சனி, 12 செப்டம்பர், 2009

புலித் தலைவர்களின் பெயர்கள் உள்ள பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்

11 September, 2009 by admin

கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளுக்கு புலித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை தாம் அவதானித்துள்ளதாகவும் அந்தப் பெயர்களை மாற்றி முன்னர் இருந்த பெயர்களையே அவற்றுக்குச் சூட்டும்படி கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள செயலாளர் உபுல் வீரவர்த்தன அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்த சமயத்தில் அவர்களின் தலைவர்களின் பெயர்கள் இப்பாடசாலைக்குச் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவ்வேளையில் கல்வித் திணைக்கள அதிகாரிகள் புலிகளுக்கு எதிராகச் செயற்பட சக்தியற்றவர்களாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் சில பகுதிகளில், குறிப்பாக சம்பூர் பகுதியில் புலி உறுப்பினர்களின் சிலைகள், நினைவுத் தூபிகள் கட்டப்பட்டுள்ளதை அவதானித்த அவர் அவற்றையும் பாடசாலைகளில் இருந்து அகற்றுமாறு கூறியுள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3520




Posted By : sostamils on 12 September, 2009
Comments : jayasankar சாமிகளா


வீரமாய் பேசி வம்பில் தானும் மாட்டி மற்றவனையும் மாட்டிவிடாமல்,

காரியத்தை பாருங்களேன் சாமிகளா


அதிகம் பேசி எதுவும் செய்யாமல் விடுவதைப் போல் ஆபத்தான கரியமும் இல்லை,

அதிகம் பேசி எதுவும் செயாமல் விடுபவர் போல் மிக ஆபத்தானவர் உலகில் யாரும் இல்லை.

சிறுகப் பேசி அதிகம் செய்

போதிய போர் தயாரிப்பு இன்றி ( உளவாளிகளைக் கூட நாம் சரியாக அடையாளம் காணத்தவறிய�­�ளோம்)


பட்ட­ துன்பமும், இழந்தவைகளும் பாடமாக அமையட்டு�­�்
சிறுகப�­�­ பேசி அதிகம் செய்வோம் சாமிகளா

Posted By : visu on 12 September, 2009
Comments : HI this is the time for all our tamil community are opened your eye because you have to go back before ***3 that was nobody asking for sinkales government anything because we don,t have power but last 3* years we had big power so this ferrite sinkales are very silence,so you can see now our community life,??????????? so this the ltte leader said don,t believe any ather dogs,so pls is not too late, all our tamil people staying a head, thanks

Posted By : psk on 12 September, 2009
Comments : hi srilankan sinkales gvt,a bad goverment and all sinkales party are act of racicist

Posted By : p.tharan on 12 September, 2009
Comments : hi, don't worry we will back before election

Posted By : jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
�­�ுடிந்தால்,­ தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 104: அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்!



இலங்கையில் இந்திய அமைதிப்படை
அமைதிப்படை வான் வழியாகவும், கடல் வழியாகவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் முகாம்கள் யாழ்குடாவில் பலாலி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளில் நிலைகொண்டன. மட்டக்களப்பில் அதிக அளவு ராணுவப்படை தேவையில்லை என்ற உத்தரவே முதலில் இடப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கும் முழு அளவில் அமைதிப்படை ஈடுபடுத்தப்பட்டது. அம்பாறை பட்டியலில் இல்லை; பின்னர் அதுவும் சேர்க்கப்பட்டது.ஐ.பி.கே.எஃப் - என்று அழைக்கப்பட்ட அமைதிப்படையின் பிரிவுகளுக்கு "ஆபரேஷன் பவான்' என்று பெயரிடப்பட்டிருந்தது. "பவான்' என்றால் "சுத்தமான காற்று' என்று அர்த்தப்படுத்தலாம். அனுமனையும் சம்பந்தப்படுத்தலாம். அனுமனுக்கு "பவன்புத்ரா' என்றுதான் பெயர். அதாவது வாயுபுத்ரா-காற்றின் மைந்தன் எனப் பொருளாகும்.அமைதிப்படைக்கு இடப்பட்ட பணிகளை லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் கூற்றுப்படி இவ்வாறு பிரிக்கலாம்: 1. இலங்கை - விடுதலைப்புலிகளிடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் ஏற்படுத்துவது-கண்காணிப்பது. 2. விடுதலைப்புலிகள் மற்றும் இதரப் போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது. 3. இலங்கை அரசப்படைகள் 1987 மே மாதத்தில் இருந்த நிலைகளுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவது-வற்புறுத்துவது-கண்காணிப்பது. 4. போரினால் வெளியேறிய மக்களை அவர்களின் வாழ்விடங்களில், திரும்ப வந்து வசிக்கச் செய்வது.இதுதவிர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் காவல் நிலையங்கள் செயல்படாத நிலை. எனவே, சட்டம்-ஒழுங்குப் பணிகளையும் மேற்கொள்ள நேர்ந்தது.லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங், பலாலி விமானதளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவரை இந்திய அமைதிப்படையின் (பொறுப்பு) மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (54-வது பிரிவு தரைப்படை), இலங்கை அரசுப்படையின் கமாண்டர், பிரிகேடியர் ஜெர்ரி.டி. சில்வா சந்தித்தனர்.தீபிந்தர்சிங், யாழ் பகுதிகளைத் தரைவழியாகச் சென்று பார்க்க விரும்பினார். அதற்கு ஹர்கிரத்சிங், சாலை முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக, சாலைக்காவலில் ஈடுபட்ட அமைதிப்படை சிப்பாயிடம், விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பாய் நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும்படி கேட்டதும், பிரபாகரன்தான் தங்களுக்கு இதுகுறித்து உத்தரவிடவேண்டும் என்றும், அவர் தில்லி ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் வந்தால்தான் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்.இதுகேட்டு தீபிந்தர்சிங், இது உண்மையா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பவேண்டிய அவசியத்தைத் தலைமைக்கு வலியுறுத்தினார்.பிரபாகரன் யாழ் திரும்புவதற்கு பல்வேறு வகையான நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தக் காரணமும் அதில் ஒன்றாகச் சேரக்கூடும் என்பதும் உண்மையே.தீபிந்தர்சிங்கும், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சிரில் ரணதுங்கேயும் பலாலி விமானதளத்தில் உள்ள பார்வைக்கோபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, உலக அளவிலான பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர், இலங்கையில் இந்திய அமைதிப்படை எத்தனை காலம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள்.தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு தீபிந்தர்சிங் "இந்தப் பணி முடியும் வரை' என்று பதிலளித்தார்.பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியதை அடுத்து, ஆயுதம் கையளிப்பது தொடர்பான ஆலோசனையை அவரிடம் செய்யவேண்டிய அவசியம் தீபிந்தர்சிங்குக்கு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடு அவர் தங்கியிருந்த இடத்தினருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது. பிரபாகரன், யோகரத்தினம் யோகியுடன் வந்தார். இது தவிர, மேலும் இரு விடுதலைப் புலிகளும் உடன் வந்தனர்.இதுகுறித்து தீபிந்தர்சிங் தனது நூலில், ""அறைக்குள் நுழைவதற்கு முன்பாக பிரபாகரன் தனது காலணிகளை வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே வந்தார். அவர் "புஷ்' சர்ட் அணிந்திருந்தார். உயரம் அதிகமில்லை. நல்ல கட்டுமஸ்தான உடம்பு. பார்க்க அழகானவராக இருந்தார். முகம் இறுகினது போல இருந்தது. அவரைப்பற்றிய வீரப்பிரதாபங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்த நிலையில், அதில் சில உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு-என்பது எனது கணிப்பாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் நூலில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "டீ சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க போர்நிறுத்தம் மற்றும் ஆயுதம் கையளிப்புக்கு இணங்கியதாகத் தெரிவித்தபோது, இச்சூழ்நிலை இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது ஏற்படுத்திய பொருளாதாரத்தடை மற்றும் ராணுவம் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் காரணமாகவும், மக்கள் பட்ட துன்பம் காரணமாகவும் எழுந்தது என்று விளக்கினேன். தில்லியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த பேச்சு எழவில்லை. ஆனால் அவரது பேச்சுகளில் இருந்து இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் "ரா' அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், இனி அவர்களது பேச்சை எந்தக் காலத்திலும் நம்பமாட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்தும் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. ஆயுதம் கையளிப்பது தொடர்பாகத் தனது தளபதிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறியது தொடர்பாக, ஞாபகப்படுத்திக் கேட்டபோது அடுத்தடுத்த நாளில் நடைபெறும் என்றார். இலங்கை அரசு ஆயுதம் கையளிப்பதை விரிவான அளவில் விளம்பரம் செய்வதாக இருந்ததை அவர் விரும்பவில்லை. மேலும் எந்த ஓர் ஆயுதத்தையும் இலங்கை அரசிடம் நேரடியாகக் கையளிப்பதையும் அவர் விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது' என்கிறார் தீபிந்தர்சிங்.அடுத்தநாள் தீபிந்தர்சிங் யாழ்ப்பாணப் பல்கலைத் திடலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும், அவரை மாத்தையா வரவேற்று, பிரபாகரன் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆயுதம் கையளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் ஆயுதம் கையளிப்பது நடக்காது என்றே பிரபாகரன் தெரிவித்தார். ஆயுதம் கையளிப்பது இல்லை என்றால், போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்பது தடைபடும். எனவே, ஆயுதம் கையளிப்பது என்பதை அவரின் பிரதிநிதியாக ஒருவர் ஆயுதம் வழங்க, இந்தியப் பிரதிநிதி முன்னிலையில் ஆயுதத்தை அளித்தால் போதும் என்று தீபிந்தர்சிங் யோசனை கூறினார்.அதன்படி, பலாலி ராணுவ முகாமில் ஆயுதக் கையளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு மேசை போடப்பட்டு, அதன் எதிர்ப்புறத்தில் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் சேபால அட்டியகாலேவும் நிற்க, இந்தப் பக்கத்தில் நின்ற யோகரத்தினம் யோகி, ஒரு துப்பாக்கியைக் கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்தார்.இந்தக் காட்சியை இலங்கை, இந்தியப் பத்திரிகையாளர்கள் தவிர, உலகநாடுகளின் பத்திரிகையாளர்களுமாக 200 பேர் பதிவு செய்தனர். இதே நேரத்தில், ஜெயவர்த்தனா போராளிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்பை அட்டியகாலே வாசித்தபின், அக்கடிதத்தை யோகியிடம் வழங்கினார். ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சி முடிவுற்றது.
மறைந்தும் மறையாத கேள்வி



ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைந்து பத்து நாள்கள் ஆன பிறகும் மனதில் மறையாமல் நிற்கும் ஒரு கேள்வி: "இவர் மறைவுக்காக தமிழகத்தில் ஏன் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது?'மாநில முதல்வரின் மரணம் என்பதால் ஆந்திர மாநிலத்தில் அரசு விடுமுறை என்பது ஏற்கக்கூடிய ஒன்று. அண்டை மாநில முதல்வர் ஒருவரின் அகால மரணத்துக்காக இரங்கல் தெரிவிப்பது இயல்பான ஒன்று. மற்ற மாநிலங்களும்கூட இதைத்தான் செய்துள்ளன. ஆனால் தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக, இப்படியான அரசு விடுமுறை என்பது புரியாத புதிராக இருக்கிறது.தமிழக முதல்வர் அரசு விடுமுறையாக அறிவித்ததையும், திமுக மூன்றுநாள் துக்கம் அனுஷ்டிக்கும் என்று சொன்னதையும் கேட்டவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கே வெட்கமாய்ப் போய்விட்டது. உடனே எல்லா மாவட்டத் தலைவர்களுக்கும் தொலைபேசியில், எல்லா ஊர்களிலும் ரெட்டியின் படத்துக்கு மாலை போட்டு பத்திரிகையாளர்களை அழைத்து படம் பிடிக்கச் செய்தார்கள். காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் எதிலும் ரெட்டியின் படம் இல்லை. ரெட்டியின் படத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அட்டைகளில் ஒட்டி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் அன்பர்களுக்கு ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதே தெரிந்திருக்கவில்லை.முதல்வர் கருணாநிதி இந்த அறிவிப்பைச் செய்திருக்காவிட்டால், சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே வெறும் சடங்காக ஒரு இரங்கல் கூட்டம் நடந்திருக்கும். மாநிலத் தலைவரின் இரங்கல் செய்தியோடு முடிந்துபோயிருக்கும்.அதனால்தான் இந்தக் கேள்வி மறையாமல் எழுகிறது.தமிழகத்தில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதைப் போலவே என்.டி. ராமாராவ் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தொடங்கியதிலிருந்து, காங்கிரஸ் கட்சி வலுவிழந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் உள்கட்சிப் பூசலால் வீழ்ச்சி அடைந்தது.2004-ல் ராஜசேகர ரெட்டி நடத்திய நடைப்பயணத்தால் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன்பிறகு ஆட்சி பீடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. ரெட்டி முதல்வரானார்.முதல்வரானவுடன் ராஜசேகர ரெட்டி மீது நிறைய ஊழல் புகார்கள். அனைத்தையும் ஈநாடு நாளிதழ் முதல்பக்கச் செய்தியாக வெளியிட்டு வந்தது.அதன்காரணமாகவே, அந்த நிறுவன உரிமையாளர் நடத்தி வந்த மற்றொரு நிறுவனமான மார்க்கதரிசி நிதிநிறுவனத்தின் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த நிறுவனத்தின் பெயரைக் களங்கப்படுத்தி, ஈநாடு பத்திரிகைக்கும் அதன் சுழல்நிதிக்கும் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, "ஈநாடு'க்குப் போட்டியாக "சாட்சி' என்ற பத்திரிகையை ஒரு நாளில் ஆந்திரத்தின் அனைத்து மூலை முடுக்கிலும் கிடைக்கும்படியாக பத்து லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளை அச்சிட்டு வெளியிடச் செய்தார். விலை ரூ. 2 தான்.அத்தோடு, சாட்சி என்ற பெயரில் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பையும் தொடங்கினார்.சத்யம் கணினி நிறுவனத்தின் கற்பனை லாபக் கணக்குகளின் பின்னணியில் ஆந்திர முதல்வர் ரெட்டி இருக்கிறார் என்ற புகார்களும் எழுந்தன.எம்ஜிஆரின் வழியொற்றி என்டிஆர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்ததால், ரெட்டி எப்போதும் தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வந்தார். நடந்துமுடிந்த தேர்தலில், ராஜசேகர ரெட்டி தமிழக அரசியல் உத்தியைக் கையாண்டார். தமிழகத்தில் அதிமுகவுக்கு கிராமங்களில் உள்ள எம்ஜிஆர் வாக்குகள் சிதறும்படியாக, எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி நடிகர் விஜயகாந்தின் தேமுதிக உருவாகியதைக் கண்டார். ஆந்திரத்திலும் அதற்கான வேலைகளைப் பின்னணியில் செய்தார். ஆந்திர கிராமங்களில் இன்னமும் கட்டுக்கோப்போடு இருக்கும் என்.டி.ஆர். மீதான அபிமான வாக்குகள் அனைத்தும் தெலுங்கு தேசத்துக்குக் கிடைக்காமல் இருக்க, என்டிஆருக்கு இணையான இன்னொரு நடிகர் யாராவது கட்சியைத் தொடங்கினால்தான் முடியும் என்பதால் அதற்கான தூண்டுதல்களை உருவாக்கினார். விளைவு? நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம்.ராஜசேகர ரெட்டிக்கு எதையும் பொடிவைத்துப் பேசத் தெரியாது. "சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடிக்க, பிரஜா ராஜ்யத்துடன் கூட்டணி வைப்பீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் வெளிப்படையாகவே சொன்னார்: ""பிரஜா ராஜ்யம் கட்சி களத்தில் இறங்கிவிட்டதால் காங்கிரஸ் வெற்றி நிச்சயம். ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் 40 சதவீத வாக்குகள் நிரந்தரமாக உண்டு. தெலுங்கு தேசத்துக்கு கிடைக்கக் கூடிய என்டிஆர் வாக்குகள் பிரஜா ராஜ்யத்துக்குப் போய்விடும். ஆகவே வெற்றி காங்கிரஸýக்குத்தான். அப்படியிருக்க ஏன் பிரஜா ராஜ்யத்துடன் கூட்டணி வைக்க வேண்டும்?''அடடா, என்ன அரசியல் தந்திரம்! கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வந்தது.வாரிசு அரசியலிலும் அவர் பின்தங்கியவர் அல்ல. தன் மகனை கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைத்தார். மகனை மற்ற தலைவர்களும் ஏற்றுக்கொள்ளுபடியான நெருக்கடியையும் தந்தார். "ஜகன் அரசியல் பேசட்டும். ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கை ஒழுங்காகப் பேசட்டும்' என்று கேலி பேசுகிற நிலையும் கட்சியில் ஏற்பட்டது.ஜகன் பேச்சில் தெலுங்கு வார்த்தைகளைவிட ஆங்கில வார்த்தைகளே அதிகமாக இருக்கும். ஆனாலும் தனது மகனை முன்னிலைப்படுத்துவதை அவர் நிறுத்தவில்லை.கடப்பாவை அடுத்துள்ள அவரது சொந்த கிராமம் புலிவேந்தலாவில் 20 கி.மீ. சுற்றளவுக்கு சொத்துகளை விரிவுபடுத்தியுள்ளதாக கடப்பா வாழ் தமிழர்களே சொல்கிறார்கள்.இப்படியொரு அண்டை மாநில முதல்வரின் அகால மரணத்துக்குத் தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவித்ததால் யாருக்குப் பயன்? அரசு ஊழியர்களும் ஆசிரியப் பெருமக்களும் நன்றிப் பெருக்கோடு வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் விடுமுறையைக் கொண்டாடினர்.
-------------------------------------------

1/2 ) ஆந்திர முதல்வரும் அவர் குழுவினரும் மோதல் நேர்ச்சியால்- விபத்தால்- அகால மரணம் உற்றது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்காகத் தமிழ் நாட்டில் விடுமுறை அளிப்பதும் தனியார் நிறுவனங்களையும் விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்துவதும் முறையன்று. தமிழ் நாட்டு நலனுக்காகவோ தமிழ் மக்களுக்காகவோ ஆந்திராவில் வசிக்கும் தமிழர் நலனுக்காகவோ குறிப்பிடும்படியான உருப்படியான செயல் செய்தவரன்று. அணுவியல் அறிஞர் பாபா தான் மறைந்தாலும் பாபாஅணுமின் நிலையம் இயங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் வானூர்தி மோதலால் அகால மரணமுற்றபோது அணுவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் தலைவர்களின் மறைவிற்கு விடுமுறைகள் விடப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டில் பிற மாநிலம் தொடர்பான விடுமுறைகள் இருக்க, பிற மாநிலங்களில் பூர்வீகக் குடயினராகத் தமிழர்கள் இருப்பினும் தமிழ் மக்கள் தொடர்பான விடுமுறைகள் விடப்படுவதில்லை. தொடர்ச்சி காண்க. -- இலக்குவனார் திருவள்ளுவன்

2/2 (1/2 இன் தொடர்ச்சி) அரசு 1 வாரத் துக்கம் கடைப்பிடிக்கலாம். அரசு அலுவலகங்கள் காலையில் அமைதி கடைப்பிடித்துத் தம் பணியைத் தொடங்க அல்லது மாலை அமைதியைக் கடைப்பிடித்துக் கலைந்து போக வழி வகுத்திருக்கலாம். காங்.கின் கால்களைக் கழுவக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என விடுமுறை விடுவது மிகவும் தவறு.

. எனவே விடுமுறை விடும் முறையற்ற போக்கைக் கண்டிக்குமாறு அனவைரையும் வேண்டுகிறேன். (உடன் மறைந்த திரு சுப்பிரமணியம் தமிழரோ?) எதிர்பாராமல் இறப்பைத் தழுவியவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்நத இரங்கல்கள். விடுமுறை விடும் தமிழக அரசின் போக்கிற்குக் கண்டனங்கள். -- இலக்குவனார் திருவள்ளுவன்



கிளிநொச்சியில் வீடுகளை இடித்து
இராணுவத்தினருக்கு நினைவிடங்கள்?


கொழும்பு, செப்.11- கிளிநொச்சியில் வீடுகள் மற்றும் கட்டடங்களை இடித்து போரில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு நினைவிடங்கள் கட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.,யும், அதன் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான சம்பந்தன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.''தமிழர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். ராணுவத்தின் இருப்பு அவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இதனôல், அவர்கள் அடிமைகளை போல வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும். அப்போது தான் தமிழர்களால் அங்கு சுதந்திரமாக வாழ முடியும். வவுனியா முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்த வேண்டும. ஆனையிறவு எல்லையில் புத்த மடாலயம் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. கிளிநொச்சியில் வீடுகள், கட்டடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ராணுவத்தினருக்கான நினைவிடங்கள் கட்டப்படுகின்றன'' என்று அவர் பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.


எரிகுண்டுகள், கொத்துக் குண்டுகள், உயிரோடு கூட்டம் கூட்டமாகப் புதைத்தல் முதலான கொடுமைகளில் இருந்தும் தப்பிய ஈழத் தமிழர்கள் வதை முகாம்களில்தான் உள்ளனர். உணவு, குடிநீர், மருத்துவம், வதைகள் ஆகியவற்றில் இருந்து தப்பிப்போர் சிலராகத்தான் இருப்பர். அவர்களுக்கு எதற்கு வீடுகள்? மேலும் வீடுகள் கட்டினால்தானே தமிழர்களைக் குடியேற்ற வேண்டும் என்று கூக்கூரல் இடுவீர்கள்? இப்பொழுது என்ன செய்வீர்கள்? - என்னும் எண்ணத்தில் அடுக்கடுக்காகத் துன்பங்களைச் சிங்கள அரசு செய்து வருகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூட ஆளுங்கட்சிக்கும் முதன்மை எதிர்க் கட்சிக்கும் நேரமில்லை. மத்திய மாநில ஆட்சியாளர்களோ மகிழ்ச்சிக் களியாட்டத்தில் உள்ளனர். உலகமோ உறங்குவதுபோல் நடித்துக் கொண்டு பாராமுகமாக உள்ளது. நமது குரல்களாவது அவர்களுக்காக ஒலிக்க வேண்டாவா? -- இலக்குவனார் திருவள்ளுவன்


விடுதலைப் புலிகளின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்
தயா மாஸ்டர் பிணையில் விடுதலை



கொழும்பு, செப்.11- விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் மற்றும் அந்த அமைப்பின் மற்றொரு முக்கிய நபரான ஜார்ஜ் ஆகியோர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த எஸ்.பி. தமிழ்செல்வனிடம் தகவல் தொடர்பு உதவியாளராக ஜார்ஜ் பணியாற்றி வந்தார்.ஏப்ரல் 22ம் தேதி இவர்கள் இருவரும் புதுமாத்தளன் அருகே ராணுவதத்திடம் சரணடைந்தனர். கொழும்பு முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நிஷாந்தா ஹபாராச்சி இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.

கருத்துக்கள்

உலகம் வேடிக்கை பார்துகொண்டிருப்பது மனிதாபிமானம் இல்லாத ஒரு சுயநலம் பட்டைத்த நிலையை உறுதிப்படுத்துகின்றது. கலிகாலத்தின் உட்ட்ச வரம்பு இது. ஒரு நாடு அதன் கட்டுபாடுகள் அந்த மனிதாபிமானத்தை காப்பாற்ற தானே அன்று, மனிதாபிமானத்தை கொன்று குவிக்க அல்ல. இதில்வேடிக்கை என்னவென்றால் நம் தாயினம் நாம்மை காப்பற்றும் என்று ஏங்கி இறப்பாறிய இலங்கை தமிழ், இதை இந்தியாவை கொண்டே சாதித்துக்கொண்ட இலங்கைஅரசு, எக்கடுகேட்டல் நம்மகென என்ற இந்தியா, எவைஎலாத்தையும் வேடிக்கை பார்த்த உலகம். நாம் மனிதர் என்று சொல்ல வேட்கிகின்றோம். நமக்கு இந்தயம் ஒன்று என்று உண்டா. உலகம என் இந்த சுயநல வாழ்க்கை. எத்தனை நாட்கள் வாழ்ந்து போவிரே நீர். கொடும்செயல் இன்றி மாற்று ஒரு வழி இல்லையா. எல்லாரும் இதயமாற்று போய்விட்டோமா. இருளுக்கு ஒரு விடிவுண்டு. ஒளி வென்னும் உதய சூரியன் கிழக்கே தெரியும் நாள் வெகு காலம் இல்லை. சரித்திரம் திரும்பும். சனி மகத்தை விட்டார் நாளை இன்னமும் அடுத்த நாளை நாம் நம் கனவுகள் நினைவாக ஆகும் நாளை பார்த்து காத்துஇருப்போமே. சனி கன்னி ராசி செல்லட்டும் அந்த காம கலி ஆட்டங்கள் அடங்கட்டும் சனி துல ராசி செல்லட்டும் அங்கே நீதி

By meenausa
9/12/2009 2:13:00 AM

The effect of Sani Peyarchi has started... More to see within 4 years from now.

By meenausa
9/12/2009 1:02:00 AM

இராவணன் தமிழன் இல்லை! கமல் உண்மையில் யார்? குபேரனை அறியாத தமிழர்கள்! சிநேகா ஏன் செருப்புப் போட்டார்? unarvukal.com/index.php?showforum=183 நடிகை, நடிகர்களின் நிஜ முகங்கள்! unarvukal.com/index.php?showforum=185

By Pillaiyar
9/11/2009 8:02:00 PM

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல தரப்பினர் கோரி வருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் லுயிஸ் மெர்னொ குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன ஒடுக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென குறித்த நாடுகள் தெரிவிக்கும் பட்சத்திலேயே சர்வதேச நீதிமன்றம் இதில் தலையீட முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கல் தெரிவிக்கின்றன

By RANI
9/11/2009 7:08:00 PM

Rajapaksa’s government is facing increasing international calls to allow more then 280,000 mainly Tamil displaced people to leave camps where they have been held since the civil war ended in May. A special United Nations envoy earlier this week called for an independent investigation into whether a video appearing to show the army executing nine people is authentic. Sri Lanka’s army defeated the last LTTE forces in a battle on the northeastern coast, ending the group’s 26-year fight for a separate Tamil homeland in the north and east. The government wants to avoid any discrimination between Tamils, Sinhalese and Muslims, Rajapaksa said in the interview. The army has to complete the clearance of mines in former conflict zones before people are allowed to return to their towns and villages, Rajapaksa said. The interview was the president’s first with a leading European journal since the war ended, the government said.

By Rupasinghe
9/11/2009 6:45:00 PM

“We can’t leave them outside and let them step on a mine,” he said. “We have also got to sort out the ones who are linked with terrorists.” People aren’t in the transit camps “by our own doing, but because the LTTE took them hostage,” he said. Resettlement Plan Rajapaksa said there are about 220,000 refugees and the government intends to resettle about 50,000 by the middle of this month. His government says its plan to return all refugees to their homes by December depends on mine clearance and security being established in the north.

By Rupasinghe
9/11/2009 6:44:00 PM

Once the displaced people return and start cultivating their land, Sri Lanka will need to develop and “we are calling upon foreign investors” to help, the president said. Rains last month flooded tents and caused temporary sewage systems to overflow in the camps, prompting calls from the U.S. and the UN for the swift release of the displaced people. “Nothing has changed over the past three months for the people living in the camps,” the U.K.-based Catholic Fund for Overseas Development said yesterday. “They are overcrowded with poor sanitary conditions and inadequate health care. There are concerns about what may happen when the monsoon rains arrive in the next couple of months.”

By Rupasinghe
9/11/2009 6:42:00 PM

Congratulation தினமணி' for your பவழ விழா ! Also, I wish "தினமணி" should be "தமிழ்மணி" because you care Tamil langauge and Tamils than any other TN media. Thank you for editors and other all supportive staffs. Good luck! Please follow Anna and periyar. They too bless you "தினமணி" . By RANI

By RANI
9/11/2009 6:35:00 PM

Minister Krishan has to to do lot of work in India, not in Srilanka. Why he is interesting in Srilanka than India. He has already spent 90,000.000 Indian rupees to stay in 5 star hotel and now he is going to stay in Srilanka 5 star hotel and he wants to spend another 50,000,000 Indian rupeas in Colombo, Krishna is not qualified for the minister and people shoud file a case agaist Krishna for spending people money for his comfy. Also, Pranab mugargee has approved for the 90,000,000 ruppess for the hotel fees. People and media why all keep silence . it is our Indians money not Pranab's or Krishna's money. Their money is in swiss secret banks.

By Rajani- Chennai
9/11/2009 5:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியின் இறுதிப் பேருரை



தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார். 1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது. குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கபெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி. சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி. ""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி. தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி. ""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி. ""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை. சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி. "நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி. ""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி. ""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர். ""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி. ""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி. ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர். தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர். பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார். பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார். ""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார். 1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது. ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!(இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள்)
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 103: இந்தியாவை நேசிக்கிறேன்!



ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன் சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும், விடுதலைப் புலிகள் ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனுமதித்ததன் பேரில், ஆகஸ்ட் 4-இல் அவரைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆரின் உடல்நிலையைப் பார்த்ததும் பதறிப் போனார்கள். அவர் என்ன விஷயம் என்று கேட்டதும், இருவரும் உடன்பாடு பற்றிய தங்களதும், விடுதலைப் புலிகளினதுமான சந்தேகங்களை விவரித்தனர். பிரதமர் ராஜீவ் கூறியதைப் போன்று சொந்தப் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இவ்வொப்பந்தத்தைச் சந்தேகப்படவில்லை என்றும் விளக்கினார்கள். ஆனால் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் ஜெயவர்த்தனா மதித்து நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதையும் அவர்கள் கூறினர். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது: ""திரைப்படத் துறையில் நீங்கள் கொடிகட்டிப் பறந்தீர்கள். உங்களுக்குப் பின்னும் அந்தத் துறையில் பலர் வரலாம். அரசியல் துறையிலும் தமிழகத்திற்கு பல முதலமைச்சர்கள் உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் வரலாம். ஆனால் அந்த முதலமைச்சர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை பெறப் போராடினார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தமிழீழம் அமையக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இதைச் சொல்லவே வந்தேன்'' என்று கூறினேன். ""நான் பேசப் பேச அவர் உணர்ச்சிவசப்பட்டார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால் முடியவில்லை. எனது கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு, தன் கைகளால் நெஞ்சில் தட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் செய்யும்போது அவர் கண்களில் இருந்து நீர் கசிந்தது. எனக்கும் வீரமணிக்கும் கூடக் கண்கள் பனித்தன. அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது முழுமையாக விளங்காவிட்டாலும், ஓரளவு புரிந்தது. பின்னர் சிற்றுண்டி வரவழைத்தார். எங்களுடன் அவரும் அமர்ந்து உண்டார். நிலைமைகளைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் என்ற நிம்மதியில் நாங்கள் திரும்பினோம். இந்த சம்பவத்தை எனது "தமிழீழம் சிவக்கிறது' என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார் நெடுமாறன்(நேர்காணல்: 29.8.1987). ஆகஸ்டு அதே 4-ஆம் தேதியன்று, ராஜீவ் காந்தி அழைப்பினை ஏற்று, சுதுமலை அம்மன் கோயில் திடலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ""யாழ்ப்பாணக் குடா நாட்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பிரவேசித்து இந்தியப் பிரதமரின் அழைப்பின் மீதே என்னை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் நாட்டைக் கடந்து மட்டும் செல்லவில்லை. தம் மண்ணிற்காகத் தமது உயிரை அர்ப்பணித்த 615 தியாகிகளின் உடல்களையும் கடந்தே செல்வதாக நினைக்கிறேன்... என் மனச்சாட்சியை நான் விற்க விரும்பவில்லை. பெங்களூர்மகாநாட்டில் கலந்துகொண்டபோது நான் யாழ் மாவட்ட முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் தனி மனிதன். போராட்டத்தில் எத்தனையோ தியாகிகளை இழந்துவிட்டோம். நான் இறப்பது சாதாரண விஷயம். சயனைட்டை நான் கட்டியபின்பே மற்றவர்களும் கட்டியுள்ளனர். மனச்சாட்சிக்கு விரோதமாக நான் ஒருபோதும் நடக்கப் போவதில்லை. இந்திய அரசு எனக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது மக்களின் பிரதிநிதியாக என்னைக் கருத்தில் கொண்டபடியால்தான். நாம் மக்களுக்குள்ளேயே இணைந்து போராட்டம் நடத்தியதனால்தான் போராட்டம் இந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் வேறு நான் வேறு அல்ல. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்லன். நிம்மதியான வாழ்வு மக்களுக்கு அமையவேண்டும் என்பதே என் ஆசை. இன்று கிடைத்த கெüரவம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த கெüரவமே தவிர, சாதாரண எனக்குக் (பிரபாகரனுக்கு) கிடைத்ததல்ல. இதுவரையில் நான் இந்தியாவினால் இப்படிக் கெüரவமாக அழைக்கப்படவில்லை. இக்கெüரவத்தை தமிழீழ மக்களுக்கும், மற்றைய தியாகிகளுக்கும், இன்னும் களத்தில் உள்ள சக போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். தீர்வு சரியில்லை என்றால் நாம் மக்களை எச்சந்தர்ப்பங்களிலும் கைவிடப்போவதில்லை. எமது போராட்டம் தொடரும்'' என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தில்லியில் நடைபெற்றது என்னவென்பதை ஈழ மக்களுக்குத் தெரிவிப்பது வரலாற்றுக் கடமை என்று பிரபாகரன் உணர்ந்தார். தற்போதுள்ள நிலையை விளக்க கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதில் தெரிவிக்க அவர் விரும்பினார். இந்தக் கூட்டமே அவர் தனது வாழ்நாளில் மேடை ஏறிய முதல் கூட்டமாகும். "இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற பிரபாகரனின் புகழ்வாய்ந்த அந்தப் பேச்சை சென்னைத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரை வருமாறு: ""இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தில்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை தில்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கினோம்'' என்றார், பிரபாகரன். இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் உருவானதால் இரு நாடுகளின் நலன்களும் இதில் அடங்கியிருக்கிறது என்பதையும் தனது உரையில் விளக்கினார். அவர் மேலும் பேசுகையில், ""ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்கியே தீருவோமென இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழி வகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது. ஆனால் அதே சமயம், ஈழத் தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது, எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்பொழுது நாம் என்ன செய்வது?'' என்றார். ஒப்பந்தம் தங்களைப் பாதிப்பது எவ்வாறு என்பது குறித்து அவர் விளக்குகையில், ""இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்னைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்'' என்றார். ஆயுத ஒப்படைப்பால் ஏற்படப் போகும் ஆபத்து குறித்து அவர் விளக்குகையில், ""நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை. இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலிருந்து எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது'' என்றார். அவர் தனது உரையில், இந்தியாவுக்குத் தாங்கள் எதிரிகளல்ல என்றும் விளக்கினார், ""நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூற விரும்புகிறேன்'' என்றார். தொடர்ந்து பேசுகையில், ""இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார். பிரபாகரன் தொடர்ந்து பேசுகையில், ""தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ லட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எனது போராட்ட லட்சியம் மாறப் போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்''. ""தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்'' ""புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று பிரபாகரன் கூறித் தனது உரையை அவர் முடித்தார். உரையாற்றும்போது, பிரபாகரன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். பேச்சும் அவ்வாறே இருந்தது. மக்களும் அதே மனநிலையில் இருந்தனர். லட்சக்கணக்கில் திரண்ட மக்களிடையே இந்திய-இலங்கை ராணுவ அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.நாளை: அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்!

கருத்துக்கள்

தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உரையில் இருந்து அவர்களின் தன்னலமற்றச் செயல்பாடுகளையும் இந்திய அரசின் வஞ்சகச் செயல்பாடுகளையும் நன்கு புரிந்து கொள்ளலாம். அவர் தொலை நோக்கு உணர்வுடன் தெரிவித்தவாறு அந்தப் பாழாய்ப் போன மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தால் ஈழத் தமிழர்களும் அவர்களது நலன்களும வஞ்சிக்கப்பட்டன. இந்நிலை இன்றும் தொடரவே செய்கின்றன. கட்சித் தலைமைகளின் போலியான உரைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் என ஒன்று கூடி மனித நேயர்கள் என வென்று காட்டுவோம்! ஈழத் தமிழர்களின் வெற்றிக்கு வழி வகுப்போம். வெல்க தமிழ் ஈழம்! வாழ்க ஈழ-உலக நட்புறவு!

வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2009 2:41:00 AM

Prabakaran was a true Leader. May his soul rest in peace.

By Vennila
9/11/2009 1:59:00 AM

This clearly shows how much great the great leader prabakaran had been. India had made its biggest blunder by abetting all the atrocities of the sinhala thugs. Its soon going to reap the produce.

By True tamil
9/11/2009 1:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *