில் ஏந்திநிக்கும் இந்த கயவர்களிடம் மனுகொடுக்கவும் ஆதரவு கோட்கவும் புறப்படும் எருமை மாட்டு கூட்டங்கள் திருந்த போவதுமில்லை இலங்கை தீவின் தமிழின அழிப்பின் முடிவுரை தீரும் வரை இந்த கூட்டங்கள் தமிழீழ தமிழக மக்களை கொலை செய்தே தீருவன் என்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர் தமிழருக்கும் இவர்கட்க்கும் எதுவிதமான. சம்மந்தமிமும் இல்லாத இனமென்பதால் தமிழரை அழித்தே வார் தமிழர்கள் விழித்துக்கொண்டு தங்களை பலப்படுத்தாது விடின் தமிழர் என்ற இனம் வாழ்ததுக்குண்டான அடையாளத்தை இழக்கும்
By முத்தமிழ்
7/25/2010 4:53:00 PM
புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். எம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாது
By naam tamilar
7/25/2010 4:13:00 PM
. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார். அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன். அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
By naam tamilar
7/25/2010 4:12:00 PM
உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமும, தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலும் சரி அனுமதி வழங்கினாலும் மாவீரன் பிரபாகரனே என் தலைவர் என்று பேராசிரியர் கூறினார். நேற்று மரியாதை நிமித்தமாக மலேசியாவிற்க்கான இந்தியர் தூதர் விஜய்கோகுலே பினாங்கு மாநில முதலமைச்சரை சந்திக்க வந்திருந்தார் அந்த சந்திப்பு கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டிர்களா என்று டாக்டர் இராமசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது. என்னை தங்கள் நாட்டிற்குள் (இந்தியா) நுழையக் கூடாதென கூறியவர்கள
By arivu
7/25/2010 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சிறந்த ஆய்வறிஞர் அருளி நல்ல தமிழ்ச் சொற்களையும்  அயற்சொற்களாகக் காட்டியுள்ளார். சீர் என்னும் தமிழ்ச் சொல்லில்  இருந்தே சிரீ பிறந்தது. சீர் என்பது கடைக்குறையாகச் சீ என்றானது. சீர் (மிகு) தேவி சீ தேவி. சீமையைச் சேர்ந்தவன் சீமான்; சீமையைச் சேர்ந்தவள் சீமாட்டி. இவை யாவும் தமிழ்ச்  சொற்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழுக்கு செளராஷ்டிரர்களின் பங்களிப்பு


ஸ்ரீமந் நட​ன​கோ​பால நாயகி சுவா​மி​கள்
இலக்கியப் படைப்பாளர்கள் தங்கள் தாய்மொழியில் இலக்கியம் படைப்பது ஒரு சாதாரண விஷயமாகக் கருதப்படும். தங்கள் தாய்மொழியல்லாத வேற்றுமொழியில் இலக்கியம் படைத்திருப்பது சிறப்பானதாகப் போற்றப்படும். மேலும், இவ்வாறு செய்வது அந்த மொழிகளுக்கிடையே இலக்கிய பரிமாற்றம் ஏற்படவும் அந்த இருமொழி பேசுவோரிடையே நல்லுறவு ஏற்படவும் வழிவகுக்கும்.தங்கள் தாய்மொழியல்லாத ஒரு மொழியில் இலக்கியத்தைச் சுவைத்து மகிழும் இலக்கியவாதிகள் அம்மொழியில் இலக்கியம் படைக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகின்றனர்.தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினர், வெளிநாட்டினர் என்று பற்பலர் தமிழில் இலக்கியப் படைப்பை நல்கியுள்ளனர். அந்த வகையில், மொழி சிறுபான்மையினரான செüராஷ்டிர மொழியினரும் தமிழ் இலக்கியத்துக்கு சிறிய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆம்! அவர்களின் பங்களிப்பு மிகச் சிறியதுதான், ஆனால் பெரிதும் போற்றத்தக்கது.சில நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைத் தங்கள் தாயகமாகக்கொண்டு வாழ்ந்துவரும் செüராஷ்டிரர்கள், தமிழ் இலக்கியத்துக்குத் தங்களது பங்களிப்பைத் தொடங்கி ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. செüராஷ்டிரர் வரலாற்றை எழுதிய பெரும் எழுத்தாளர் கே.ஆர்.சேதுராமன் தமது "நமனை வென்ற நாயகி' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்."தமிழுக்கு அந்தஸ்து இல்லாத அடிமைத்தனமாக வாழ்க்கையை மக்கள் நடத்திய காலத்தில் 1887-இல் சென்னையில், மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843-1914) தமது தமிழ்ப் பாடல்களை தமிழுணர்வுடன் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பரிசீலித்து அச்சிட்டாரென்றால், அவருடைய தமிழ்ப் பற்றை எப்படிப் புகழ்வது'. ஆதலால் தமிழ் இலக்கியத்தில் செüராஷ்டிரர்களின் பங்கு துவங்கி நூற்றாண்டுகாலம் ஆகிவிட்டது. நாயகி சுவாமிகள் செüராஷ்டிர மகாகவி. இவர் தமிழில் நாமாவளிகள், கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரைத் தொடர்ந்து கோவிந்ததாசர், விட்டலதாசர், தொ.ரா.பத்மநாபய்யர், கொண்டிய பாகவதர் உள்ளிட்ட பலர் தமிழ் பக்தி இலக்கியத்துக்கு தங்களது பங்களிப்பை நல்கியுள்ளனர்."இனிமை, பழமை, எழில் யாவும் கொண்ட தனிமொழி தண்டமிழே' என, தமிழ் ஆண்டுகள் அறுபதை தமது சிந்தனையில் கண்டு தமிழை அறுபது அடிகளில் 15 வெண்பாக்கள் கொண்டு போற்றிப்பாடிய "கீதா அஷ்டாவதானி' தொ.ரா.பத்மநாபய்யர் (1899-1963) தமிழ்த் தொண்டு விரிவானது. கீதையின் 700 வடமொழி சுலோகங்களை தமிழில் 700 வெண்பாக்களாகப் பாடியுள்ளார். இது தவிர திருவள்ளுவர் நாடகம், வேந்தன் துறவு, தேசிய கீதங்கள் முதலான இவரது இலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது தமிழ்ப்பணி குறித்து பெருமிதம் அடைந்த குன்றக்குடி பெரிய பெருமாள் இவரைப் பற்றிய கட்டுரை ஒன்றில் இவரை வித்தகப் பெரும்புலவர் என்றே குறிப்பிடுகிறார்.கீர்த்தனைகள் படைத்ததன் மூலம் ஸ்ரீநாயகி சுவாமிகள் தமிழ் இசைக்கு தன் பங்களிப்பைப் பெரிதும் நல்கியுள்ளார். இன்று ஏழிசை வேந்தர் என்று புகழப்படும் டாக்டர் டி.எம்.செüந்தரராஜன் என்றும் நிலைத்திருக்கும் முருகன் பாடல்களை தமிழில் பாடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தமிழ்த் திரை இசையில் இவர் ஒரு சகாப்தம். இவர் பாடிய திரைஇசைப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதன் முதலில் பாடியது இவரே. தமிழ்த் திரை இசையில் ஏ.எல்.ராகவன் பங்கும் பாராட்டத்தக்கது.மதுரையில் 1901-இல் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன்  பங்கு கொண்டு தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டவர், மதுரை நகராட்சித் தலைவராக விளங்கிய "ராஷ்டிர பந்து' எல்.கே.துளசிராம். 1928-இல் சட்டசபையில் தீரர் சத்தியமூர்த்தியுடன் பிரிட்டிஷ் அரசால் தடைவிதிக்கப்பட்ட பாரதியார் பாடல்களைத் தமிழ்ப்பற்றுடன் உரத்த குரலில்  பாடினார். தமிழ்ச் சான்றோர்கள் மறைமலையடிகள், திரு.வி.க., சுத்தானந்த பாரதி, பி.ஸ்ரீ.ஆசார்யா இவரது நண்பர்கள். தமது 90 வயதில் அருளிச் செயல் மாலை (திவ்யப் பிரபந்தம்) நூலைப் பதிப்பித்தார். இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி சேதுபதி தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமின் தமிழ் இலக்கியப்பணி மகத்தானது. ஆக, 1887-இல் நாயகி சுவாமிகள் தொடங்கிய செüராஷ்டிரர்களின் தமிழ் இலக்கியப் பணி பரிணாம வளர்ச்சியில் வெங்கட்ராம் மூலம் சாகித்ய அகாதெமி விருது பெறும் வரை வளர்ந்திருக்கிறது.இன்று தமிழ்த் தொண்டு புரிந்துவருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் இரா.மோகன். தமிழில் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.நாயகி சுவாமிகளின் புகழைப் பரப்பும் பணியில் கட்டுரைகள், நூல்கள் எழுதிவரும் இக்கட்டுரை ஆசிரியர் கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி. "சொல்லின் செல்வர்  தா.கு.சுப்பிரமணியன், செüராஷ்டிர சாகித்ய உரையாசிரியர்களான வித்வான் கே.ராமநாதன், நாயகி சுவாமிகள் பாடல்களைத் தமிழில் பெயர்த்த அமரர் ஆர்.வி.சுந்தர்ராவ் கவிஞர் தாடா. சுப்பிரமணியன், தமிழ்க் கவிதை பயிற்சி வகுப்பு நடத்தும் கவிஞர் சுப்பு விசுவநாதன் முதலிய இன்னும் பலரின் பங்கு உள்ளது.தமிழிலிருந்து திருக்குறளையும் பாரதியார் பாடல்களையும் மொழிபெயர்த்த வகையில் முறையே கவிஞர் சங்கு ராம், சுந்தர பாரதி இவர்களது பணி பாராட்டுக்குரியது. செüராஷ்டிர திருக்குறளை உலகளாவிய அளவில் பதிப்பித்த மதுரை சித்தாச்ரம ஆசார்யர் பூஜ்ய ஸ்ரீசித்தநரஹரி குருஜி போற்றுதலுக்குரியவர்.நூற்றாண்டு காலமாக செüராஷ்டிரர்கள் தமிழ்த் தொண்டு புரிந்துவரினும் வெளியுலகம் அறியவில்லை. இத்தனைக்கும் மேலாக தங்கள் குருகுலமாக விளங்கும் "செüராஷ்டிர ஆழ்வார்' ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் வடமொழி அஷ்டோத்திரத்திற்கு இணையாக தமிழில் 108 போற்றிகளை உருவாக்கி அவற்றைச் சொல்லி வழிபடுகிறார்கள் என்றால் இம்மக்களின் தமிழ்ப் பற்றிறைப் பார்த்துக்கொள்ளுங்கள்!
கருத்துக்கள்

சௌராட்டிரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பொழுது தங்கள் தாய்மொழியிலேயே பேசிக் கொள்ளும் தாய்மொழிப் பற்றும் பாராட்டிற்குரியது. தங்கள் தமிழ்த் தொண்டினால் தமிழர்களாகவே மதிக்கும வகையில் செயல்படுவதும் போற்றற்குரியது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *