திங்கள், 13 ஜூலை, 2009

தலையங்கம்:இது உரிமைக் குரல்!



நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்டால், எங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போகும் அப்பாவி மீனவர்கள், எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேலி இருக்கிறதா, எல்லைக்கோடுதான் இருக்கிறதா?இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது. இப்போதுதான் இலங்கை அரசின் கூற்றுப்படி விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அந்த நாடே சிங்கள அரசின் ஆளுமைக்குள் வந்துவிட்டதே. பிறகும் ஏன், இந்த அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப்பட வேண்டும்?சேது சமுத்திரத் திட்டம் தொடங்கியது முதலே தமிழகக் கடல் எல்லைக்குள்ளும், வெளியேயும் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. வங்காள விரிகுடாவிலிருந்து பெரிய அளவில் மீன்கள் இந்து மகா சமுத்திரப் பகுதிக்குச் சென்று விட்டதாகக் கூறுகிறார்கள். அதனால், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் நாம் குற்றம் காண முடியாது. அதிலும் குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில்தான் அதிகமாக மீன்கள் கிடைப்பதாகத் தெரிகிறது.ஆதாரபூர்வமாகக் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் என்பது தெளிவு. 1974-லும், 1976-லும் இந்திய அரசு சரியான வழிகாட்டுதலைப் பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது என்பதும் உண்மை. ஆனால், அந்த ஒப்பந்தத்திலும்கூட, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடும் உரிமையும், கச்சத்தீவு அந்தோனியார் கோயிலில் திருவிழா நடத்தும் உரிமையும் இந்திய மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.ஒப்பந்தங்கள் என்பது மீறப்படக் கூடாது என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. ஒரு நாட்டின் எல்லையோ, அல்லது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமோ மறுபரிசீலனைக்கும், மறு சீரமைப்புக்கும் உள்பட்டதுதான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும்.மக்மோகன் எல்லைக் கோடையும், அருணாசலப் பிரதேசத்தையும் இந்தியாவின் பகுதியாக சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்றோ இருந்த இஸ்ரேல் என்கிற நாட்டை, மேலை நாடுகள் இரண்டாம் உலகப் போரில் அடைந்த வெற்றியைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கி நிலைநிறுத்த முடிந்த பிறகும், சர்வதேச எல்லை, சர்வதேச ஒப்பந்தம் என்று பேசிக் கொண்டிருப்பது நாட்டு நலனைவிட அயல்நாட்டு சிநேகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகத்தான் இருக்கும்.கச்சத்தீவில் அன்னிய நாடுகள் இராணுவ தளங்களை அமைக்க விடமாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி கூறிவிட்டது என்று இந்திய அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கிறதே, அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி? இதற்கு முன்னால் இந்தக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமைக்கிறோம் என்று இலங்கை சமாதானம் சொல்லியிருக்கும். இப்போது அமைக்கிறதே எதற்காக? நமது மீனவர்களைக் கண்காணிக்கவா? இந்தியாவையே கண்காணிக்கவா?இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் எந்தவோர் அரசும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட முடியாது. இந்தியாவின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் ஒருவர் பதவி ஏற்கவே முடியும். அப்படியே சர்வதேச ஒப்பந்தம் ஏதாவது செய்யப்பட வேண்டுமானாலும்கூட, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், கச்சத்தீவு 1974-ல் தாரை வார்க்கப்பட்டதே அது ஏன், எப்படி என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சி நடத்துவதை விட்டு விட்டு, அதை மீட்பதற்கு வழிகாண்பதுதான் புத்திசாலித்தனம்.கச்சத்தீவை மீட்காமல் போனால், அங்கே இந்தியா தனது உரிமையை நிலைநாட்டாமல் போனால், 1974 ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, அந்தத் தீவின் மீதான இந்திய உரிமை மீண்டும் நிலைநாட்டப்படாமல் போனால், அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே பேராபத்தாக இருக்கும் என்பதை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை அணுகினாலும் சரி; இல்லை, ராஜபட்ச அரசிடம் கண்டிப்புடனும் கறாருடனும் ராஜதந்திரமாகப் பேசி நல்லதொரு முடிவை எட்டினாலும் சரி. கச்சத்தீவை மீட்டே தீர வேண்டும.1974-ல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவால் கச்சத்தீவு விஷயத்தில் குரலெழுப்ப முடிந்ததே தவிர, அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த முடிவைத் தடுக்க முடியவில்லை. இன்றைய நிலைமை அப்படி அல்லவே. 1989 முதல் பல மத்திய அரசுகள் திமுகவின் தயவில் ஆட்சியில் அமர்ந்தும், தமிழகத்தின் உரிமைப் பிரச்னையான கச்சத்தீவைப் பற்றிய கரிசனம் அந்தக் கட்சித் தலைமைக்கு இல்லாமல் போனதன் காரணம்தான் என்ன என்பது புரியவில்லை.எல்லோரும் ஆதரித்தால் கச்சத்தீவு பற்றிய தீர்மானத்தைத் திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார் என்கிறார் முதல்வர் கருணாநிதி. அந்தத் தீர்மானத்தை யார் எதிர்க்கப் போகிறார்கள்? முன்னால் நின்று தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய முதல்வர் மற்றவர்களை முன்நிறுத்தி விட்டுப் பின்னால் இருந்து வழிமொழியலாமா?கட்சி மனமாச்சரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டுக் கச்சத்தீவுக்காக ஒத்த குரலில் குரல் கொடுக்க நாம் தயாராகாவிட்டால், "நாமமிது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்வீர்?'
கருத்துக்கள்

இதில் உள்ள தொடர்கள் ஏற்கெனவே வேறொரு ஆசிரியவுரையில் வந்தனவாகத் தோன்றுகின்றன. எனினும் இப்பொழுதும் பொருத்தமாகத் தோன்றுகின்றன. இனிமேல் விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு வஞ்சகச் செயலில் ஈடுபட முடியாது. என்றாலும் காங். என்றும் கச்சத் தீவை மீட்கும் முயற்சியில் இறங்காது. 'கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை' என்பது பழமொழி. பங்காளிக்குக் கொடுத்த பரிசைத் திருப்பிக் கேட்டால் 'கிணறுவெட்ட பூதம் கிளம்பின கதையாக' வேறு எதுவும் வெளிவந்தால் என்னாவது? எனவே, உங்களின் உரை செவிடன் காதில் ஊதிய சங்கே! எனினும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவை போன்ற விழிப்புணர்வு பெருகுவது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 4:26:00 AM

விடுதலைப் புலிகளை ஒடுக்கிய ஃபொன்சேகாவுக்கு மிக உயரிய பதவி



கொழும்பு, ஜூலை 12: இலங்கையில் விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்த ராணுவத் தளபதி ஜெனரல் சரத் முப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இந்த பதவி உயர்வு ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிப்பதற்காக ராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஃபொன்சேகா. 1990, 1991, 2000 ஆகிய ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையை வெற்றிகரமாக வழிநடத்தி அதிபரின் பாராட்டைப் பெற்றவர்.வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படைகளுக்கு கமாண்டராக உள்ள ஜகத் ஜயசூர்யா, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கடற்படைத் தளபதியாக உள்ள வசந்த கர்ணகோடா, அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய கடற்படை அட்மிரல் திஸôரா சமரசிங்கே, புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள்

இவ்வாறெல்லாம் பதவிகள் அளிக்கா விட்டால் சிங்கள ஆட்சியாளர்களையும் அழித்து விடுவர் என்னும் அச்சத்தால் தரப்படும் பதவி உயர்வுகள். இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 4:11:00 AM
இலாகா பறிப்பு ஏன்?



சென்னை, ஜூலை 12: திமுகவில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் வகித்து வந்த பொதுப்பணித்துறை இலாகாவை திடீரென முதல்வர் கருணாநிதி தன்வசம் எடுத்துக் கொண்டது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் யாரும் நிறைவேற்றுவதில்லை என்று நீண்டநாள்களாகவே மனக்குமுறல் இருந்து வருகிறது. இந்த விஷயத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் கருணாநிதியிடம் நேரில் முறையிட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக பொதுப்பணித்துறை சார்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிகிறது. காங்கிரஸôர் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று திமுக தலைமை கருதுகிறது.இதைத்தொடர்ந்தே, மூத்த அமைச்சர்கள் மீது முதல்வர் கருணாநிதிக்கு சற்று கோபம் இருந்து வந்துள்ளது. அதேபோல, காந்தி மண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியாருக்கு விடப்பட்ட விஷயத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கவேண்டிய தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் மனம் குமுறுகின்றனர்.நாட்டு மக்களால் மதிக்கப்படும் தலைவர் ஒருவரின் மண்டபத்தைப் பொதுப்பணித்துறை பராமரிக்காமல், தனியார்வசம் ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதில் துரைமுருகனுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கருத்து மோதல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.முதல்வர் குடும்பத்துடனும், துணை முதல்வருடனும் நெருக்கமாக இருந்தும், துரைமுருகனின் பொதுப்பணித்துறை இலாகா பறிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கருத்துக்கள்

தினமணியின் கருதுகையெல்லாம் தவறே! இது முதல்வரின் தனி யுரிமை. இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. என்றாலும் துணை முதல்வரைத் தவிர வேறு யாரையும் மூத்த அமைச்சர் என்று கூறினால் அவர்களின் பல்லும் பிடுங்கப்படும் என்ற எச்சரிக்கையும் உள்ளடங்கியுள்ளது. கலைஞர் முதலில் அமைச்சுப் பொறுப்பு ஏற்ற துறை இன்றைய ஆட்சியின் நிறைவின் பொழுதும் கலைஞரையே அடைந்துள்ளது. பொன் கொழிக்கும் இத்துறை பற்றி நன்கு அறிந்த அவர் அதற்கேற்ற வகையில் திறம்படவே செயல்படுவார் எனலாம்.

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:59:00 AM
"ஆட்சியில் பங்கு: சோனியாவிடம் மீண்டும் வலியுறுத்துவோம்'



புதுக்கோட்டை, ஜூலை 12: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் அனுப்பவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். அதனால்தான், பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழக காங்கிரஸôரின் உணர்வுகளை கட்சித் தலைமைக்கு தெரிவிப்பதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற கட்சியினரின் உணர்வை, விரைவில் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பவுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

போய் ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்கள்! தன்னை நம்பியிருந்த ஈழத் தமிழர்களையே கொன்று குவித்த அன்னைக்குத் தெரியாதா யாரை எப்பொழுது ஆட்சியில் அமர்த்துவது என்று!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:46:00 AM

இத்தகைய தீர்மானத்தைத் தேர்தல் அறிவி்ப்பு வரும் வரை அனுப்பிக் கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் அடுத்துக் கூட்டணி வைக்கும் போது எழுதப்படும் ஒப்பந்தத்தில் இக் கோரிக்கையைச் சேர்க்கலாம் அலலது நீக்கலாம். அதனால் ஒரு முடிவு கட்டலாம். காங்.கில் இருக்கின்ற உட் குழுக்கள் போதா என்று இவர்கள் கேட்கும 10 அமைச்சர் பதவிகளை அளித்தால் மேலும் உட்குழுக்ககள் தோன்றாவா? கலைஞர் ஆட்சியின் முதல் பெரும் சாதனை காங்.ஐ ஆட்சியில் சேர்க்காததுதான். அது வேதனையாக மாறாதா? மத்திய காங். என்றாவது தன்னை மீறி மாநிலக் காங். வளர வழி விட்டிருக்கிறதா? பிறகு ஏன் இந்தப் பொல்லா ஆசை? வாரியப் பொறுப்பு போன்றவற்றைக் கூட இவர்களுக்கு அளிக்கக் கூடாது என்றுதானே மத்திய காங். விரும்புகிறது. பிறகு ஏன் இந்த நப்பாசை? 67 வரை தமிழ் நாட்டைக் குட்டிச் சுவராக்கியதுபோல் மீண்டும் ஆக்கப் பேராசையா? தாலின் முதல்வராகும் பொழுது காங்.கிற்கு ஆட்சியில் பங்கு கொடுத்து உட்கட்சிச் சிக்கலைத் தீர்க்கலாம எனக் கலைஞர் எண்ணினால் கூட மத்திய காங்.விடாதே! போய் ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்கள்! தன்னை நம்பியிருந்த ஈழத் தமிழர்களையே கொன்று குவித்த அன்னைக்குத் தெரியாதா

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:45:00 AM

ஞாயிறு, 12 ஜூலை, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 42: நீதிமன்றம் மெüனமானது!



தங்கதுரையின் நீதிமன்ற வாதம் மேலும் தொடர்கிறது - நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம். எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும். இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸôர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா? நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள். சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா? அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும். நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா? இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும். இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே. இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே. தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம். இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே. எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை. ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழம் அகன்று போகட்டும் வறுமையும் அணுவாயுதப் பயமுறுத்தலும். ஒழிக பசியும் பிணியும். ஓங்கட்டும் மனித நேயம். தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம் மெüனமானது.
E
ஞானசுந்தரத்துக்கு உ.வே.சாமிநாத அய்யர் விருது



கோவை, ஜூலை 11: கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த 26-ம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் புதுவை பல்கலைக்கழக கம்பன் இருக்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்துக்கு (படம்) டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருது வழங்கப்பட்டது. விழாவின் துவக்கத்தில், தொழிலதிபர் இயகோகோ சுப்ரமணியம் சிலப்பதிகார மலரை வழங்க, அதை தாயம்மாள் அறவாணன் பெற்றுக் கொண்டார். டாக்டர் உவே.சாமிநாத அய்யர் விருதை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் வழங்க, புதுவை பல்கலைக்கழக கம்பன் இருக்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் பெற்றுக் கொண்டார். இளங்கோ அடிகள் அறக்கட்டளைத் தலைவர் சி.சௌந்திரராஜுக்கு பொற்கிழியை அறவாணன் வழங்கினார். இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத் தலைவர் ஜி.கோபாலன், செயலர் நா.நஞ்சுண்டன், இணைச் செயலர் க.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10.45 முதல் 11 மணி வரை முனைவர் க.முருகேசன் எழுதிய "பூம்புகார் பொற்கொடி' நூலை தாயம்மாள் அறவாணன் வெளியிட, வி.செல்வபதி, சங்கர சீதாராமன் ஆகியோர் அதைப் பெறுகின்றனர்.
தமிழின் வறுமையை தன் வறுமையாக கருதியவர் வ.அய். சுப்பிரமணியம்



தஞ்சாவூர், ஜூலை 11: தமிழின் வறுமையை தன் வறுமையாகக் கருதி, பலரிடம் நிதி கேட்டு தமிழை வளர்த்தவர் வ.அய். சுப்பிரமணியம் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன். மறைந்த துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் அஸ்தி புதைக்கும் நிகழ்ச்சி, பல்கலைக்கழகத்தின் "அம்பலம்' வளாகச் செய்தி மடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: "தமிழில் புலமை பெற்றிருத்தல், வீட்டு வறுமையை வெளிப்படுத்திப் பொருள் கேட்டல், அவமதிப்பு நேரிட்டால் பட்டினிக் கிடத்தல் ஆகிய மூன்று பண்புகளிலும் புலவர்களை அடக்கிவிட முடியும். இந்த மூன்று பண்புகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். அவரது ஆழ்ந்த மொழித் திறனுக்கு எடுத்துக்காட்டாக, வியாசர் எழுதிய மகாபாரதத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா, இல்லையா என்று அவர் கட்டுரை எழுதியதைக் குறிப்பிடலாம். வ.அய். சுப்பிரமணியத்தின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்' என்றார் ம. ராசேந்திரன். மேலும், வ.அய். சுப்பிரமணியம் பெயரில் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் சார்பில் தொடங்கப்படும் அறக்கட்டளைக்கு, ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக வசூலிக்கப்பட்ட ரூ. 2,01,700-க்கான காசோலையை துணைவேந்தரிடம் வழங்கினார் மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம். "வ.அய். சுப்பிரமணியம் சிலையை நிறுவ வேண்டும்': தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான மறைந்த வ.அய். சுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலையை, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தெரிவித்தார். "தமிழறிஞருக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். மற்ற துணைவேந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரே முதன்மையாகத் தெரிகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டவர் அவர். இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு அவரே அடிப்படை. வ.அய். சுப்பிரமணியத்தை நினைவுகூரும் வகையில் பல்கலை. வளாகத்தில் அவரது மார்பளவு சிலையையோ, முழு உருவச் சிலையையோ நிறுவ வேண்டும். சிலை நிறுவும் பணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஈடுபடும்போது, அதற்கு தஞ்சாவூர் தமிழ்தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், "அம்பலம்' அமைப்பின் வளாகச் செய்தி மடலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெளியிட, அதைப் பெறுகிறார் மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி. உடன் துணைவேந்தர் ம. ராசேந்திரன் (இடமிரு
இலால்பகதூர் சாத்திரி எப்படி இறந்தார்?
தினமணி


புது தில்லி, ஜூலை 11: பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றிகரமாக நடத்திவந்த போரை முடிவுக்குக் கொண்டுவர சோவியத் யூனியனின் தாஷ்கென்ட் நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்போதைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி எப்படி இறந்தார் என்ற மர்மத்தை அம்பலப்படுத்துமாறு அவருடைய மகன் சுநீல் சாஸ்திரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்."1966-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி தாஷ்கென்ட் நகரில் தங்கியிருந்த லால் பகதூர் சாஸ்திரி திடீரென இறந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் விஷம் கொடுத்து அவரைக் கொன்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அப்போதே எழுப்பப்பட்டது. ஆனால் மேற்கொண்டு தகவல்கள் ஏதும் தரப்படவில்லை.அவருடைய மரணம் எங்களுக்கும் தேசத்துக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு அப்போது வயது 16. இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை நீராட்டும்போது மார்பிலும் அடிவயிற்றிலும் முதுகிலும் கருநீலத்தில் ஆங்காங்கே புள்ளிகள் இருந்தன. அவை விஷம் கொடுத்து கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் என்றே கருதப்படுகின்றன. அவருடைய உடலை வழக்கமான சவப் பரிசோதனைக்கு உள்படுத்தவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் டாக்டர்களும் அவருடன் சென்ற இந்திய டாக்டர்களும் சாதாரண முறையில் சோதித்தனர். அவர்கள் என்ன அறிக்கை அளித்தார்கள் என்று தெரியவில்லை.சவப் பரிசோதனை நடத்தப்படவில்லையே தவிர அவருடைய சாவு குறித்து டாக்டர்கள் நிச்சயம் ஏதோ அறிக்கை அளித்திருக்கின்றனர். அந்த அறிக்கை மத்திய அரசிடம் இருக்கிறது. ஆனால் அதைத் தர முடியாது, அது ரகசியமானது என்று அரசு கூறிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையை நான் கேட்டிருந்தேன்.அவருடைய சாவு குறித்து பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி அன்றைய பத்திரிகைகளில் பல கட்டுரைகள் வெளியாகின. ஆனால் எந்தவித விசாரணையும் நடத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு முடிவெடுத்துவிட்டது.சாஸ்திரியார் இறப்பதற்கு முன்னால் அவருடைய அறையில் அவருக்குச் சாப்பாடு, பால் ஆகியவற்றைக் கொடுத்து கவனித்துக் கொண்ட பட்லர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் என்ன கூறினார் என்ற தகவலும் வெளியாகவில்லை.அவருடைய மரணம் குறித்து ஆவணங்களில் என்ன இருக்கிறது என்று அரசு வெளியிடுவதால் அதற்குத் தீமை ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அரசு மறுக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் எழுந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அது இருக்கும் என்பதால்தான் அறிக்கை கேட்கிறோம். பிற நாடுகளுடன் நமக்கு இருக்கும் உறவுகள் கெட அது வழி செய்யக்கூடும் என்று அரசு கூறுகிறது. அப்படியானால் எதையோ மறைக்கிறது என்பது தெளிவாகிறது.மாரடைப்பால் இறந்ததாக அரசு இப்போதும் கூறுகிறது, விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று குடும்பத்தாராகிய நாங்கள் சந்தேகிக்கிறோம்' என்றார் சுநீல் சாஸ்திரி.
கருத்துக்கள்

இந்திரா காந்தி தலைமை அமைச்சராக ஆவதற்காகத்தான் எளிமையின் திலகம் இலால்பகதூர் சாத்திரி கொல்லப்பட்டார் என்று அன்றே எழுதப்பட்டது. இன்னும் ஒரு சாரார் அவரது மரணம் இயற்கையானது அல்ல; சதியினால் நிறைவேற்றப்பட்ட கொலைச் செயல் என்றே கருதி வருகின்றனர். ஆனால், இஃது உண்மையாயின் அவ்வாறு பயனடைந்தவர் பரம்பரையினர் அதனை எவ்வாறு வெளிப்படுத்துவர்? வேண்டுமானால் கேட்பவருக்கு அமைச்சர் பதவி அளிக்கலாம். அல்லது அவரையும் இலலாமல் ஆக்கலாம். காங். ஆட்சியில் இல்லாத பொழுது ஏன் இந்தக் கேள்வியைச் சுனில் கேட்கவில்லை? அன்றைக்கு இருந்த சோவியத்து ஒன்றிய அமைப்பு இன்று இல்லாததால் உண்மையான அறிக்கையை வெளியிடுவதால் எந்த உறவும் கெடப்போவதில்லை. ஆனால், அதுவல்ல உண்மை என்றால் உண்மையால் சுடப்படுவோர் அதனை எக்காலமும் வெளியிடப் போவதில்லை. மறைக்கப்பட்ட உண்மைகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2009 3:44:00 AM

Mr Yogaraja is trying to tie the tonsured head and the knee together!

By AKS
7/12/2009 1:55:00 AM

Mr Yogaraja is trying to tie the tonsured head and the knee together!

By AKS
7/12/2009 1:53:00 AM

Dinamani is the only news paper in Tamil Nadu bringing out the true news about tamil eelam. The Hindu and Dinamalar papers are anti humans, they write stories for money, any ruling party can buy these papers, they worst to society. Hindu Ram is man eating animal, he writes all false about Eelam Tamils. Hindu & Dinamalar papers should be boycotted, people should not buy these papers

By yogaraja
7/12/2009 12:42:00 AM
இலங்கை வடக்குப் பகுதி புனரமைப்புக்கு சீன வங்கி நிதியுதவி
தினமணி
First Published : 11 Jul 2009 05:57:31 PM IST

Last Updated : 11 Jul 2009 06:06:10 PM IST


கொழும்பு, ஜூலை 11- இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியின் புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி (எக்ஸிம்) வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகோலகாமாவை இன்று சந்தித்துப் பேசியபோது சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் லீ ரோகு இதைத் தெரிவித்தார். மேலும், வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொள்ளவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த திட்ட அறிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

விரைவாக நிதியுதவி வழங்க முன்வந்துள்ள சீன வங்கிக்கு அமைச்சர் ரோஹித போகோலகாமா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சீன வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் தெற்குப் பகுதியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

கொலைகாரக் கும்பல்கள் பணஉதவி தருவதும் பெறுவதும் தமிழர் நலனுக்கு என்ற போர்வையில் தமிழ்நில அழிப்பு வேலைக்குத்தான் என்பது ஊரறிந்த - பாரறிந்த - செய்தி. தமிழர்கள் வாழும் பகுதி என்ற போ்ர்வையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதியைச் சிங்களக் குடியேற்றமாகச் சீராக அமைக்கத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. இந்தியாவில் மொழி வாரி மாநில்ஙக்ள அமைக்க கோரிக்கை எழுந்த போது எல்லா மாநிலங்களிலும் பன்மொழி பேசுவோரைக் கலந்து வாழச் செய்யும் வகையில் குடியேற்றங்கள் அமைக்கச் சிலர் கருத்து தெரிவித்தாலும், அதனைப் புறந்தள்ளி மொழி வாரி மாநிலங்கள்தாம் அமைக்கப்பட்டன. மாறாகச் சிங்களத்தில் தமிழர் நிலப் பகுதிகள் அனைத்திலும் சிங்களர்களைக் குடியேற்றச் செய்து, தமிழரர்களை வதை முகாம்களிலேயே வைத்திருந்து சிங்கள நாடாக ஆக்கும் சதியில் ஈடுபடுவதற்கே இந்தியா சீனா முதலிய நாடுகளின் நிதியுதவிகள்.

காலம் விரவில மாறும்! ஞாலம் ஈழம் போற்றும்! பன்னாட்டு அவையில் ஈழம உறுப்பு நாடாக அமையும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2009 3:27:00 AM

Dinamani is the only news paper in Tamil Nadu bringing out the true news about tamil eelam. The Hindu and Dinamalar papers are anti humans, they write stories for money, any ruling party can buy these papers, they worst to society. Hindu Ram is man eating animal, he writes all false about Eelam Tamils. Hindu & Dinamalar papers should be boycotted, people should not buy these papers.

By yogaraja
7/12/2009 12:39:00 AM

Srlanka is football ground for China and India and Sri Lankan tamils as football. India has offered 500 croe and now China want to help the North. If I want say in actor Veerappa's word, Sariyana Poort! ha, ha, ha

By Ragu
7/11/2009 10:40:00 PM

Kathir is right Srilankan Tamil not need any stupid aid from anyone we can lookafter our self..may some country need this thier own country to their own people than Srilanka Wikamatuge you are right your govenment more than enoug robbery from tamils and world Seetha

By Seetha
7/11/2009 10:35:00 PM

Kathir is right Srilankan Tamil not need any stupid aid from anyone we can lookafter our self..may some country need this thier own country to their own people than Srilanka Wikamatuge you are right your govenment more than enoug robbery from tamils and world Seetha

By Seetha
7/11/2009 10:35:00 PM

China is a rogue country. They occupied Taiwan, Tibet, etc forcefully. No one will forget Tinamen 1989. Now they join hands with the Tyrant rajapakse. We got to get rid of these people from our Tamil homeland. Hindians will not help Tamils because they have closer links with sinhalese who migrated from bihar centuries ago. hindians are racially closer to sinhalese than to Tamils.

By Raja
7/11/2009 7:18:00 PM

Thank you Dinamani for writing the truth that the NAZI work done by Srilanka and India.. யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல் [சனிக்கிழமை, 11 யூலை 2009, 02:47 பி.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்] சிறிலங்கா அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கின்றது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்கு தூதுவர்களாகச் செயற்படுகிறார்கள்? என 'தினமணி' நாளேடு சாடியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டு மந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் இரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால

By .S.M.Subaluxmy Vasan- Teacher
7/11/2009 6:44:00 PM

We, Srilankan Now powerfull country, We don't need begging indian support

By Wikramatunge
7/11/2009 6:42:00 PM

Look, Who is the enemy for India, Sinhalese or Tamil? Srilanka is playing a multiple game. because India can not stop that. Srilankan government got the money from India, Pakistan, China, Russia, Iran ,Libiya, Isreal, UK, US. So What will happen? If India says anything to Srilanka, DO YOU THINK, SRILANKA WILL LISTEN THAT? never and ever

By karikaalan
7/11/2009 6:39:00 PM

Nobody Need to rehabilitate in tamils land. They(tamils) have enough power. JUST PULL OUT THE SINHALA ARMY from our land. China wants to give the money to sinhala government under the tamil name. that's it

By Kathir
7/11/2009 6:18:00 PM